Posts

Showing posts with the label சொந்த சரக்கு

முப்பத்து மூவாயிரம் நன்றிகள்

Image
முப்பது வருடங்களைக்  கடந்து நிற்கும் இந்த தருணத்தில், சற்றே பின்னோக்கி நான் கடந்து வந்த பாதையைப் பார்க்கிறேன். வலி, விரக்தி, மகிழ்ச்சி, வறுமை, கல்வி, பள்ளி, கல்லூரி, சந்தோஷம், அழுகை, வேதனை, கோபம், சண்டை, உறவுகள், நண்பர்கள்..... இப்படிப் பல விஷயங்கள் மனக்கண்ணில் விரிகிறது. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.     பலருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நன்றியும் நீதியைப் போலத்தான். Justice Delayed is Justice Denied என்பது போல நன்றியையும் உடனுக்குடன் தெரிவித்துவிடவேண்டும். நீங்கள் போன மாதம் செய்த உதவிக்கு நன்றி என்று சொன்னால் எப்படி இருக்குமென்று யோசித்துப் பாருங்கள். இவ்வளவு சொல்கிற நானே, காலம் தாழ்த்தித் தான் நன்றி சொல்கிறேன். நாட்கள், மாதங்கள் இல்லை. சில பல வருடங்கள் கழித்து நன்றி சொல்கிறேன். முதலாவது நன்றி இறைவனுக்கு. நான் ஒன்றும் பெரிதாய் சாதித்துவிடவில்லை என்றாலும், வாழ்வில் இந்த இடத்தை அடைய உறுதுணையாய் இருந்த என் அப்பா, அம்மாவுக்கு நன்றிகள். ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக்கேட்ட தாய். மகன்தந்த...

ருசியான சொற்பொழிவு

Image
சொற்பொழிவு.  அதிலும் ஆன்மீக சொற்பொழிவு. பேசப்போகிறவர் பன்மொழி வித்தகர், பல மொழிகளில் புத்தகங்கள் எழுதியுள்ளார், நல்லவர், வல்லவர் எனும்படி சொற்பொழிவாற்ற வந்திருந்தவரை அறிமுகம் செய்து வைத்தார் மேடையில் பேசியவர். பன்மொழி வித்தகர் என்றவுடனே எனக்கு லேசாக அச்சம். உடன் வந்திருந்த நண்பரிடம், "அன்புல்ல தமிலு மக்கலே" என்று ஏதாவது ஆரம்பிக்கப் போகிறார் என்று சொன்னேன். ஆனால் நல்ல தமிழ் உச்சரிப்புடன் அவர் பேச ஆரம்பித்தவுடன், நண்பர் எனது மூக்கை தேடிக்கொண்டிருந்தார் மொத்தம் 7 நாட்கள் நடைபெறும் அந்த சொற்பொழிவின் முதல் நாள் அதுவும் 10 நிமிடங்கள் மட்டுமே அவரது பேச்சை கேட்க முடிந்தது (காரணம் பின்னர் சொல்கிறேன்). அந்த 10 நிமிட பேச்சில் இருந்தே அவர் ஓரளவு விஷயம் தெரிந்தவர் என தெரிந்துகொண்டேன். நேற்று மீண்டும் சென்றிருந்தேன். "செவிக்குணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்"   சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் இரண்டையும் செவ்வனே செய்திருந்தனர். அங்கே கூடியிருந்த அனைவருக்கும் உணவு பார்சல் செய்யப்பட்டு தயார் நிலையிலிருந்தது. காரில் வீட்டிற்கு...

