சிக்னல்/சிக்கல் ஜம்பிங்
இன்னிக்கு காலைல கண்ணாடியில் தான் முழிச்சிருப்பேன் போல.. அதனால தான் இந்த விபரீதமா.. இல்ல, கண்ணாடில முழிச்சதால, தலைக்கு வந்தது தலைப்பகையோட போனதா-னு தெரியல.. உன்தன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது - ஆண்டாள் திருப்பாவைல சொன்ன மாதிரி, நமக்கும் இந்த ட்ராபிக் போலீஸுக்கும் உள்ள உறவு. ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது. சாம்பிள் சம்பவம் வேணுமா: சாம்பிள் சம்பவம் சரி.. விஷயத்துக்கு வருவோம்.. காலை-ல வழக்கம் போல ஆபீசுக்கு கிளம்பினேன். சாப்பிட்டு முடிச்சுட்டு கொஞ்சம் பெர்சனாலிட்டி லோடு பண்ணிட்டு (அட.. அதாங்க.. தலையைப் படிய வாரி, பெர்ப்யூம் எல்லாம் அடிச்சுட்டு, இன்ன பிற இத்யாதி இத்யாதி.. கொஞ்சம் க்ளாமர் ஏத்திக்கிட்டு) வண்டியை எடுக்கலாம்-னு வந்தா, போன்-ல டொய்ங்-னு SMS மெசேஜ் சத்தம். வாட்சாப்-ல அனுப்பினது போக, இப்போ யாரோ SMS-ல குட்மார்னிங் மெசேஜ் அனுப்பிருப்பாங்க போல-னு நினைச்சு எடுத்துப் பாத்தா, அங்க தான் ட்விஸ்ட்டே... மெசேஜ் அனுப்பினது, ட்ராபிக் போலீஸ். இவங்க எதுக்கு நமக்கு குட்மார்னிங் அனுப்பறாங்க-னு யோசிச்சுகிட்டே மெசேஜை திறந்து பாத்தா, "Running a traffic light - Red light" சிக்ன...
Comments
Post a Comment