சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

இன்னிக்கு காலைல கண்ணாடியில் தான் முழிச்சிருப்பேன் போல.. அதனால தான் இந்த விபரீதமா.. இல்ல, கண்ணாடில முழிச்சதால, தலைக்கு வந்தது தலைப்பகையோட போனதா-னு தெரியல..

உன்தன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது - ஆண்டாள் திருப்பாவைல சொன்ன மாதிரி, நமக்கும் இந்த ட்ராபிக் போலீஸுக்கும் உள்ள உறவு. ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது. சாம்பிள் சம்பவம் வேணுமா: சாம்பிள் சம்பவம் 

சரி.. விஷயத்துக்கு வருவோம்..

காலை-ல வழக்கம் போல ஆபீசுக்கு கிளம்பினேன். சாப்பிட்டு முடிச்சுட்டு கொஞ்சம் பெர்சனாலிட்டி லோடு பண்ணிட்டு (அட.. அதாங்க.. தலையைப் படிய வாரி, பெர்ப்யூம் எல்லாம் அடிச்சுட்டு, இன்ன பிற இத்யாதி இத்யாதி.. கொஞ்சம் க்ளாமர் ஏத்திக்கிட்டு) வண்டியை எடுக்கலாம்-னு வந்தா, போன்-ல டொய்ங்-னு SMS மெசேஜ் சத்தம்.

Avoid Skipping the Red Light

வாட்சாப்-ல அனுப்பினது போக, இப்போ யாரோ SMS-ல குட்மார்னிங் மெசேஜ் அனுப்பிருப்பாங்க போல-னு நினைச்சு எடுத்துப் பாத்தா, அங்க தான் ட்விஸ்ட்டே... மெசேஜ் அனுப்பினது, ட்ராபிக் போலீஸ். இவங்க எதுக்கு நமக்கு குட்மார்னிங் அனுப்பறாங்க-னு யோசிச்சுகிட்டே மெசேஜை திறந்து பாத்தா, "Running a traffic light - Red light" சிக்னல் ஜம்பிங் பண்ணதுக்கு ஓலை வந்திருக்கு.

ஹே எப்புட்றா... நான்தான் இன்னும் வண்டியை கிளப்பவே இல்லயே அதுக்குள்ள சிக்னல் ஜம்பிங்-ஆ... ரைட்டு.. அப்பா சொன்ன சனிப்பெயர்ச்சி ஒர்க்கவுட் ஆகுது போல என நினைத்துக்கொண்டேன். ஆங்.. தங்கமணி தான்... தங்கமணி ஆபீஸுக்கு கிளம்பி 15 நிமிஷம் ஆகுது.. அப்போ இந்த மெசேஜ் வந்ததுக்கு காரணம் தங்கமணி தான் என்று மூளைக்குள் எங்கோ ஒரு முனுமுனுப்பு சத்தம் கேட்க, கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனே போன் பண்ணினேன்.

நான்: ஆபீஸ் போகும்போது எதுவும் சிக்னல்-ல நிக்காம போனீங்களா?

தங்கமணி: இல்லையே.. எல்லா சிக்னல்லயும் நின்னுட்டு தான் வந்தேன்.

நான்: சிக்னல் ஜம்பிங் பைன் மெசேஜ் வந்திருக்கு. 50 தினாருக்கு (சற்றே கடுமையான குரலில்)..

தங்கமணி: இல்ல.. நான் இன்னிக்கு எதுவும் பண்ணலை என்று குணமாக வாயால் சொன்னார்.

அப்போதாவது நான் கொஞ்சம் சுதாரித்து மெசேஜை நல்லா பாத்திருக்கணும். கெரகம்.. ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தங்கமணிக்கு அனுப்பினேன். அடுத்த நொடி போன் வந்தது..

தங்கமணி: "யாரோட வண்டி நம்பர் போட்டிருக்கு-னு பாத்தீங்களா? உங்க வண்டி நம்பர்.." என்று மீண்டும் குணமாக வாயால் சொன்னார்.