நைனா மாமா

பெரியவர்கள் தான் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவார்கள். அது பிறந்தவுடன் நடக்கும் நிகழ்வு. குழந்தைகள் பேச ஆரம்பிக்கும்பொழுது, மழலை மொழியில் பெரியவர்களுக்கு சூட்டும் பெயர்கள் வித்தியாசமானவை. விசித்திரமானவை. அப்படி என் மகன் ஒரு நண்பருக்கு சூட்டிய பெயர் தன் நைனா மாமா. அயுண், அமினு இப்படி அந்தப் பட்டியல் நீளும். நானும் கூட என் தாத்தாவுக்கு இப்படி விசித்திரமான பெயர் சூட்டியுள்ளேன். வெங்கடவரதன் எனும் அவரது பெயர் என் வாயில் நுழையாத காரணத்தால் வந்தது  "வெங்கடேச குமார ஜலபதி". சில பல வருடங்களுக்கு முன் உறவினர் ஒருவர் அவரது குழந்தைக்கு சூட்டவிருந்த பெயர் "ஜெய வீர ஆஞ்சநேயர்". ABT-யில் ஆஞ்சநேயருக்கு பதில் இவர் மலையை தூக்க நேர்ந்திருக்கும். நல்லவேளையாக அப்படி எதுவும் நிகழவில்லை. அவரது உருவத்திற்கேற்ற அழகான பெயர் சூட்டப்பெற்றார். நைனா மாமாவின் குழந்தைகள் அவரை நைனா என்று அழைப்பார்கள். ஆதித்யாவும் அப்படியே அழைக்க ஆரம்பித்து பின்னர் மாமா அதனுடன் ஒட்டிகொண்டது. நண்பர் ஒருவரது மகள், மழலை மொழியில் என்னை "பிசன்னா மாமா" என்று தான் விளிப்பாள். இது பரவாயில்லை. அவரது ...

குறளி @ குட்டிச் சாத்தான்

Image
1970களில் சின்னமனூரில் கிருஷ்ணய்யர் ரொம்பப் பிரபலம். கண் கட்டு வித்தையில் கை தேர்ந்தவர். அவர் செய்யும் மந்திர தந்திர வித்தைகளைப் பார்க்க எப்போதுமே குழந்தைகள் பட்டாளம் அவரைச் சூழ்ந்திருக்கும். குழந்தைகளிடம் அவர் வீட்டுக்கு வழி கேட்டால், அவரது வீடு வரை கொண்டுவந்து விட்டுவிட்டுப் போவார்கள். அவருக்கும் அவர் மனைவி கோமளம்மாளுக்கும் குழந்தைகள் என்றால் அத்தனை பிரியம். அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லததும் அந்தப் பிரியத்திற்க்கு காரணம். சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வசதி இல்லையென்றாலும், சந்தோஷமாகவே வாழ்ந்து வந்தனர். பெரும்பாலும் இந்த மாதிரி அருந்தொழில் (கண் கட்டு வித்தை, சித்து வேலை, மந்திர தந்திர வேலைகள்) செய்பவர்களிடத்து, வசதி குறைவாகவே இருக்கும். அவரது எழுதிய புத்தகங்கள் அவருக்கு நல்ல வருமானத்தை ஈட்டித் தந்தன. அவர்கள் இரண்டு பேருக்கு அந்த வருமானமே போதுமானதாக இருந்தது. அவரது "பீதாம்பர ஜாலத் திரட்டு" புத்தகம் ரொம்பப் பிரபலம். அதில், ஆயிரம் கண்கட்டு வித்தைகள் பற்றியும், அதைச் செய்யும் முறைகள் பற்றியும் விளக்கியிருப்பார். செக்கச் சிவந்த, தீயில் சுட்ட இரும்பைக் கையில் பிடிப்பது, தீக் ...

