சைக்கிள்
சின்னப் பசங்க எல்லாருக்கும் சைக்கிள் ஓட்டறதுன்னா ரொம்பவே புடிக்கும். எனக்கும் தான். எந்த வயசில கத்துக்க ஆரம்பிச்சேன்னு சரியா ஞாபகமில்ல. ஆனா ஆறாவது படிக்கும்போது ஒரு லீவு நாள், சனிக்கிழமைன்னு நினைக்கறேன், கால்வண்டி (சின்ன சைக்கிள்) 2 மணி நேர வாடகைக்கு எடுத்து சுத்திதிட்டு கடையில விட நேரமாயிடுச்சுன்னு வேகமா ஓட்டினேன். அப்போ செயின் கழண்டு போச்சு. பெடல் கிழிச்சு கால்ல காயம் ஆச்சு. அது மட்டும் இன்னும் ஞாபகம் இருக்கு. தழும்பா.
அப்புறம் கொஞ்ச நாளைக்கெல்லாம் பெரிய சைக்கிள் ஓட்ட ஆரம்பிச்சாச்சு. வீட்லயே அப்பாவோட ராலே (Raleigh. ராலே-வை நெல்லைத் தெலுங்கென்று நினைத்துக் கொண்டால் நிர்வாகம் பொறுப்பல்ல) சைக்கிள் இருக்கும். ஸ்டாண்ட் போட்டபடி கொஞ்ச நேரம் ஓட்டுவேன். அப்பறம் இறங்கி வந்திடுவேன். ஏன்னா, சைக்கிள் பரண் மேல இருந்துச்சு. அது பரண் மேல போனதுக்கும் ஒரு கதை இருக்கு.
அப்போல்லாம் பெரிய சைக்கிள்-ல ரெண்டு பக்கமும் கால் போட்டு ஓட்ட தெரியாது. பாருக்கு நடுவில கால் (குறுக்கு பெடல் / குரங்கு பெடல்) போட்டு தான் ஓட்டத் தெரியும். அப்படி ஒட்டும்போதே ரேஸ். பெரிய சாம்பியன்ஷிப் ரேஸ்-ல்லாம் கிடையாது. தெருப் பசங்களோட தான் ரேஸ். எல்லாரும் ஒன்ன தான் ஓட்டிட்டு இருப்போம். திடிர்னு ஒருத்தன் மட்டும் வேகமா எங்களை முந்திட்டு போய்டுவான். வேகமா போன சைக்கிள் மேல நம்ம சைக்கிளுக்கு ஒரு 'லவ்' வந்திடும். உடனே வேகம் எடுக்கும்.
இப்படித்தான் ஒரு நாள் முன்னாடி போன சைக்கிள் மேல லவ் வந்த என் சைக்கிள், அதை துரத்தி பிடிக்க வேகமா போயிட்டு இருந்துச்சு. நான் சும்மா ஹேண்டில்பாரை புடிசுகிட்டு, பெடலை முன்னாடியும் பின்னாடியும் காலால தள்ளிக்கிட்டு இருந்தேன். சத்தியமா வேற ஒன்னுமே பண்ணலை.
முன்னாடி போயிட்டு இருந்த சைக்கிளோட சக்கரம் ரோட்ல கிடந்த பெரிய கல் மேல ஏறி இறங்கினதுல ஹேண்டில் பார் பேலன்சை விட்டுப்புட்டான் அந்த சைக்கிளோட பைலட். கீழ விழுந்தன்னு சொல்லித்தான் தெரியணுமா? அவனை பாலோ பண்ணிட்டு வந்த நம்ம சைக்கிள் அவனோட கழுத்தை பாத்து போயிட்டிருக்கு. டக்குன்னு சுதாரிச்சு ஹேண்டில் பாரை இடது பக்கமா திருப்பி அவனை டன்லப் மோட்சத்தில் இருந்து காப்பாத்திட்டேன். அந்த சமயம் பாத்து கடைக்கு வந்த பக்கத்து வீட்டுக்காரர் நடந்த சம்பவம் எல்லாத்தையும் ரெட் ஒன் கேமரால ரெக்கார்ட் பண்ற மாதிரி ரெட்டினால (Retina) ரெக்கார்ட் பண்ணிட்டார்.
கடைக்கு போயிட்டு நேரா அவர் வீட்டுக்கு போகாம எங்க வீட்டுக்கு வந்து அவர் பாத்தா படத்தை அப்படியே விமர்சனம் பண்ணிட்டார். விகடன்ல போட்டிருந்தா 85/100 கிடைச்சிருக்கும். என் பெருமையை கேட்டு புளகாங்கிதப்பட்டு எங்கம்மா இனிமேல் இவனுக்கு சைக்கிள் வேண்டாம்-ன்னு சொல்ல அதை அப்படியே எங்கப்பா வழிமொழிந்தார். இப்படியாக சைக்கிள் பரணுக்குச் சென்றது.
