கேகிவாகனன் பதி
அகிலனுக்கு சொந்த ஊர் காஞ்சிபுரம் மாவட்டதில இருக்கிற வல்லக்கோட்டை. சென்னையிலருந்து செங்கல்பட்டு போற வழியில ஸ்ரீபெரம்பதூருக்கும், சிங்கபெருமாள் கோவிலுக்கும் நடுவில இருக்கு இந்த வல்லக்கோட்டை. அங்க இருக்கிற முருகன் கோவில் ரொம்பப் பிரசித்தி. இந்தக் கோவில்ல இருக்கிற சிலை தான் இந்தியாவிலயே பெரிய முருகன் சிலை. பிறந்தது, வளந்தது எல்லமே அந்த ஊர் தான். இவனுக்கு 4 வயசிருக்கும்போதே ஒரு விபத்துல அப்பா இறந்துட்டார். அம்மாவும் படிச்சிருந்ததால அவரோட வேலை, அம்மாவுக்கு கிடைச்சது. அந்த வருமானத்தை வெச்சு தான் இவனும் இவன் தங்கச்சியும் படிச்சதெல்லாம். வல்லக்கோட்டையில இருந்த காரணத்தாலயோ என்னவோ, முருகன் மேல பக்தி ஜாஸ்தி. கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் இதெல்லாம் மனப்பாடம்.
ஸ்கூல்ல இவனுக்கு பெஸ்ட் பிரண்டு கார்த்தி மட்டும் தான். அவங்க அப்பா சங்கரன் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர். சொந்த ஊர் திண்டுக்கல். இந்த ஊருக்கு வந்து 1 வருஷமாகுது. கார்த்தியோட அம்மவும், அகிலனோட அம்மவும் ஒரே ஆபீஸ்ல தான் வேல செஞ்சாங்க. கார்த்தி அகிலனை விடவும் ஒரு வயசு பெரியவன். ஆனா வெளியூர்ல வேற ஸ்கூல்ல படிச்சதால, 2ம் க்ளாஸுக்கு தான் சீட் குடுத்தாங்க. சரி, பரவாயில்லைன்னு அவன திரும்பவும் 2ம் க்ளாஸ்லயே சேத்துட்டாங்க. ஸ்கூல் முடிஞ்சதும் சாயங்காலம், அகிலன் வீட்டுக்கு வந்து ரெண்டு வயசு ராகினியோட வெளையாடுறது தான் ரெண்டு பேருக்கும் முதல் வேலை. அதுக்கப்பறம் தான் ஹோம் வொர்க்கெல்லாம். இவங்க வீட்லயே ஹோம் வொர்க்கெல்லாம் முடிச்சுட்டு தான் போவான் கார்த்தி. சனி, ஞாயிறு ஆனா போதும். சங்கரனோட சேந்து அகிலனும், கார்த்தியும் ஊர் சுத்தக் கெளம்பிடுவாங்க. பெரும்பாலும் கோவில்களுக்குப் போய் அங்க இருக்கிற கல்வெட்டுக்களை ஆராய்ச்சி பண்றது தான் அவரோட வேலை. அவங்க போறதில பாதிக் கோவில் பாழடைஞ்ச நிலையில, மக்கள் வரத்து அவ்வளவா இல்லாத காட்டுப் பகுதில தானிருக்கும். அகிலன் படிப்பிலயும் கெட்டி. அதனால இவங்கம்மா இந்த மாதிரி போறதுக்கெல்லாம் எதுவும் சொல்ல மாட்டாங்க. ரெண்டு மூனு நாள் சேந்தாப்ல லீவு வந்தா, கார்த்தி வீட்ல எல்லாரும் திண்டுக்கல்லுக்கு போயிடுவாங்க. அப்பப்போ அம்மவை நச்சரிச்சு, அகிலனும் அவங்களோட திண்டுக்கல்லுக்கு போவான். சின்ன வயசிலருந்தே எங்கயும் வெளியூர்களுக்கு கூட்டிட்டுப் போனதில்லை. இந்த மாதிரி போனாலாவது அவனுக்கும் நாலு இடம் தெரியும்னு அனுப்பி வெப்பாங்க.
திரும்பிப் பாக்குறதுக்குள்ள 5 வருஷம் ஓடிடுச்சு. ரெண்டு பேரும் இப்போ 7ம் க்ளாஸ் படிச்சுட்டு இருந்தாங்க. ராகினியும் அதே ஸ்கூல்ல 2வது படிச்சுட்டு இருந்தா. ஒரு சனிக்கிழமை பானாவரம் காட்டுல இருக்கிற ஒரு கோவிலுக்கு சங்கரன் ஆராய்ச்சிக்கு கெளம்பினார். வழக்கம் போல இந்த ரெண்டு பசங்களும் அவர் கூடக் கெளம்பினாங்க. பானாவரம் ஒரு ரிசர்வ் பாரஸ்ட். ரேஞ்சர் பெர்மிஷன் குடுத்தா தான் உள்ள போக முடியும். சங்கரனுக்குத் தெரிஞ்ச ஒருத்தர் மூலமா அந்த ரேஞ்சர் கிட்டப் பேசி பெர்மிஷன் வாங்கிட்டாரு. ரேஞ்ச் ஆபீசுக்குப் போய், அவங்க குடுத்த பார்ம்ல கையெழுத்துப் போட்டுட்டு காட்டுக்குள்ள கெளம்ப ரெடியானாரு சங்கரன். உள்ள உங்க கூட மைனர் யாரையும் கூட்டிட்டுப் போக ரூல்ஸ் கெடயாது சார். ஆனா நீங்க கேட்டதால ரெண்டு பசங்களுக்கும் பெர்மிஷன் தரேன். அவங்கள கவனமா பாத்துக்கங்க. அப்பப்போ அனிமல்ஸ் நடமாட்டம் இருக்கும். அதனால இவரும் உங்க கூடவே வருவாருனு சொல்லி ஒரு பாரஸ்ட் ஆபீசரையும் துணைக்கு அனுப்பி வெச்சாரு ரேஞ்சர். ரேஞ்ச் ஆபீஸ்லருந்து 3 கிலோமீட்டர் தூரம் உள்ள இருந்துச்சு கோவில்.