சிதைவு

சக்தி மட்டும் தான்னு கிடையாது. ஹோட்டல்ல வேலை செய்யற எல்லார் கிட்டயும் நல்லா பேசுவேன். பொதுவாவே ஹோட்டல்ல வேலை செய்யறவங்கன்னா நிறைய பேருக்கு ஒரு இளக்காரமான ஒரு பார்வை தான் இருக்கும். ஹோட்டல்ல வெய்ட்டர் தானே, இலை எடுக்கறவன் தானே என்கிற மாதிரியான பார்வை. ஹோட்டல்ல வேலை செய்தவன்கிற முறையில அவங்களோட வேலை எவ்வளவு கஷ்டம்ன்னு எனக்கு தெரியும். நாம அவங்களை வெளியில இருந்து பாக்குறதுக்கு ஒரு யுனிபார்ம், கையில மெனு கார்ட், புன்னகையுடன் கூடிய உபசரிப்புன்னு தான். உள்ளுக்குள்ள எத்தனை விதமான மன உளைச்சல்கள், சொந்தப் பிரச்சனைகள், இது தவிர வேலை செய்யற இடத்துல இருக்கும் பிரச்சனைகள்-ன்னு அவங்க வாழ்கை வேற துறைகளில் வேலை செய்யும் சாமானியனை விடவும் கொஞ்சம் கஷ்டம் தான். நீங்க குடும்பத்தோட ஹோட்டலுக்கு போறீங்க. ஒரு டேபிள் காலி ஆகுது. நீங்க, உங்க மனைவி, பள்ளி செல்லும் வயதிலுள்ள உங்க குழந்தைங்கன்னு எல்லாரும் சீட்ல உக்காந்த அப்பறம், ஒரு சின்னப் பையன் வந்து இலை எடுத்துட்டு டேபிளை துடைச்சு க்ளீன் பண்ணுவான். தன் வயசுப் பசங்க எல்லாம் அவங்கவங்க அப்பா அம்மாவோட, குடும்பத்தோட சாப்பிட ஹோட்டலுக்கு வந்திருக்காங்க. ஆனா இவனோ இலை...

சப்பாத்தி

இளநிலைக் கல்லூரி நாட்களில் எனது டிபன் பாக்ஸ் மிகப் பிரபலம். எனது அம்மா செய்து தரும் சப்பாத்திகளுக்காக. சப்பாத்தி அத்தனை மெதுவாக இருக்கும். அதற்கு சைட்-டிஷ் பெரும்பாலும் உருளைக் கிழங்கு குருமாவக  இருக்கும். சாப்பிட்ட பிறகு 2 - 3 மணி நேரமாவது அந்தக் குருமா வாசனை கையில் இருக்கும். சப்பாத்தி கொண்டு செல்லும் நாட்களில் அதை நான் சாப்பிட்டதாக எனக்கு நினைவேயில்லை. சக மாணவர்களின் டப்பாக்களை லவட்ட ஒரு குழுவே இருக்கும். இதன் தலைவர் விக்கி என்கிற விக்னேஷ். பிரேம், சண்முகம், முத்துராஜா, ராஜாக்கண்ணு, ஆறுமுகம், ஜெயபாலன், பாரி இவர்களெல்லாம் குழுவின் நிரந்தர உறுப்பினர்கள். சிலர் அவ்வப்போது மட்டும் உறுப்பினராவார்கள். 3வது / 4வது ஹவரின்போதே அவர்கள் கட்சிப் பணி யை ஆரம்பித்து விடுவார்கள். முதலில் மாட்டுவது பிரசாத்தின் டப்பாவாகத் தானிருக்கும். அவன் தினமும் முட்டை கொண்டு வருவான். இது அவனுடன் பள்ளியில் படித்த விக்கிக்கு தெரியும். அதனால் அவனது முதல் குறியே பிரசாத்தின் டப்பா தான். அடுத்ததாக மாட்டுவது மதிவாணனின் டப்பா. அவன் கொண்டுவரும் ஆனியன் ரைஸ், எனது சப்பாத்தியைப் போல அத்தனை பிரபலம். ஆனியன் ரைஸ் கொண்டு...

