சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2

முந்தைய பதிவைப் படித்துவிட்டு, உடனே போன் செய்து, "அண்ணே.. உங்களுக்கும் தப்பா ஓலை அனுப்பிட்டாங்களா.. சரி சரி ஃப்ரீயா விடுங்க.. நான் ஒரு மினிஸ்டர்.. எனக்கே இப்படித்தான் 2-3 தடவை தப்பா ஓலை அனுப்பியிருக்காங்க.. உடனே IsaTown போலீஸ் ஸ்டேஷன் போக சொல்லலாம்-னு கூப்பிட்டேன்" என்ற சவுதி மினிஸ்டர் கோசகனுக்கு நன்றிகள் பல.. நல்ல மனம் வாழ்க.. நாடு போற்ற வாழ்க.. 

Car Flag Pole Diplomat-Z-Chrome-MB-W222 for Mercedes-Benz S (W222) (2013-)  : Amazon.co.uk: Automotive

கதைக்கு வருவோம்: அப்பறம் ஒரு அம்மணி போன் எடுத்தாங்க..

நிற்க..

வருடத்தின் முதல் நாள் 01-Jan அன்று முதல் வேலை, மனாமாவில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு பூஜை நடக்கும். மார்கழி மாதம் என்பதால் சுப்ரபாதம், திருப்பாவை திருப்பள்ளியெழுச்சி மற்றும் சில பல ஸ்லோகங்கள் சொல்லிவிட்டு, திரு ஷ்யாம்-ஜி வீட்டில் நடக்கும் புது வருட சிறப்பு பூஜையில் கலந்துகொள்ள ஓடுவேன். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொள்ளும் பூஜை என்பதால், சீக்கிரம் போனால் தான் நிற்கவாவது இடம் கிடைக்கும்.

Shrinathji Temple, Bahrain - Wikipedia

தேரில் கீதை சொன்ன கிருஷ்ணன் கோவிலுக்கு, காரில் போவது என்பது பலருக்கும் அத்தனை நல்ல அனுபவமாக இருப்பதில்லை. காரணம், பார்க்கிங். கோவில் தெருவில் பார்க்கிங் கிடைக்கவே கிடைக்காது. எங்காவது தூரமாக நிறுத்திவிட்டு, நடக்க வேண்டும். இன்னும் ஒரு 5 நிமிடம் சேர்ந்து நடந்தால், வீட்டிலிருந்தே கோவிலுக்கு வந்திருக்கலாம் என தோன்றும். நம்மைப் போல பலரும் கிருஷ்ணன் கோவில் காலை பூஜையில் கலந்துகொள்ள வருவார்கள் என்பதால், அரிதாக கிடைக்கும் ஒன்றிரண்டு பார்க்கிங்கும் ஆக்-கார்-மிக்கப்படும். எப்படியும், ஷ்யாம்ஜி வீட்டு பூஜைக்கு போக வேண்டும் என்பதால், 15 நிமிடம் அல்லது அதிகபட்சம் 30 நிமிடத்திற்குள் வந்து வண்டி எடுத்து விடுவேன் என்பதால் கிடைக்கும் கேப்பில் வண்டியை நிறுத்திவிட்டு கோவிலுக்கு ஓடுவேன்.

ட்ராபிக் போலீஸ் அந்த அதிகாலை வேளையிலும் "கருமமே" கண்ணாக வந்து பார்க்கிங் டிக்கெட் வைத்துவிட்டு செல்வார்கள். ஆள் வைத்து ஃபாலோ பண்ணுவார்கள் போல.. முதல் கிப்ட் அவர்களிடமிருந்து தான்.. ஆம்.. உடனே கட்டினால் 5 தினார் அபராதம். ஒரு வாரம் கழித்து என்றால் 10 தினார் என்று டிஸ்கவுன்ட் கொடுக்கும் அவர்களின் அன்புக்கு எல்லையே இல்லை..