கோவில் ரொம்பப் பாழடஞ்சு போய், இப்போதைக்குள்ள யாரும் வந்து போனா மாதிரித் தெரியல. அங்கருந்த கல்வெட்டையெல்லாம் பாத்துட்டு, நம்ம இதுவரைக்கும் பாத்ததுலயே இது தான் ரொம்பப் பழசு, இந்தக் கோவிலோட பேரு, கேகிவாகனன் பதி. அப்டின்னா என்ன அர்த்தம்ப்பான்னு கேட்டான் கார்த்தி. கேகிவாகனன்னா முருகன். பதின்னா கடவுள் இருக்கும் இடம். ரெண்டையும் சேத்தா, முருகன் இருக்கும் இடம்னு அர்த்தம், இது கிட்டத்தட்ட 900 வருஷம் பழமையான கோவில்னு சொன்னார் சங்கரன். அவர் சொன்ன கணக்கெல்லாம் புரியலைன்னாலும், இந்த கோவில் ரொம்பப் பழசுன்னு மட்டும் புரிஞ்சது இவங்களுக்கு. முருகன்னா அகிலனுக்கு ரொம்பப் புடிக்கும்ன்னாலும், அந்தக் கோவில் இருந்த நிலமையப் பாத்துட்டு அவனுக்கு அந்த முருகன அவ்வளவாப் புடிக்கல. என்னருந்தாலும் வல்லகோட்டை முருகன் மாதிரி வருமா-ன்னு நெனச்சுக்கிட்டான். முருகன் கோவிலா சார் இது, நாங்கல்லாம் ஏதோ வன தேவதை கோவில்ன்னு நெனச்சுட்டு இருந்தோம் இத்தன நாளானு சொன்னார் பாரஸ்ட் ஆபீசர். கொஞ்ச நேரம் கழிச்சு ரெண்டு பசங்களும் வெளியில வந்து அப்டியே கோவிலச் சுத்தி நடக்க ஆரம்பிச்சாங்க. கோவிலச் சுத்தி காடு தான். ஒரே ஒரு ஒத்தையடிப் பாதை மட்டும் தான். கீழ கெடந்த ஒரு கல்லை ஒருத்தர் மாத்தி ஒருத்தர் எத்தி வெளாயடிக்கிட்டே சுத்திட்டு இருந்தாங்க. கார்த்தி எத்தினதுல கல் ஒரு புதர் பக்கத்தில விழுந்திடுச்சு. இப்போ அகிலன் அதை எத்தணும்.
எப்டி சார் கல்வெட்டப் பாத்த ஒடனே இது முருகன் கோவில்னு சொன்னீங்க? மயில்வாகனன்னா முருகன். அது என்ன சார் கேகிவாகனன்? புதுசா இருக்கே. கோவில்னு வெச்சிருக்கலம்ல? ஏன் பதி-ன்னு வெச்சிருக்காங்க? இந்த மாதிரி எத்தன கோவிலுக்கு போயிருக்கீங்க, என்னல்லாம் ஆராய்ச்சி பண்ணுவீங்க, இப்டி அந்தக் கோவிலப் பத்தியும் சங்கரனோட ஆராய்ச்சி பத்தியும் நெறைய விஷயம் கேட்டுட்டு இருந்தாரு பாரஸ்ட் ஆபீசர். அவரும் இவருக்கு பதில் சொல்லிட்டு இருந்தாரு.
கல்லை எத்தப் போன அகிலன், அது மேலயே கால வெச்சு, தடுமாறி பக்கத்திலருந்த சரிவில உருண்டுட்டான். ஒரு காட்டுச் செடியப் புடிச்சு நின்னான். அதுக்குள்ள கார்த்தி, அப்பா, அகிலன் பள்ளத்துல விழுந்துட்டான். ஓடி வாங்க-ன்னு கத்த ஆரம்பிச்சுட்டான். சத்தம் கேட்டு, சங்கரனும், பாரஸ்ட் ஆபீசரும் ஓடி வந்தாங்க. ஏம்ப்பா, குளக்கர பக்கமா வெளயாட வருவீங்கனு கேட்டுகிட்டே அகிலன் கிட்டப் போனார் பாரஸ்ட் ஆபீசர். செடியப் புடிச்சிருந்தவன் அப்டியே எந்திரிக்கலாம்னு பாத்தப்போ, அந்தச் செடி, வேறொட கையில வந்திருச்சு. திரும்பவும் தடுமாறி உருண்டு விழுந்துட்டான். சார், அவனப் புடிங்க சார்னு சொன்னாரு சங்கரன். ஆபீசர், பள்ளத்துல வேகமா எறங்க ஆரம்பிச்சாரு. எதுக்காக வந்தீங்க இந்தப் பக்கமெல்லாம்? என் கிட்டயே இருக்க வேண்டியதுதான? அவனுக்கு எதாவது ஒன்னுன்னா, அவங்கம்மாவுக்கு யார்டா பதில் சொல்றதுன்னு கார்த்தியப் புடிச்சு கத்திட்டு இருந்தார். சும்மா அப்டியே பாக்கலாம்னு தாம்ப்பா வந்தோம், எங்க அடிச்சிடுவாரோனு பயத்துல கன்னத்துல கை வெச்சுக்கிட்டே சொல்லிட்டுருந்தான் கார்த்தி. தடுமாறி உருண்ட அகிலன், குளத்துல விழுந்துட்டான். ஐயையோ.. சார்.. அவனக் காப்பாத்துங்க சார்னு கத்திக்கிட்டே, நீ இந்த எடத்தவிட்டு நகராதன்னு கார்த்திட்ட சொல்லிட்டு சங்கரனும் பள்ளத்துல வேகமா எறங்க ஆரம்பிச்சாரு.