சித்திரைப் பௌர்ணமி - 2

Image
பக்கத்து ஊர்ல, 3 நாள் திருவிழா நடத்துவாங்க. இங்க உற்சவரும் மூலவரும் வேற வேற கோவில்ல இருப்பாங்க. உற்சவர் மட்டும் தான் ஊருக்குள்ள இருப்பார். மூலவர் ஊரைவிட்டு வெளியில தனியா தோப்புக்குள்ள இருப்பார். முதல் நாள் குதிரை வாகனத்தில் சாமி வீதியுலா. ரெண்டாவது நாள், பெருமாள் ரெண்டு அம்பாளுடன் சப்பரத்தில் வீதியுலா. மூன்றாவது நாள் மஞ்சள் நீராட்டு. ஊரே களைகட்டும். ஹைலைட்டே 2 வது நாள் நடக்கும் கரகாட்டம் தான். எனவ ஊர்லருந்து மட்டுமில்லாம அக்கம் பக்கத்தில இருக்குற ஊர்லருந்தெல்லாம் அந்த ஊருக்கு ஆளுங்க வருவாங்க கரகாட்டம் பாக்க. தாய்க்குலங்கள், தந்தைக்குலங்கள் தொடங்கி ரத்தத்தின் ரத்தங்கள், உடன்பிறப்புகள் உள்பட பட்டாணி திங்கிற சிறுசுலருந்து பல்லுப்போன பெருசு வரைக்கும், கோவில் பக்கத்தில தான் கூடியிருப்பாங்க. போலீஸ்காரங்க எல்லாம் வந்திருப்பாங்க. அட, கரகாட்டம் பாக்க இல்லைங்க. திருவிழா பந்தோபஸ்துக்கு. அந்த ஊர்ல மொத்தம் 10 கும்பு. கும்புன்ன ஒவ்வொரு சமூகத்தை சேந்தவங்களும் ஒவ்வொரு கும்பு. நாயக்கர், பிள்ளைமார், கள்ளர், மறவர், செட்டியார் இப்படி 10 கும்புகள் உண்டு. ஒவ்வொரு கும்புக்கும் ஒவ்வொரு தலைவர், ஒவ...

சித்திரைப் பௌர்ணமி

Image
"பச்சைப் பட்டு உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கினார்". சித்திரைப் பௌர்ணமி-ன்ன உடனே நிறைய பேருக்கு ஞாபகத்துக்கு வர விஷயம் இதுவாகத் தானிருக்கும். ஆத்தைக்(ஆறு) கண்டதுமில்லை, அழகரை சேவிச்சதுமில்லை-ன்னு சொல்றது யாருக்கு பொருந்துமோ இல்லையோ, எங்க குடும்பத்துக்கு பொருந்தும். இத்தனைக்கும் எங்க ஊர்லருந்து மதுரை ஒன்னும் ரொம்ப தூரமெல்லாம் கிடையாது. அப்பறம் ஏனிந்தத் தாமதம்? யார் செய்த குற்றம்-ன்னு எல்லாம் யோசிக்கவே வேண்டாம். மதுரைக்கு போய் பாத்ததில்லை-ன்னு சொன்னனே தவிர, அழகர் ஆற்றில் இறங்குறதை பாத்ததேயில்லை-ன்னு சொல்லலை.(நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்). எங்க ஊர்லயே, எங்க கோவில்லயே அந்த நிகழ்ச்சி அதே நாளில், அதே நேரத்தில் நடக்கும். அதனால மதுரைக்கு போகவேண்டிய அவசியமில்லாம போச்சு. அதுவும் மதுரையில 1 குதிரை தான். 1 அழகர் தான். ஆனா எங்க ஊர்ல, 2 குதிரை. 2 அழகர். எப்படின்னு கேக்கறீங்களா? அதைச் சொல்லத்தானே இத்தனை பில்டப்பு... எங்க ஊர்லயும், பக்கத்துக்கு ஊர்லயும், வரதராஜ பெருமாள் கோவில் இருக்கு. ரெண்டு கோவிலுக்கும், என் தாத்தாவோட தாத்தா காலத்துல இருந்து நாங்க தான் கைங்கர்யம் & டிரஸ்ட்டி...

