Posts

Showing posts from July, 2025

ஒரு சங்கீத(ப்ரயத்தன) பயணம்

Image
பஹ்ரைன் - பெலகோலா - சென்னை - பஹ்ரைன் சென்ற வருடம் (2024) அக்டோபர் வாக்கில் எங்கள் (ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மன், ஶ்ரீ கோசகன் & அடியேன்) நாமசங்கீர்த்தன குரு, அயிந்தை ஶ்ரீ ஆராவமுதன் ஸ்வாமி, "சரன் நாதமுனிகள் நாதாலயம் ஆரம்பிச்சு 2 வருஷம் ஆச்சுப்பா.. அதனால, ஜனவரி/பிப்ரவரி 2025-ல ஒரு நாமசங்கீர்த்தனம் ப்ரோக்ராம் வெச்சுக்கலாம்-னு ஶ்ரீ APN ஸ்வாமி சொல்லியிருக்கார்ப்பா.. உங்களுக்கு எப்படி வசதின்னு பாத்து சொல்லுங்கோ" என்றார். இந்த சரன் நாதமுனிகள் நாதாலயத்தில் நாங்கள் எப்படி ஐக்கியமானோம் என்பதை "இங்கு (க்ளிக்கி)" காண்க. அப்போதைக்கு "ஓகே ஸ்வாமி" என்று சொல்லி வைத்தோம். அது ஏன் அப்போதைக்கு ஓகே என்றால், ஆபீஸில் லீவ் தர வேண்டும், டிக்கெட் செலவு, வழிச்செலவு, ஊர்ச்செலவு இத்யாதி இத்யாதி.. இதையெல்லாம் தாண்டி, முக்கியமாக எங்கள் வீட்டு தங்கமணிகள் இந்த இசைப் பயணத்துக்கு இசைய வேண்டுமே.. ஆபீஸில் ப்ரச்சனையில்லை.. ஏற்கனவே மேலே போய்விட்ட தாத்தாவையோ பாட்டியையோ நேத்து தான் போனார்கள் என்று சொல்லியோ, அல்லது, ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்ட தம்பிக்கோ தங்கைக்கோ நாளைக்கு தான் கல்யாணம் என்றோ சொல்லி ...