பாரஸ்ட் ஆபீசர் சட்டையக் கழட்டிட்டு ஒடனே குளத்துல குதிச்சு, அகிலன தூக்கிட்டு வந்துட்டாரு. கொளத்துல விழுந்த ஒடனே ஆபீசர் அவனக் காப்பாத்திட்டதால, அவனுக்கு எந்தப் பிரச்சனையுமில்ல. முருகா முருகானு மொனகிட்டிருந்தான். பாக்கெட்லருந்த கர்ச்சீப்ப எடுத்து அவன் தலய துவட்டினாரு சங்கரன். பயத்துலயும் குளிர்லயும் நடுங்கிட்டுருந்தான் அகிலன். ஒன்னுமில்லப்பா. ஒன்னுமில்லப்பா. அகிலா.. அகிலானு அவன லேசா தட்டினார். அவரப் பாத்தான். கொஞ்சம் தெளிவா இருந்தான். தண்ணிக்குள்ள முருகனப் பாத்தேன்னு சொல்ல நெனச்சான் ஆனா எதுவுமே பேச முடியாத அளவுக்குப் பல்லெல்லாம் டைப் அடிச்சுட்டு இருந்துச்சு. தம்பி, ஈர சட்டையக் கழட்டு இந்தா இதப் போட்டுக்க-னு அவரோட யுனிபார்ம் சட்டையக் குடுத்தாரு பாரஸ்ட் ஆபீசர். என்ன சார், நீங்க? இந்த மாதிரி வரும்போது எதுக்கு சார் பசங்களக் கூட்டிட்டு வர்றீங்க? நான் உங்க கூட வந்திருக்கலைன்னா என்னாகிருக்கும்னு கேட்டார் பாரஸ்ட் ஆபீசர். இல்ல சார், எப்பவுமே பசங்க என்னோட இந்த மாதிரி வருவாங்க. இந்த தடவ தான் இப்டி ஆயிடுச்சுனு சமாளிச்சாரு சங்கரன். ஆபீசரோட காக்கி சட்டையப் போட்டதுக்கப்பறம் கொஞ்சம் கதகதப்பா இருந்தாலும் அப்பவும் நடுங்கிட்டு இருந்தான் அகிலன். சரி சரி, வாங்க ஆபீசுக்குப் போய் மொதல்ல இந்தப் பையனுக்கு சூடா டீயோ, காப்பியோ குடுக்கலாம்னு சொல்லி அவங்க 3 பேரயும் கூட்டிட்டு ரேஞ்சர் ஆபீசுக்கு கூட்டிட்டு வந்துட்டாரு ஆபீசர்.
என்னய்யா, நனஞ்சு போய் வந்திருக்க? யுனிபார்ம் எங்க? யாருக்கு என்ன ஆச்சு? அப்பதான் அகிலனப் பாத்தாரு ரேஞ்சர். பையன் வேற நனஞ்சிருக்கான். அவனுக்கு மொதல்ல சூடா ஒரு டீயக் குடுங்க அவனுக்குனு சொல்லிட்டு, ஆபீசர் பக்கமா திரும்பினாரு. அவர்கிட்ட கோவில்ல நடந்த எல்லாத்தையும் சொன்னாரு ஆபீசர். என்ன சார் நீங்க, இவ்வளவு கேர்லெஸ்ஸா இருந்திருகீங்க? பாரஸ்ட்டுக்குள்ள பசங்களக் கூட்டிப் போக ஆக்சுவலா பெர்மிஷன் கெடயாதுனு நான் மொதல்லயே சொன்னேன். நீங்க ரொம்பக் கேட்டுகிட்டீங்களேன்னு தன் சம்மதிச்சேன். நீங்க என்னடான்னா அவங்கள தனியா விட்டுட்டீங்க? அந்தப் பையனுக்கு ஏதாவது ஒன்னு ஆயிருந்துச்சுன்னா, எங்க வேலைக்கே உலை தான் தெரியுமா உங்களுக்கு?. கெளம்புங்க சார் நீங்க மொதல்லனு சங்கரன் கிட்ட சொல்லிட்டாரு ரேஞ்சர்.