சைக்கிள்

Image
சின்னப் பசங்க எல்லாருக்கும் சைக்கிள் ஓட்டறதுன்னா ரொம்பவே புடிக்கும். எனக்கும் தான். எந்த வயசில கத்துக்க ஆரம்பிச்சேன்னு சரியா ஞாபகமில்ல. ஆனா ஆறாவது படிக்கும்போது ஒரு லீவு நாள், சனிக்கிழமைன்னு நினைக்கறேன், கால்வண்டி (சின்ன சைக்கிள்) 2 மணி நேர வாடகைக்கு எடுத்து சுத்திதிட்டு கடையில விட நேரமாயிடுச்சுன்னு வேகமா ஓட்டினேன். அப்போ செயின் கழண்டு போச்சு. பெடல் கிழிச்சு கால்ல காயம் ஆச்சு. அது மட்டும் இன்னும் ஞாபகம் இருக்கு. தழும்பா. அப்புறம் கொஞ்ச நாளைக்கெல்லாம் பெரிய சைக்கிள் ஓட்ட ஆரம்பிச்சாச்சு. வீட்லயே அப்பாவோட ராலே (Raleigh. ராலே-வை நெல்லைத் தெலுங்கென்று நினைத்துக் கொண்டால் நிர்வாகம் பொறுப்பல்ல) சைக்கிள் இருக்கும். ஸ்டாண்ட் போட்டபடி கொஞ்ச நேரம் ஓட்டுவேன். அப்பறம் இறங்கி வந்திடுவேன். ஏன்னா, சைக்கிள் பரண் மேல இருந்துச்சு. அது பரண் மேல போனதுக்கும் ஒரு கதை இருக்கு. அப்போல்லாம் பெரிய சைக்கிள்-ல ரெண்டு பக்கமும் கால் போட்டு ஓட்ட தெரியாது. பாருக்கு நடுவில கால் (குறுக்கு பெடல் / குரங்கு பெடல்) போட்டு தான் ஓட்டத் தெரியும். அப்படி ஒட்டும்போதே ரேஸ். பெரிய சாம்பியன்ஷிப் ரேஸ்-ல்லாம் கிடையாது. தெ...

பிசிபேளாபாத்

இந்த வெள்ளி கிழமையும் எப்போதும் போலவே 8.30 க்கு ஆரம்பித்து 8.50 க்கு விடிந்தது. மிக சாதாரண வெள்ளிக்கிழமை / விடுமுறை நாளாகவே பட்டது எனக்கு. ஆனால் தங்கமணி அப்படியொரு முடிவெடுத்தபோது தான் புரிந்தது, என் நினைப்பு எவ்வளவு தவறானதென்று. மதிய உணவிற்கு பிசிபேளாபாத் பண்ணப் போவதாக சொன்னவுடன் எனக்கு புரிந்துவிட்டது, இன்னிக்கு என்னை சோதித்து பார்க்க முடிவெடுத்தாச்சுன்னு. பெரும்பாலான கணவர்களை போல, நானும் புது பொண்டாட்டியின் சமையலுக்கு பரிசோதனை கூடத்து "சிங்கம்" தான். முந்தைய நாள் ஹோட்டலுக்கு கூட்டிப் போகாததன் விளைவு இப்படி மோசமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொள்ளும். என் மனைவி சமைத்து. ஆனாலும் அவள் ரொம்ப சமத்து (அடுத்த வேளைக்குஅந்த பிசிபேளாபாத் தும் கிடைக்காம போயிடுமே!!!) சரி. எவளவோ பண்ணிட்டோம். இதை பண்ண மாட்டோமா!!! என்றெண்ணி மனதை திடப்படுத்திக் கொண்டேன். கிச்சனில் காய்கறி, பாத்திரம், இன்னபிற என எல்லாத்தையும் தயார் செய்துவிட்டு, நேராக வந்து 'லேப்டாப்'பிக் கொண்டிருந்த என்னிடமிருந்து அதை பாசமாக பறித்தார் தங்கமணி. எதுக்குன்னு க...

