Posts

Showing posts from August, 2011

குறளி @ குட்டிச் சாத்தான்

Image
1970களில் சின்னமனூரில் கிருஷ்ணய்யர் ரொம்பப் பிரபலம். கண் கட்டு வித்தையில் கை தேர்ந்தவர். அவர் செய்யும் மந்திர தந்திர வித்தைகளைப் பார்க்க எப்போதுமே குழந்தைகள் பட்டாளம் அவரைச் சூழ்ந்திருக்கும். குழந்தைகளிடம் அவர் வீட்டுக்கு வழி கேட்டால், அவரது வீடு வரை கொண்டுவந்து விட்டுவிட்டுப் போவார்கள். அவருக்கும் அவர் மனைவி கோமளம்மாளுக்கும் குழந்தைகள் என்றால் அத்தனை பிரியம். அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லததும் அந்தப் பிரியத்திற்க்கு காரணம். சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வசதி இல்லையென்றாலும், சந்தோஷமாகவே வாழ்ந்து வந்தனர். பெரும்பாலும் இந்த மாதிரி அருந்தொழில் (கண் கட்டு வித்தை, சித்து வேலை, மந்திர தந்திர வேலைகள்) செய்பவர்களிடத்து, வசதி குறைவாகவே இருக்கும். அவரது எழுதிய புத்தகங்கள் அவருக்கு நல்ல வருமானத்தை ஈட்டித் தந்தன. அவர்கள் இரண்டு பேருக்கு அந்த வருமானமே போதுமானதாக இருந்தது. அவரது "பீதாம்பர ஜாலத் திரட்டு" புத்தகம் ரொம்பப் பிரபலம். அதில், ஆயிரம் கண்கட்டு வித்தைகள் பற்றியும், அதைச் செய்யும் முறைகள் பற்றியும் விளக்கியிருப்பார். செக்கச் சிவந்த, தீயில் சுட்ட இரும்பைக் கையில் பிடிப்பது, தீக்