கொஞ்ச நாள் கழிச்சு, கெஞ்சிக் கூத்தாடி, சைக்கிளை திரும்ப இறக்கி குடுத்தார் எங்கப்பா. ஆனால், ரொம்ப நாள் ஓட்டாம இருந்ததால டயர், ட்யூப் எல்லாம் போச்சு. இன்னும் கொஞ்சம் வேலை வேற பாக்க வேண்டியிருந்தது. அப்பாவோட ப்ரெண்டு குணசீலன்னு ஒருத்தர் சைக்கிள் கடை வெச்சிருந்தார். மாதா சைக்கிள் ஸ்டோர்ன்னு பேரு. அங்கதான் எப்பவும் சைக்கிள் ரிப்பேர் பண்ணுவாராம் எங்கப்பா. அங்கயே ரிப்பேருக்கு குடுத்து வாங்கலாம்னு சொன்னார். ஒரு மாசம் கழிச்சு ஒருநாள் ஸ்கூலுக்கு போயிட்டு வந்து படிச்சுட்டு இருந்தப்போ திடிர்னு சைக்கிள் பெல் சத்தம் கேட்டது. வீதியில யாரோ அடிக்கறாங்கன்னு இருந்துட்டேன். ரெண்டாவது தடவை கேட்டது வீட்டுக்குள்ளயே இருந்து. பாத்தா எங்கப்பா சைக்கிளோட நின்னுட்டு இருக்கார். எனக்கு சந்தோஷம் தாளலை. சைக்கிளை சுத்தி சுத்தி வந்தேன். அப்பறம் சைக்கிள்ல தெருவை சுத்தி சுத்தி வந்தேன்.
சைக்கிள்ல ரிம்-க்கு நடுவில அட்டையை சின்னதா மடிச்சு வெச்சு, சக்கரம் சுத்தும்போது ஸ்போக்ஸ்ல படர மாதிரி வெச்சு ஓட்டினா, டப் டப்-ன்னு சத்தம் வரும். அதே மாதிரி 2-3 அட்டை வெச்சா, ஒரு மொபட் மாதிரி சத்தம் வரும். சும்மா ஊருக்குள்ள ஓட்டிட்டு போய் எல்லா பசங்களையும் அதே மாதிரி பண்ண வெச்சேன். 4-5 சைக்கிள் ஒன்ன போகும்போது 4-5 மோட்டார் சைக்கிள் போற மாதிரி ஒரு எபக்ட் இருக்கும்.
அப்பறம் சீட் கவர், பார் கவர், ஸ்டிக்கர் ஒட்டறதுன்னு சைக்கிளை அழகு பண்றேன்னு சொல்லி அதை அசிங்கப்படுத்தி இருக்கேன். ஸ்டிக்கர்ன்னா சாதாரண ஸ்டிக்கர் இல்லை. வாட்ச் விளம்பர ஸ்டிக்கர். அப்பாவோட நண்பர் ஆனந்த்ன்னு ஒருத்தர் சென்ட்ரல் வாட்ச் கம்பெனி நடத்திட்டு இருந்தார். அவர் கிட்டயிருந்து தான் வாட்ச் ஸ்டிக்கர் வாங்குவேன். டைட்டன், வெஸ்டார், டைமெக்ஸ்ன்னு எத்தனையோ பிராண்டுக்கு என் சைக்கிள் தான் (பிராண்ட்) அம்பாஸிடர்.
பின் வந்த நாட்களில் மேற்கூறிய ஆடம்பரங்கள் எதுவுமில்லாம ஓட்டினபோது சைக்கிள் பயணம் ரொம்ப இனிமையானதா இருந்துச்சு. 10 வது பரீட்சை எழுதிட்டு லீவ்ல 11 வதுக்கு ஸ்பெஷல் கிளாஸ் சேர்ந்தேன். தேனிக்கு போகணும் கிளாசுக்கு. காலையில 6.30 க்கு கிளாஸ். பஸ்சை நம்ப முடியாது. என்ன, தொகுதி வேட்பாளர் கூட 5 வருஷத்துக்கு ஒரு தடவை தொகுதிக்கு வருவார்ன்னு கண்டிப்பா சொல்ல முடியும். ஆனா, எங்க ஊருக்கு பஸ் வருமா வராதா, அப்படியே வந்தாலும் எப்ப வரும்ன்னு யாராலயும் சொல்ல முடியாது. அதனால சைக்கிள்ல போகலாம்ன்னு முடிவு பண்ணேன். வீட்ல முதலில் வேண்டாம்னு சொன்னாலும் அப்பறம் ஒத்துகிட்டாங்க.