நான்: (ஐயையோ என்ற பதட்டத்தை மறைத்துக்கொண்டு) ம்ம்.. சரிசரி.. பாத்துட்டு கூப்பிடறேன் என்று நா(க்கு) குழற சொல்லிவிட்டு, அவரை மேலும் பேச விடாமல், படக்கென கட் பண்ணிவிட்டேன். இந்த ஏழைப் பிள்ளையை எப்படியாவது காப்பாற்றும் ஆண்டவரே.. ஓ.. இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை.. ஆண்டவர் பிக்பாஸ்-ல பிசியா இருப்பாரு. ஆண்டவா.. Proxy என யாரையும் அனுப்பாமல், நீயே வந்து காப்பாத்து..

ஆற அமர சற்று நிதானமாக அந்த SMS மெசேஜைப் பார்த்தேன்.

வண்டி நம்பர் என்னோடது தான்.. ஆனா.. என்னவோ இடிக்குதே என்று மீண்டும் ஒரு முறை கண்ணில் க்லோராக்ஸ் விட்டு துடைத்துக்கொண்டு பார்த்தேன்... தேதி நேரம் இடம்.. 06-Jan-2024, 5.20AM, Drydock Highway - என்று இருந்தது.. ஆங்.. இது வேற யாருக்கோ போக வேண்டிய மெசேஜ்.. அட்ரஸ் மாத்தி தப்பா அனுப்பிட்டாங்க.. கன்பார்ம். ஏன்னா.. 06-Jan சனிக்கிழமை.. ஆபீஸ் லீவ். அதனால அத்தனை சீக்கிரம் வெளியில போகவேண்டிய வேலை இல்லை. அது மட்டுமா.. ஹீட்டர் போட்டாலும் அதையும் தாண்டி குளிரும் மார்கழியில், 5.20AM என்பது எனக்கு நள்ளிரவு சமயம். ஆகையால்,  நித்ராதேவியுடன் அளவலாவிக்கொண்டிருந்த நேரம் என்பது நிச்சயமான நிதர்சனமான உண்மையான உண்மை.

Sleeping Bear Theme Image 2 Eps10 Stock Vector (Royalty Free) 345785963 |  Shutterstock

எதுக்கும் ட்ராபிக் போலீஸ் App-ல ஒரு தடவை செக் பண்ணிடலாம்-னு முடிவு பண்ணி, அதை ஓபன் பண்ணி, பேரும் பாஸ்வேர்டும் போட்டா, அங்கயும் அதே தான்.. என்னோட லைசன்ஸ் மற்றும் வண்டி நம்பர் லிங்க் பண்ணி இந்த சிக்னல் ஜம்பிங் ரெஜிஸ்டர் ஆகியிருக்கு.

உடனே கூகிள் ஆண்டவர் காலைப் பிடிச்சு கையைப் பிடிச்சு ட்ராபிக் போலீஸ் நம்பர் எடுத்தா, "தாங்கள் தொடர்பு கொண்ட எண், உபயோகத்தில் இல்லை"-னு வருது.. யப்பா.. அஞ்சோ பத்தோ மேல போட்டுத் தரேன்... கொஞ்சம் நல்லா தேடுப்பா என்று சொன்னதும், உடனடியாக வேறொரு நம்பர் திரையில் வந்தது. அந்த நம்பருக்கு போன் செய்தால் உடனே, "ட்ராபிக் போலீஸ் துறையை தொடர்பு கொண்டதற்கு நன்றி"-னு பதில் வருது.. கூகிளாண்டவரும் இப்போ இப்படி ஆகிட்டாரே-னு நினைக்கும்போது...

போனில் கம்ப்யூட்டர் வாய்ஸ் தான் வந்ததே தவிர, யாரும் பதில் சொல்லவில்லை. 2 நிமிஷத்துல அதுவும் கட் ஆயிடுச்சு. சுமார் 20 நிமிஷம்.. பத்து பதினஞ்சு தடவை முயற்சி.. அப்பறம் ஒரு அம்மணி போன் எடுத்தாங்க..

Comments

Popular posts from this blog

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2