இல்ல சார், அது வந்து... இன்னும் கொஞ்சம் அந்தக் கல்வெட்டப் பத்தி குறிப்பெடுக்க வேண்டிருக்குனு சொன்னார் சங்கரன். சார், அதான் கெளம்புங்கன்னு சொல்லிட்டேன்லனு கொஞ்சம் கடுப்பா சொல்லிட்டாரு ரேஞ்சர். அதுக்குள்ள பாரஸ்ட் ஆபீசர் வந்து, சார் இந்தப் பக்கமா வாங்க சார். ஐயா கோவமா இருக்காங்க வாங்கன்னு சொல்லி சங்கரனை வெளியில கூட்டிட்டு வந்தாரு. சார், இன்னும் ஒரே இரு நாள் பெர்மிஷன் கெடச்சா நல்லா இருக்கும். நான் மட்டும் வரேன். பசங்களக் கூட்டிட்டு வரல. கொஞ்சம் ரேஞ்சர் கிட்ட சொல்லுங்க சார். சரி சரி பாக்கலாம், இப்பக் கெளம்புங்க சார் நீங்க. அந்தப் பையன ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போங்க சார் மொதல்ல. பல வருஷமா யாருமே உபயோகப் படுத்தாத கொளம் அது. என்ன தண்ணியோ என்னவோ. ஏதாவது வந்துரப் போகுது சார் அவனுக்குனு சொன்னார் பாரஸ்ட் ஆபீசர். சரிங்க சார்னு சொல்லிட்டு பசங்களக் கூட்டிட்டு கெளம்பினார் சங்கரன்.
கொஞ்ச நாள்ல அந்த ரேஞ்சர் வேற எங்கயோ மாத்தலாகிப் போயிட்டாரு. அப்பறம் சங்கரனுக்கு பானாவரம் உள்ள போக பெர்மிஷனே கெடைக்கல. அகிலன் கொளத்துக்குள்ள பாத்ததப் பத்தி சங்கரன் கிட்டயோ, வேற யார்கிட்டயுமோ சொல்லவேயில்ல. அவங்கம்மா அதுக்கப்பறம் அவன சங்கரனோட போகவே விடல.
ஆனா, கேகிவாகனன் பதி கோவில் குளத்துல விழுந்ததுல ஏதோ ஒரு சக்தி கிடைசிருந்துச்சு அவனுக்கு. அவனுக்குள்ள ஒரு மாற்றம் இருந்தது மட்டும் நிஜம்.
- - - - - * - - - - -
ராகினி காலேஜ் பைனல் இயர் படிச்சுட்டு இருந்தா. அகிலனும் கார்த்தியும் ஒரு சாப்ட்வேர் கம்பெனில வேலை செஞ்சுட்டு இருந்தாங்க. கார்த்திக்கு கல்யாணம் பேசிட்டாங்க. கல்யாணத்தை சொந்த ஊர் திண்டுக்கல்ல வெச்சிருந்தாங்க.
ஞாயித்துக் கிழமை கல்யாணம். அகிலனுக்கு ஆபீஸ்ல லீவு கெடைக்காததால, அம்மவையும் ராகினியையும் மட்டும் 2 நாள் முன்னடியே அனுப்பி வெச்சுட்டான். சனிக்கிழமை வேலை முடிச்சு நைட் 7 மணிக்கு தான் வந்தான் அகிலன். வேக வேகமா ரெடியானான். டூ-வீலர எடுத்துட்டு பெருங்களத்தூர் வந்தான். ரயில்வே ஸ்டேஷன்ல வண்டியப் போட்டுட்டு டிக்கெட் வாங்கப் போனான். ஆபீஸ்ல லீவு கன்பார்ம் ஆகாததால ட்ரெய்ன் டிக்கெட் புக் பண்ணல. அந்த நேரத்துக்கு அன்-ரிசர்வ்ல போகலாம்னு நெனச்சு அஸால்ட்டா இருந்துட்டான். இப்ப வந்து பாத்தா டிக்கெட் கவுண்ட்டர்ல கூட்டம் க்யூ கட்டி நிக்குது. அந்த ஞாயித்துக் கிழமை முஹூர்த்தம் தான் அந்த மாசத்துக் கடைசி முஹூர்த்தம். அப்பறம் 1 மாசம் முஹூர்த்தமே கெடயாது. அங்க நின்னா வேலைக்கே ஆகாதுன்னு பஸ் ஸ்டாண்டுக்கு வந்துட்டான். கவர்மெண்ட் பஸ்ல போனா, நலுங்குக்கு தான் போய் சேர முடியும். எதாவது டிராவல்ஸ்ல சீட் கெடச்சா நல்லதுன்னு நெனச்சுக்கிட்டே ஒரு 'தம்'மப் போட்டான். ம்ஹூம். எல்லா டிராவல்ஸும் புல்லாவே வந்துச்சு. ஒரு பஸ்ல லாஸ்ட் சீட் தான் இருக்கு, 500 ரூபாய் பரவாயில்லியான்னு கேட்டாங்க. வேற வழி? முஹூர்த்த நாள், தீபாவளி, பொங்கல்ன்னா போதுமே. டபுள், ட்ரிப்ள்னு உங்க டிக்கெட் ரேட் எகிறிடுமேன்னு நெனச்சுக்கிட்டான். சொல்லவா முடியும்? டிக்கெட்ட வாங்கிட்டு சீட்டுக்கு போனான். பயங்கர டயர்ட். கண்ணு சும்மா ஜிவ்வுனு இருந்துச்சு. ஆகாஷ் பவன்ல வாங்கிட்டு வந்த டிபனக் கூட சாப்பிடல. அப்டியே தூங்கிட்டான்.
