Posts

Showing posts from June, 2011

கேகிவாகனன் பதி

அகிலனுக்கு சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டதில இருக்கிற வல்லக்கோட்டை. சென்னையிலருந்து செங்கல்பட்டு போற வழியில ஸ்ரீபெரம்பதூருக்கும், சிங்கபெருமாள் கோவிலுக்கும் நடுவில இருக்கு இந்த வல்லக்கோட்டை. அங்க இருக்கிற முருகன் கோவில் ரொம்பப் பிரசித்தி. இந்தக் கோவில்ல இருக்கிற சிலை தான் இந்தியாவிலயே பெரிய முருகன் சிலை. பிறந்தது, வளந்தது எல்லமே அந்த ஊர் தான். இவனுக்கு 4 வயசிருக்கும்போதே ஒரு விபத்துல அப்பா இறந்துட்டார். அம்மாவும் படிச்சிருந்ததால அவரோட வேலை, அம்மாவுக்கு கிடைச்சது. அந்த வருமானத்தை வெச்சு தான் இவனும் இவன் தங்கச்சியும் படிச்சதெல்லாம். வல்லக்கோட்டையில இருந்த காரணத்தாலயோ என்னவோ, முருகன் மேல பக்தி ஜாஸ்தி. கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் இதெல்லாம் மனப்பாடம். ஸ்கூல்ல இவனுக்கு பெஸ்ட் பிரண்டு கார்த்தி மட்டும் தான். அவங்க அப்பா சங்கரன் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர். சொந்த ஊர் திண்டுக்கல். இந்த ஊருக்கு வந்து 1 வருஷமாகுது. கார்த்தியோட அம்மவும், அகிலனோட அம்மவும் ஒரே ஆபீஸ்ல தான் வேல செஞ்சாங்க. கார்த்தி அகிலனை விடவும் ஒரு வயசு பெரியவன். ஆனா வெளியூர்ல வேற ஸ்கூல்ல படிச்சதால, 2ம் க்ளாஸுக்கு தான் சீட் கு