Tips and Tricks on How to Best Handle a Parking Ticket | ParkMobile

இப்படியாக கடந்த 2 வருடங்கள் அவர்களிடம் 01-Jan அன்று பார்க்கிங் டிக்கெட் கிப்ட் வாங்கிவிட்டேன். இந்த வருடம் 01-Jan அன்று கோவிலுக்கோ அல்லது ஷ்யாம்ஜி வீட்டு பூஜைக்கோ போகவில்லை. எனவே ட்ராபிக் போலீஸ் என்னை ரொம்பவே மிஸ் பண்ணியிருப்பார்கள் போல.. இந்த சிக்னல் ஜம்பிங் டிக்கெட் கிப்ட் அனுப்பி ஏக்கத்தைப் போக்கிக் கொண்டார்கள் என்றே எண்ணுகிறேன். நானும் உங்களை ரொம்பவே மிஸ் செய்தேன்... I love you two.. Two-வா too-வா... (ஐயையோ.. இதுக்கு தங்கமணி கிட்ட ஒரு கிப்ட் கிடைக்கும்-னு நினைக்கும்போது... அவ்வ்வ்வ்)

அப்பறம் ஒரு அம்மணி போன் எடுத்தாங்க.. நின்றவர்கள் இப்போது உட்காரலாம்.. கால் வலிக்குமே..

அம்மணிக்கு இங்கிலீஸ் கொஞ்சம் கஸ்டம் போல..

சிக்னல் ஜம்பிங் டிக்கெட் வந்திருக்கு என்று சொல்லி முடிப்பதற்குள், "you can bay online" என்றார். பைன் கட்டறதா இருந்தா நான் எதுக்கும்மா உனக்கு போன் பண்ணப்போறென் என நினைத்துக்கொண்டு, எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில், "டிக்கெட்டில் போட்டிருக்கும் தேதியில், அந்த நேரத்தில் நான் அங்க போகவேயில்லை"-ன்னு சொன்னேன்.

ட்ராபிக் அம்மணி: You worg for comBany? (நீ கம்பெனிக்காக வேலை செய்கிறாயா? என்பதாக நான் புரிந்துகொண்டேன்)

நான்: Yes madam.

ட்ராபிக் அம்மணி:  Maybe you go comBany.. that time signal no stoBBing.. so camera catch you (நீ கம்பெனிக்குப் போகும்போது சிக்னலில் நிக்காம போயிருப்ப. அதான் கேமரா ஃப்ளாஷ் அடிச்சிருக்கு)

நான்: (இப்போது தான் முந்தைய கேள்வி புரிந்து) no madam.. I did not go. For me, Friday and Saturday leave. No work.. I sleeping at home.. no taking car outside. என பட்லர் இங்கிலீஷில் சொல்லிப் புரிய வைக்க முயற்சித்தேன்.

ட்ராபிக் அம்மணி: Ah.. you no go worG.. Wait.. (யாரிடமோ அரபியில் பேசிவிட்டு) You Gome Isa-Town Bolis Sdation

நான்: Ok madam. Thank you


போன பதிவின் சாம்பிளில் சொன்னபடி, ஏற்கனவே நமக்கு அங்கு நல்ல அனுபவம் உண்டு என்பதால், அங்க "நான் சம்பவம் செய்யப்போறேனா.. என்னை வெச்சு சம்பவம் பண்ணப் போறாங்களா தெரியல.. ஆனா சம்பவம் உறுதி".. என்று நினைத்துக்கொண்டே வண்டியை Isa-Town-க்கு விட்டேன்.

உள்ளே நுழைந்து, Help Desk ஆசாமியிடம் எனக்கு வந்த பைன் டிக்கெட்டை காட்டி முடிப்பதற்குள், வலது பக்கம் கையைக் காட்டி, டோக்கன் எடுத்துட்டு போய் வெயிட் பண்ணு. டோக்கன் நம்பர் வந்ததும், கவுண்ட்டரில் பைன் கட்டிட்டுப் போ என்றார்.

ஐயா, இது நான் பண்ணலை. நான் அந்த சமயம், அங்க போகவேயில்லை.. வீட்ல தூங்கிட்டு இருந்தேன் என்று சொன்னேன். "உன் மூஞ்சி டிசைனைப் பாத்தா, நீயெல்லாம் ரோட்டுல நடந்து போனாலே 10 violation (விதிமீறல்) பண்ற மாதிரி இருக்கு.. நீ சிக்னல் ஜம்பிங் பண்ணலை-னு சொன்னா நம்பற மாதிரியா இருக்கு" என்பது போலான ஒரு முக பாவணையில், அதே வலது பக்கம் கையைக் காட்டி, "19ம் நம்பர் ஆபீசுக்குப் போ" என்றார்.