காலையில 4.30க்கு திண்டுக்கல் வந்திருச்சு. எறங்கினான். அந்த நேரத்துலயும் ஒரே வெக்கையா இருந்துச்சு. காத்தேயில்ல. கசகசன்னு இருந்துச்சு. மண்டபத்துக்கு போன ஒடனே குளிக்கணும்னு நெனச்சுக்கிட்டே நடந்தான். ஒரு பெருசு வந்து 'தம்பி, தீப்பெட்டி இருக்குமா'ன்னு கேட்டாரு. குடுத்தான். 'ஒரு சிகரெட் இருக்குமா'ன்னு கேட்டாரு. ஒரு மொற மொறச்சுக்கிட்டே சிகரெட்டும் குடுத்தான். ஏற்கனவே நெறைய தடவை திண்டுக்கல்லுக்கு வந்திருக்கான்-ங்கிறதால, மண்டபத்துக்கு போறதுக்கு பாதை தெரியும். கொஞ்சம் வேகமா நடந்தா 15 நிமிஷம் தான். ஆட்டோவுல போனா 150 ரூபாய் அழணும். ஏற்கனவே பஸ்-காரனுக்கு மொய் வெச்சுட்டதால ஆட்டோச் செலவையாவது மிச்சம் பண்ணலாம்னு நெனச்சுக்கிட்டே நடந்தான்.
மண்டபத்துக்கு போனதுமே சங்கரன் தான் அவன மொதல் ஆளா உள்ள கூப்பிட்டாரு. சும்மா, பட்டையும் கொட்டையுமா, பழமா இருந்தாரு. 'ஏ.. வாப்பா அகிலா. எப்டிப்பா இருக்க? எதுல வந்த, பஸ்லயா ட்ரெயின்லயானு கேட்டார். பஸ்ல தாம்ப்பா வந்தேன். ட்ரெயின்ல செம கூட்டம். டிக்கெட் கூட வாங்க முடியல. அப்பறம்ப்பா, நீங்க எப்டி இருக்கீங்க? அம்மா எப்டி இருக்காங்க? என்ன சொல்றான் கல்யாண மாப்ள? எங்க அவனன்னு கேட்டான் அகிலன். அவன் உள்ள இருக்கான்ப்பா. ரெடியாயிட்டு இருக்கான். நீ போய் மொதல்ல காபி சாப்பிடுப்பானு அவன உள்ள அனுப்பி வெச்சாரு சங்கரன். அம்மாவப் பாத்து பையக் குடுத்துட்டு பல்லு வெளக்கிட்டு வந்தான். கார்த்தியோட அம்மா காபியோட வந்தாங்க. வாப்பா, சௌரியமா இருக்கியாப்பா? இந்தான்னு காபியக் குடுத்தாங்க. சாப்பிட்டான். அப்டியே கண்ணு திரும்பவும் ஒரு சொக்கு சொக்குச்சு. ம்ஹூம் விட்டா திரும்பவும் தூங்கிருவ போல, போய் மொதல்ல குளிச்சுட்டு வாடானு சொன்னாங்க அகிலனோட அம்மா.
குளிச்சுட்டு வந்தான். டிபன் ரெடியா இருந்துச்சு. வழக்கமான இட்லி, பொங்கல் தான். ஆனா நைட்டு சாப்பிடாததால, ஒரு கட்டு கட்டினான். கார்த்திய பாக்க 'மணமகன் அறை'க்குப் போனான். அப்போதான் கார்த்தி கச்சம் கட்டிட்டு இருந்தான். டேய் மாப்ள, எப்டி இருக்க? மூஞ்சில மாப்ளக் களை வந்திருச்சு போல னு சொன்னான். நைட்டெல்லாம் தூங்கிருக்க மாட்டியே? என்ன கனவுல ஒரே கப்ளிங்ஸா?னு ரகசியமாக் கேட்டான். கார்த்தி, ஹி ஹி ஹின்னு வழிஞ்சான். டேய்.. போதும்டா. வழியுது. தொடச்சுக்க. சீக்கிரம் கச்சத்த கட்டி முடி. இல்லாட்டி பையன வரச் சொல்லுங்கோன்னு சொல்லும்போது, உனக்கு பதிலா நான் போயிடுவேன்னு சொன்னான். கார்த்தி லைட்டா கலவரமாயிட்டான். டென்சன் ஆகாத. அப்டியெல்லாம் பண்ண மாட்டேன்னு சொன்னதுக்கப்பறம் திரும்பவும் ஒரு ஹி ஹி ஹி... என்னப்பா? அடுத்த புது மாப்ள! உனக்கு எப்போ கல்யாணம்னு கேட்டாரு கார்த்தியோட அண்ணன். அட, ராகினிக்கு முடிச்சப்பறம் தான் எனக்குனு தெரியாதா உங்களுக்குன்னு சொன்னான். கார்த்தி ரெடியாயிட்டானான்னு பாக்க அவங்கம்மா வந்தாங்க. பாருப்பா, பொண்ணு கூட ரெடியாயிடுச்சு. இவன் இன்னும் இந்தக் கச்சத்தக் கட்டி முடிக்கல. சீக்கிரம் ரெடியாகுடான்னு சொன்னாங்க. அப்டியே அவங்கம்மாகிட்ட பேசிட்டு இருந்தான் அகிலன். அதுக்குள்ள யாரோ வந்து என்னவோ கேட்டாங்கன்னு எடுத்துக் குடுக்கப் போய்ட்டாங்க.
