ஒரு சங்கீத(ப்ரயத்தன) பயணம்
பஹ்ரைன் - பெலகோலா - சென்னை - பஹ்ரைன்
சென்ற வருடம் (2024) அக்டோபர் வாக்கில் எங்கள் (ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மன், ஶ்ரீ கோசகன் & அடியேன்) நாமசங்கீர்த்தன குரு, அயிந்தை ஶ்ரீ ஆராவமுதன் ஸ்வாமி, "சரன் நாதமுனிகள் நாதாலயம் ஆரம்பிச்சு 2 வருஷம் ஆச்சுப்பா.. அதனால, ஜனவரி/பிப்ரவரி 2025-ல ஒரு நாமசங்கீர்த்தனம் ப்ரோக்ராம் வெச்சுக்கலாம்-னு ஶ்ரீ APN ஸ்வாமி சொல்லியிருக்கார்ப்பா.. உங்களுக்கு எப்படி வசதின்னு பாத்து சொல்லுங்கோ" என்றார்.
இந்த சரன் நாதமுனிகள் நாதாலயத்தில் நாங்கள் எப்படி ஐக்கியமானோம் என்பதை "இங்கு (க்ளிக்கி)" காண்க.
அப்போதைக்கு "ஓகே ஸ்வாமி" என்று சொல்லி வைத்தோம். அது ஏன் அப்போதைக்கு ஓகே என்றால், ஆபீஸில் லீவ் தர வேண்டும், டிக்கெட் செலவு, வழிச்செலவு, ஊர்ச்செலவு இத்யாதி இத்யாதி.. இதையெல்லாம் தாண்டி, முக்கியமாக எங்கள் வீட்டு தங்கமணிகள் இந்த இசைப் பயணத்துக்கு இசைய வேண்டுமே..
ஆபீஸில் ப்ரச்சனையில்லை.. ஏற்கனவே மேலே போய்விட்ட தாத்தாவையோ பாட்டியையோ நேத்து தான் போனார்கள் என்று சொல்லியோ, அல்லது, ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்ட தம்பிக்கோ தங்கைக்கோ நாளைக்கு தான் கல்யாணம் என்றோ சொல்லி லீவ் வாங்கிவிடலாம். ஆனால் தங்கமணிகளை அப்படியெல்லாம் சொல்லி ஏமாத்த முடியுமா என்ன??? "நீங்க பாடற லட்சணத்துக்கு இப்போ ஊருக்குப் போய் கச்சேரி பண்றது தான் கொறச்சலாக்கும்? பாடறேன்-ங்கற பேர்ல காட்டுக் கத்தல் கத்தி, நம்ம பில்டிங்ல இருக்கறவங்க தூக்கத்தை கெடுத்தது பத்தாதா", என்று (அட்லீஸ்ட் என் வீட்டு) தங்கமணி கேட்க வாய்ப்புகள் அதிகம்.
அதனால ஒரு ஐடியா பண்ணி, ஒவ்வொத்தரும் மத்த 2 பேர் வீட்டு தங்கமணிகள் ஒத்துக்கிட்டாங்க-னு சொல்லி (அதாவது, என் வீட்டில் நான் தங்கமணியிடம், கோசகனுக்கும் நரசிம்மன் அண்ணாவுக்கும் க்ரீன் சிக்னல் கிடைச்சுடுச்சுனு சொல்லி) பெர்மிஷன் கேட்டுப் பாக்கலாம்னு முடிவு பண்ணோம். அது வொர்க்கவுட்டும் ஆகிடுச்சு.
அடுத்த வாரம் க்ளாஸ்-ல அமுதன் ஸ்வாமி-கிட்ட, "எல்லா இடத்துலயும் NOC வாங்கியாச்சு ஸ்வாமி.. நீங்க தேதி சொன்னா டிக்கெட் போட்டுடலாம்" அப்படின்னு சொல்லிட்டோம். அவரும் ஶ்ரீ APN ஸ்வாமியும் மைலாப்பூர் ஶ்ரீ தேஶிகர் தேவஸ்தானத்தில பேசி, 09 Feb 2025 ஞாயிற்றுக்கிழமை அன்னிக்கு ஶ்ரீநிவாஸர் சன்னதியிலயே நம்ம ப்ரோக்ராம் அப்படின்னு ஆசார்யன் அனுக்ரஹத்தோட முடிவாச்சு.
இது ஒரு பக்கம் இருக்க, அமுதன் ஸ்வாமி, "நீங்க ஒரு 1-2 நாள் முன்னாடியே வர முடியுமா பாருங்கோ. அப்படி முடிஞ்சா, கர்நாடகா-ல மைசூரு பக்கத்தில பெலகோலா அப்படின்னு ஒரு இடம் இருக்கு. அங்க ஒரு அழகான லக்ஷ்மி நரசிம்மர் சன்னதி இருக்கு. ஒரு வேத பாடசாலை இருக்கு. அதை நடத்தறவா ரொம்ப வேண்டப்பட்டவா.. அடியேன் நாமசங்கீர்த்தனம் இந்த அளவுக்கு பண்றதுக்கு காரணம் 2 பேர். ஒருத்தர் ஶ்ரீ APN ஸ்வாமி. இன்னொருத்தர் ஶ்ரீ பட்டண்ணா ஸ்வாமி. இப்போ பட்டண்ணா ஸ்வாமியும் அவர் குமாரரும் (பையனும்) தான் அந்தக் கோவிலையும் பாடசாலையையும் நிர்வாகம் பண்ணிண்டு இருக்கா. அதனால அங்க ஒரு நாமசங்கீர்த்தனம் வெச்சுக்கலாம். நீங்க பஹ்ரைன்ல இருந்து வர தேதி சொன்னா, நானும் அங்க வந்துடறேன்", அப்படின்னு சொன்னார்.
கூடவே, "நீங்க வந்து போறதுக்கான டிக்கெட் செலவெல்லாம் நீங்களே தான் பாத்துக்கும்-படியா இருக்கும் பா.. அதெல்லாம் பரவாயில்லையா-ன்னும் பாத்துட்டு முடிவு பண்ணுங்கோ" (மைண்ட் வாய்ஸில் - இங்க வந்துக்கு அப்பறம், ப்ளைட் டிக்கெட்.. பஞ்சப்படி.. பயணப்படியெல்லாம் கேட்டு தலையை சொரிஞ்சுண்டு நிக்காதே) அப்படின்னார்.
எங்களைப் பொறுத்தவரை, "(நாங்கள் வித்யையை நன்றாகக் கற்றுக்கொண்டு நாமசங்கீர்த்தனம் பண்ண வேண்டும் என்பதை தவிர வேறு எதுவுமே எதிர்ப்பார்க்காத குருவான) அமுதன் ஸ்வாமி இதைப் பண்ண முடியுமா என்று கேட்கிறார்.. ஶ்ரீ APN ஸ்வாமியும் இதை நடத்த எதிர்பாத்துண்டு இருக்கார். கண்டிப்பாக நாம் கலந்துக்க வேணும்" என்று முடிவு செய்தோம்.
இப்படியாக பஹ்ரைன் ↔ சென்னை ரவுண்டு ட்ரிப்-பாக இருந்த ப்ரோக்ராம், பஹ்ரைன் - பெலகோலா - சென்னை - பஹ்ரைன் என்றானது.
நானும் கோசகனும் டிக்கெட் டிசம்பர் மாசமே போட்டாச்சு. ஆனா...
.%20The%20scene%20includes%20a%20traditional.jpeg)
Comments
Post a Comment