அந்தப் பக்கம் பார்த்தால், 12 வரை தான் இருந்தது. ரைட்டு.. ஆரம்பிச்சுட்டாங்க என்று நினைத்துக்கொண்டே கொஞ்சம் முன்னே சென்றேன். ரொம்பவும் சோதிக்காமல், இடது பக்கத்தில் கட்டங்கடைசியில் 19ம் நம்பர் ஆபீஸ் இருந்தது.

திறந்தே இருந்தது. உள்ளே 6 மேஜைகள்.. 4 காலி.. ஒன்றில் ஒரு பெண்மணி.. மற்றொன்றில் ஒரு ஆண். இருவரும் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். பேசி முடிக்கட்டும் என்று நினைத்து, எதுவும் பேசாமல் நின்றேன். அந்த அம்மணி என்னைப் பார்த்த பிறகும், ஒன்றும் சொல்லாமல்/கேட்காமல் அவருடன் பேசிக்கொண்டே இருந்தார். ஒரு நிமிடம் பார்த்துவிட்டு, நானே "எச்சூஸ் மீ" என்றேன்.

அந்த ஆம்மனாட்டி என்னை பார்த்தார். அவரிடம் எனக்கு வந்த சிக்னல் ஜம்பிங் டிக்கெட்டை மொபைலில் உள்ள ட்ராபிக் App-ல் காண்பித்து, இது நான் செய்யவில்லை. நான் அந்த சமயம், அங்க போகவேயில்லை என்றேன். வண்டி நம்பரை பார்த்துவிட்டு, கணினியில் தட்டினார்.

ஆபீசர்: you have car or bus? (நீ கார் வெச்சுருக்கியா? இல்ல பஸ்-ஸா?)

நான்: Car, sir.

ஆபீசர்: Ok.. this by mistake sent to you. This is for bus என்றார்.

நான்: (கொஞ்சம் நிம்மதி வந்தவனாய்.. 50 தினார் ஆச்சே) Ok.. sir. Thank you.. but what should I do now? How to cancel this ticket?

ஆபீசர்: I will cancel.. check app after.. maybe.. 5 minutes.

அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, கிளம்பினேன். ஆனாலும், மீண்டும் அந்த அம்மணியிடம் பேசிக்கொண்டு என்னை மறந்துவிட்டால் என்ன செய்வது என்று நினைத்து, கொஞ்சம் தள்ளி வந்து, சேரில் உட்கார்ந்து App-ஐ திறந்து அந்த டிக்கெட் ஸ்கிரீனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். 2 நிமிடத்தில் மந்திரம் போட்டது போல மறைந்துவிட்டது. இப்போது தான் ஹப்பாடா என இருந்தது.

மீண்டும் அந்த Help Desk ஆசாமியிடம் வந்து நன்றி சொல்லிவிட்டு, "அது என் வண்டி இல்லை. தவறுதலாக எனக்கு அனுப்பிவிட்டார்கள்" என்று சொல்லிவிட்டுக் கிளம்ப எத்தனித்தேன்.. அந்த ஆசாமி, புன்னகையுடன் அதே சமயம், அப்படியெல்லாம் தப்பா அனுப்ப வாய்ப்பில்லையே என்பதான தொனியில், "Welcome" என்றார்.

அந்த Welcome, "இப்போ தப்பிச்சுட்ட.. சீக்கிரமே வேற ஒரு ஓலை வரும்.. அப்போ மாட்டுவ" என்பதாக இருந்தது.

இந்த வருடம் (2024) அமோகமாக இருக்கபோகிறது.. இல்லயில்லை.. இந்த வருட(மு)ம் அமோகமாக இருக்கப்போகிறது..

It's going to be like..

Ooh annoys me when I forget which is which. I use a password manager now  #minions #funny | Funny minion memes, Minions funny, Minion jokes 

கடைசியாக ஒரு வேண்டுகோள்: நீங்கள் காரில் போகும்போது ஏதாவது பஸ் வந்தால் உடனே, உங்கள் வண்டியை ஓரங்கட்டிவிட்டு, பஸ்-ஸுக்கு வழி விடுங்கள்.. பஸ் டிரைவரை சிக்னல் ஜம்பிங் செய்ய தூண்டாதீர்கள். இந்த ஏழைப் பிள்ளை மீண்டும் சிக்னல் ஜம்பிங் டிக்கெட் வாங்க நீங்கள் காரணமாக வேண்டாம்.. வலிக்குது.. அழுதுருவேன்....

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2