கல்யாணம் சூப்பரா நடந்துச்சு. கார்த்தி முகத்துல 1000 வாட்ஸ் வெளிச்சம். வாயெல்லாம் பல்லு தான். பொண்ணை விடவும் இவன் கொஞ்சம் கலர் கம்மிதான். ஆனா க்ரீம், பவுடரெல்லாம் போட்டு சும்மா ப்ரைட்டா இருந்தான். வந்தவங்க எல்லாரையும் சாப்பிடச் சொல்லி டைனிங் ஹாலுக்கு வழி சொல்லிட்டு இருந்தான் அகிலன். அது தவிர, கார்த்தி சொந்தக்காரங்க நெறையப் பேர அகிலனுக்கும் தெரியும்ங்கிறதால, அவங்ககிட்ட பேசிட்டு இருந்தான் அகிலன். நெறையப் பேரு, என்னப்பா, உன் பிரண்டுக்கு முடிஞ்சது. உனக்கு எப்போன்னு தான் கேட்டுட்டு இருந்தாங்க. கார்த்தி அண்ணங்கிட்ட சொன்ன அதே பதிலத்தான் இவங்க கிட்டயும் சொன்னான்.
சங்கரன் அவசரவசரமா வந்து, அகிலா, தாம்பூலப் பையெல்லாம் தீர்ந்து போச்சு. வீட்ல ஒரு 150 பை இருக்கு, போயி அதை எடுத்துட்டு வர்றியா?னு கேட்டார் சங்கரன். சரிப்பா, போயிட்டு வரேன்னு சொல்லிட்டு கிளம்பினான். ஒரு ஆட்டோவை கூப்பிட்டான். சிந்தாமணி நகர் போயிட்டு திரும்ப வரணும், எவ்வளவு சொல்றீங்க?ன்னு கேட்டான். 90 ரூபாய் ஆகும் என்றார் ஆட்டோக்காரர். 70 ரூபாய்க்கு பேசலாம். ஆனா, இப்போ அதுக்கான நேரமில்ல. அதனால சரின்னு சொல்லிட்டு ஏறி உக்காந்தான். அந்தப் பகல் நேரத்திலயும்கூட ஆள் அரவமில்லாம அமைதியா இருந்துச்சு அந்த ஏரியா.இன்னும் ரெண்டு தெரு தள்ளிதான் கார்த்தி வீடு. ஆட்டோ மக்கர் பண்ணி ஒரு குலுங்கு குலுங்கி, நின்னுடுச்சு. தம்பி, பெட்ரோல் அடக்கிதுனு நெனைக்கறேன். வீடு பக்கத்துல தான். நீங்க போயிட்டு வந்திடுங்க. நான் அதுக்குள்ள சரி பண்றேன்-னு சொன்னார் ஆட்டோக்காரர். வீட்ல ஒரு மூட்டை இருக்கு. அதை எடுத்துட்டு வரணும். இங்க வரைக்கும் தூக்கிட்டு வர முடியாது-னு சொன்னான். சரி தம்பி. நீங்க வீட்டுக்கு போய் ரெடி பண்ணி வைங்க. நான் வந்துர்றேன்னு சொன்னார் அவர். இவனும் சரின்னு சொல்லிட்டு இறங்கி நடந்தான்.
கார்த்தி வீடு இருக்கிற தெருவுக்கு வந்துட்டான். திடீர்ன்னு ஒரு அலறல் சத்தம். தெருவுல இன்னொரு முனையிலருந்து ஒருத்தன் ஓடி வந்துட்டு இருந்தான். கை கால் முட்டி எல்லாம் சிராய்ப்பு. ஒரே ரத்தம். பின்னால ஒரு ஆட்டோ. அதுல மூனு நாலு பேரு கைல கத்தி, சூரியோட. 'தூக்குடா'ன்னு ஒரு சத்தம். ஆட்டோ வேகமா வந்து ஒரே இடி. ஓடி வந்தவன் கீழ விழுந்துட்டான். கால்ல சரியான அடி. எந்திரிக்க முடியல. ஒரு டவேரா வந்து நிக்குது. இறங்கினது 'அட்டாக்' பாண்டி. என்னய விட்ரு பாண்டி, இனிமேல் உங்க வழிக்கே வர மாட்டேன். தப்பு தான். உனக்கு எதிரா கோர்ட்டுல சாட்சி சொன்னது தப்பு தான் பாண்டி. என்னய விட்ரு. நான் எங்கயாவது போய் பொழைச்சுக்கறேன். விட்ரு பாண்டி, என் குடும்பத்துக்கு என்ன விட்டா யாரும் இல்ல பாண்டி, புள்ள குட்டியெல்லாம் தெருவுக்கு வந்திரும் பாண்டி, விட்ருன்னு கையெடுத்துக் கும்புட்டான். கண்ல ஒரு மரண பயம்.
3 வருஷம்டா, 3 வருஷம் உள்ள இருந்தேன், உன்னால. நீ சொன்ன சாட்சியால. அன்னைக்கு ரோட்ல எத்தன பேரு போனாய்ங்க, போலீஸ் கேட்டப்ப எவனாவது வாயத் தொறந்தானா? நீ மட்டும் துருத்திக்கிட்டு வந்த, பெரிய இவனாட்டமா? சொல்றதையும் சொல்லிட்டு, இப்ப வந்து விட்ருன்னா ஒன்னைய விட்ருவாய்ங்களா? இப்ப ஒன்னயச் சம்பவம் பண்ணப் போறேன். இந்த தடவ சாட்சி சொல்ல எவன் வர்றான்னு பாக்கறேன்னு சொன்னான் பாண்டி. கண்ல ஒரு கொல வெறி.