காலையில 6 மணிக்கு வீட்ல இருந்து கிளம்புவேன். 25/30 நிமிஷத்துல கிளாஸ்க்கு போயிடுவேன். திரும்ப வரும்போது தான் பிரச்சனை. எதிர்க் காத்து கொஞ்சம் பலமா இருக்கும். மெதுவா தான் ஓட்ட முடியும். 45 நிமிஷம் ஆகும் வீட்டுக்கு வர. வழியில வீரபாண்டியில நிறுத்தி ஒரு கடையில வடையும் டீயும் சாப்பிடுவேன். வெயில் அதிகமா இருந்த சோடா சர்பத்.
அப்பறம் அப்படி இப்படி பாஸாகி, காலேஜ் வந்தாச்சு. முதல் வருஷம் படிக்கற வரைக்கும் சைக்கிள் தான். ஒரு நாள், ப்ரெண்ட்ஸ் எல்லாரும் தேனிக்கு சினிமா பாக்கப் போகலாம்னு பிளான். ஈவ்னிங் ஷோ. நான் காலேஜ் முடிச்சு, வீட்டுக்கு வந்து டிபன் சாப்பிட்டு அம்மாகிட்ட கொஞ்சம் காசு தேத்திட்டு போகலாம்னு வந்தேன். அம்மா கொஞ்சம் பிகு பண்ற மாதிரி பண்ணிட்டு அப்பறம்தான் காசு குடுத்தாங்க. பஸ் ஸ்டாப்புக்கு வந்து பாத்தா பஸ் போயிடுச்சுன்னு சொன்னாங்க. ஒரு யோசனை. சைக்கிள்ல போகலாம்ன்னு. வீட்டுக்கு வந்து சைக்கிள் எடுத்துகிட்டு தேனிக்கு போனேன். ரொம்ப நாளைக்கு அப்பறம் சைக்கிள்ல தேனிக்கு. ஜாலியா இருந்துச்சு. சைக்கிள் பயணமும் படமும். அப்படி போய் பாத்த படம் தான் (நாங்க நடிச்சு) எங்க ஊர், காலேஜ்-ல ஷூட்டிங் பண்ண "துள்ளுவதோ இளமை". படத்தை போலவே சைக்கிளில் போன அந்த நினைவும் (ஷெரின்) இன்னும் பசுமையாக இருக்கு.
காலேஜ் 2 வது வருஷம் படிக்கும்போது, அப்பா டிவிஎஸ் XL சூப்பர் வண்டி வாங்கி குடுத்தார். அப்பறம் சைக்கிள் ஓட்டுவது கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு, ஒரு கட்டத்துல சுத்தமா இல்லாமலே போயிடுச்சு. சரி சைக்கிளை வித்திடலாம்ன்னு முடிவு பண்ணேன். வீட்ல சொன்னேன். உன் இஷ்டம்ன்னு சொல்லிட்டாங்க. ரூ.800க்கு வித்துட்டேன். ஒரு 6 மாசம் கழிச்சு அந்த சைக்கிளை ரோட்ல போகும்போது பாத்தப்போ எனக்கு அழுகையே வந்திடுச்சு. அழுக்கா, அங்கங்க பெயிண்டெல்லாம் உறிஞ்சு. புத்தம் புதுசா பளபளன்னு இருந்த சைக்கிள். ஆனால் அது இப்போ நம்ம பொருள் இல்ல. ஒன்னும் பண்ண முடியாது. அப்பறம் கொஞ்ச நேரம் கழிச்சு மனசை தேத்திகிட்டேன்.
இப்போ சைக்கிள் ஓட்டணும்னு நினைக்கறேன். முடியல. ஓட்டறது என்ன, வாங்கக் கூட முடியல. காசு இருக்கு. ஆனா மனசு தான் இல்ல. இப்போ வாங்கலாம், அப்பறம் வாங்கலாம்ன்னு கிட்டத்தட்ட 8 வருஷம் ஓடிடுச்சு. இப்பவும் சின்னப் பசங்க சைக்கிள் ஒட்ட்றதை பாத்தா மனசுக்குள்ள இனம்புரியாத சந்தோஷமும், கூடவே ஒரு சின்ன வலியும் இருக்கத்தான் செய்யுது. இன்னொரு தடவை அந்த ராலே சைக்கிள்ல ஒரு ரவுண்டு போக மாட்டோமான்னு ஏங்கிட்டு இருக்கேன்.

Comments
Post a Comment