ஹாஸ்டல் நாட்கள்

Image

கையெழுத்தால் வந்த பிரச்சனை - 2

ரேங்க் கார்ட் அது தான் அடுத்த பிரச்சனையே. 2 சப்ஜெக்ட் அவுட். காலேஜா இருந்தா, அரியர்.. அடுத்த செமஸ்டர் கிளியர் பண்ணிடுவேன்-னு சொல்லி தப்பிக்கலாம். ஸ்கூல்-ல ம்ஹ்ம்.. சரி மத்த சப்ஜெக்ட்-லயாவது நல்ல மார்க் வாங்கியிருக்கோமா?? அதுவும் இல்லை. சரி.. தலையே போனாலும் தன்மானத்தை விடக்கூடாது-ன்னு வீட்ல விஷயத்தை சொல்லிட்டேன். அம்மா செம மூட் அவுட். அப்பா வீட்டுக்கு வந்தவுடனே சொல்லிட்டாங்க. அப்பாவும் கடமை தவறாம என்னைப் பின்னிட்டாரு. அடுத்த பரீட்சை-ல நல்ல மார்க் வாங்குவேன்-னு சொன்னேன். அப்பறம்தான் விட்டாரு. அப்போ தெரியல. இனி வரப்போற எல்லா exam-கும் இப்படித்தான் அடிக்கப் போறாரு.. நானும் இப்படித்தான் சொல்லப்போறேன்-னு.. விதி வலியது. அடுத்த ஒரே மாசத்துல midterm. இந்த தடவை சொன்ன சொல்லக் காப்பாத்தணும்-னு முடிவு பண்ணி வெறிகொண்டு படிக்க ஆரம்பிச்சேன். பரீட்சை முடிஞ்சு ரிசல்ட் வந்துச்சு. ரஜினி ஒரே பாட்டுல பெரிய ஆளா வர மாதிரி இங்க நீங்க கற்பனை பண்ணினால், நிர்வாகம் பொறுப்பல்ல. இந்த தடவை 3 சப்ஜெக்ட் அவுட் (என்ன கொடுமை சரவணன்). சும்மா விடுவாங்களா ராமதிலகம்.. (போன ஜென்மத்துப் புண்ணியத்தைப் பாத்து கடவுள...

பிரசன்னாவின் பிரச்சனைகள் - 1

என்னோட பிளாக்-கையும் மதிச்சுப் பாக்க வந்த உங்களுக்கு நன்றி  என்னடா பிரசன்னா-பிரச்சனை-ன்னு எழுதிருக்கானே, இவனுக்கு அப்படி என்ன பிரச்சனை-னு நினைக்கிறீங்களா? "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்" ரேஞ்சுக்கு பிரச்சனை இருக்கு பாஸ். ஆனா நாம எல்லாம் பிரச்னையை போர்வையா போத்திட்டு தூங்குவோம்-ல (ஒரு போர்வை வாங்க துப்பு இல்லையடா உனக்கு-னு நீங்க மனசுக்குள்ள நினைக்கறது எனக்கே சத்தமா கேக்குது. ஆனா மேட்டர் கோர்வையா வருது பாருங்க) நான் பிறக்கும் முன்னமே, ஆன் குழந்தை தான் பிறக்கும்-னு கணிச்சு பிரசன்ன வரதன் தான் பேரு-ன்னும் முடிவு பண்ணிட்டாங்க. வேற யாரு.. எங்கப்பா அம்மா தான். பட் அந்த டீலிங் எனக்குப் புடிச்சிருக்கு. எங்கம்மாவுக்கு சீமந்தம் ஏற்பாடு பண்ணப்ப தான் முதல் பிரச்சனை ஆரம்பம். எங்கப்பா கூடப்பிறந்த பெரியப்பா பெரியப்பா-னு 2 பேரு (எங்கப்பாவுக்கு 2 அண்ணன்) சீமந்த செலவை நாங்க ஏத்துக்க முடியாதுன்னு பிரச்சனை. அப்பல்லாம் எல்லாரும் கூட்டுப் பொரியல் குடும்பமா இருந்தாங்களாம். யாருன்னு கேக்கறீங்களா.. தாத்தா, பெரியப்பா 1 பெரியம்மா 1, அவங்க 3 பசங்க (லேட்டர் என்ட்ரி 2 ஆக மொத்தம் 5), பெரியப...