அகிலன், அப்படியே நின்னுட்டான். என்ன செய்றதுன்னே தெரியல. யாரயாவது துணைக்கு கூட்டிட்டு போய் அவனைக் காப்பாத்தலாம்னு பாத்தா, தெருவுல ஒருத்தரும் இல்ல. கீழ விழுந்தவன் போட்ட சத்தத்துல, ஒருத்தர் கதவை திறந்து பாத்தார். பாண்டிய பாத்த உடனே, பதறியடிச்சு உள்ள ஓடி கதவ அடச்சிட்டார். என்ன பண்ணலாம், அவன எப்டிக் காப்பாத்தலாம்ன்னு நெனச்சுட்டு இருக்கும்போதே, வண்டிக்குள்ளருந்து அருவாள எடுத்தான் பாண்டி. 'என்னய விட்ரு பாண்டி'ன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள கழுத்தைச் சேத்து ஒரே சீவு. பாண்டி-ன்னு சொல்ல திறந்த வாய், பாஆஆ-னு திறந்தபடியே கழுத்தோட பத்தடிக்கு அந்தப் பக்கம் போய் விழுந்துச்சு. அப்பவும் கோவம் தீராத பாண்டி, தலையில்லாத முண்டத்தை ஒரு எத்து எத்தினான். மூனு நாலடி தள்ளிப் போய் பாதி சாக்கடையிலயும், பாதி ரோட்லயுமா விழுந்துச்சு. அவன் மேல, பக்கத்தில இருந்தவங்க மேல எல்லாம் திட்டு திட்டா ரத்தம். அவங்க அதைக் கண்டுக்கிட்ட மாதிரியே தெரியல. ரத்ததைப் பாத்தவுடனே அகிலனுக்கு பட படன்னு வந்திடுச்சு. அப்டியே பக்கத்தில இருந்த போஸ்ட் கம்பத்தைப் புடிச்சு நின்னுட்டான். பாண்டியும் ஆளுங்களும் கெளம்பிட்டாங்க.
முருகா... எப்டி, எப்டி இவங்களால இப்டியெல்லாம் பண்ண முடியுது? பாவம், அவனப் பாத்தா.. கண்ணு முன்னால செத்த ஒருத்தனக் காப்பாத்த முடியலயேன்னு நெனச்சான். அவனால எதையும் தெளிவா யோசிக்க முடியல. பின்னாலருந்து அவன் தோள்ல ஒரு கை விழுந்துச்சு. ஐயோ, நான் பண்ணல-னு கத்திட்டான். தம்பி, யார் நீங்க? ஊருக்கு புதுசா? பாருப்பா, இங்க பாரு, என்றார் பக்கத்து வீட்டுக்காரர். அது அது தாம்பூலப் பை.. சங்கரன்-னு குழறலா உளறினான். காலையிலயே மண்டபத்தில அவன பாத்திருந்தார் அவரு. நீங்க...? சங்கரன் வீட்டு கல்யாணத்துல, நீங்க தான-னு கேட்டார். அப்போதான் ஒவ்வொருத்தரா கதவைத் தொறந்து வெளிய வந்து என்ன நடந்துச்சு-ன்னு பாக்க ஆரம்பிச்சாங்க. கொஞ்சம் குடிக்க தண்ணி குடும்மா இவருக்குனு சொன்னார் அவர் வீட்டம்மாகிட்ட. குடிச்சப்பறம் கொஞ்சம் தெளிஞ்ச மாதிரி இருந்துச்சு அவனுக்கு. ஆமா சார், அது நான் தான். என்ன சார், ஒருத்தனை வெட்டிக் கொன்னுட்டாங்க, பட்டப் பகல்ல, அதுவும் இவ்வளவு கொடூரமா, ஆனா இங்க யாருமே அதைக் கண்டுக்கிட்ட மாதிரியே தெரியலியேனு கேட்டான். எந்த ஊரு உங்களுக்கு? சங்கரனை எப்படி தெரியும் உங்களுக்குனு கேட்டார் அவரு. நான் கார்த்தியோட பிரண்டு. வல்லக்கோட்டை. தாம்பூலப் பை தீந்து போச்சு. வீட்டுக்குப் போய் எடுத்துட்டு வா-ன்னு சொன்னார் கார்த்தி அப்பா. அதான் வந்தேன் சார். அவனோட பார்வை, இன்னும் அந்த தலயில்லாத முண்டத்து மேலயே இருந்துச்சு. வெளியூரு, அதான், உங்களுக்கு தெரியல. இது மாதிரி மாசத்துக்கு ரெண்டு மூனு நடக்கும் தம்பி. அவன் பெரிய ரவுடி. பேரு 'அட்டாக்' பாண்டி. இங்க என்ன நடந்தாலும், யாருமே கண்டும் காணாத மாதிரி போய்டுவாங்க. நீங்களும், சங்கரன் கேட்டதை எடுத்துகிட்டு, சீக்கிரம் மண்டபத்துக்கு கெளம்புங்கனு சொன்னார்.
வந்து ரொம்ப நேரமாச்சுன்னு அப்போதான் அவனுக்கு ஒரைச்சுச்சு. ஆட்டோக்காரர் ஞாபகம் வந்துச்சு. இன்னும் காணுமே அவர, போய்க் கூட்டிட்டு வந்திரலாம்னு நெனச்சு திரும்பி நடக்க ஆரம்பிச்சான். அதுக்குள்ள அவரே வந்துட்டார். தம்பி, இப்ப தான் வண்டிய சரி பண்ணேன். சீக்கிரம் வந்திருங்க. போகலாம். வர்ற வழியில பாண்டியப் பாத்தேன். ஏதோ பெரிய பிரச்சனை போலனு சொன்னார். இந்தா எதுத்தாப்ல தான் நடந்திருக்கு சம்பவம். இவரு இங்க நின்னு எல்லாத்தையும் பாத்துட்டு தானிருந்தாரு. சீக்கிரமா இவர கூட்டிட்டுப் போயிருங்கன்னு சொன்னார் அந்த தண்ணி குடுத்த வீட்டுக்காரர். அப்போதான் ஆட்டோக்காரர் நெலம புரிஞ்சு நல்லாப் பாத்தாரு. ஓ! சம்பவமா! நல்ல காலம் நீங்க அவங்க கண்ல படல தம்பி. இல்லாட்டி, உங்களயும் ஒரு காட்டு காட்டிட்டு தான் போயிருப்பாங்க. வாங்க வாங்க சீக்கிரம். போலீஸ்காரங்க வர்ற நேரமாச்சு, கெளம்பிரலாம்னு சொன்னார். தம்பி, நீங்க உண்டு, உங்க வேலையுண்டுனு போயிட்டே இருங்க. இங்க பாத்ததை அப்டியே மறந்திருங்க. யார்கிட்டயும் சொல்லிட்டிருக்காதீங்க, கெளம்புங்கனு சொன்னார் தண்ணி குடுத்தவர்.
ஆட்டோவுல ஏறினான். கார்த்தி வீட்டு வாசல்ல நிறுத்த சொல்லிட்டு உள்ள போய் தாம்பூலப் பை மூட்டையை எடுத்துட்டு வந்தான். இவன் கதவப் பூட்ற நேரத்துக்கு கரெக்ட்டா, போலீஸ் ஜீப் வந்துச்சு. எஸ்.ஐ வந்து ஸ்பாட்டை ஒரு நோட்டம் விட்டாரு. அகிலன் மூட்டைய ஆட்டோவுல ஏத்திட்டு, ஏறி உக்காந்தான். அந்த சம்பவம், அங்க கெடந்த பாடி, இதெல்லத்தையும் திரும்பவும் பாத்தான். மனசுக்குள்ள ஏகப்பட்ட குழப்பம். உயிருக்கு மதிப்பு அவ்வளவுதானா? அதையும் வெளிய சொல்லாதன்னு சொல்றாங்க. என்ன மனுஷங்க இவங்க?ன்னு நெனச்சான். ஆட்டோ ஸ்டார்ட் ஆகல. என்னங்க? சரி பண்ணியாச்சுன்னு சொன்னீங்க? திரும்ப ஏதோ மக்கர் பண்ணுது தம்பி. இந்தா 1 நிமிஷத்துல கெளம்பிடலாம்னு சொல்லிட்டு ஆட்டோ பின்னால போய் எஞ்சினப் பாக்க ஆரம்பிச்சுட்டாரு.
எவனக் கேட்டாலும் நான் பாக்கலைம்பான்னு மனசுல நெனச்சுக்கிட்டே, இங்க நடந்த சம்பவத்த யாராவது பாத்தீங்களான்னு பொதுவாக் கேட்டாரு எஸ்.ஐ. தெருவுல நாலஞ்சு பேரு நின்னு வேடிக்கை பாத்துட்டிருந்தாலும், யாருமே வாயத் தொறக்கல. அதுல ஒருத்தனக் கூப்ட்டு, நீ பாத்தியான்னு கேட்டாரு. இல்ல சார். இப்பத் தான் நான் ஆபீஸ்லருந்து வந்தேன்னு சொன்னான் அவன். ஞாயித்துக்கெழம எந்த ஆபீஸ் தொறந்திருக்காங்க உனக்கு? உன் பேரு என்ன? இங்க நடந்ததை பாத்தியா இல்லியா?ன்னு கேட்டாரு. என் பேரு பாலு சார். நான் எதுவுமே பாக்கலன்னு சொன்னான். ஏன்யா சாட்சி சொல்ல பயப்படுறீங்க? யாராவது சாட்சி சொன்னா தான் அந்தப் பாண்டியப் புடிச்சு உள்ள போட முடியும். பாலு, நீ சொல்லு பாத்தியா இல்லியா, திரும்பவும் கேட்டாரு. அடப் போங்க சார். இந்தா கெடக்கானே, இவன் 3 வருஷத்துக்கு முன்னால பாண்டிக்கு எதிரா சாட்சி சொன்னவன். நீங்களும் புடிச்சு உள்ள போட்டீங்க. போன வாரம் ரிலீஸானான். இந்தா, இவனப் போட்டுட்டான். என்னமோ என்னய மட்டும் கேக்குறீங்க, உசுருக்கு பயந்த எவனுமே பாண்டிக்கு எதிரா சாட்சி சொல்ல மாட்டான் சார். விடுங்க சார் என்னயன்னு சொல்லிக்கிட்டே வீட்டுக்குள்ள போய்ட்டான். எஸ்.ஐ.யால ஒண்ணுமே பண்ண முடியல. செம கடுப்பாயிட்டாரு. அதுக்கப்பறம் யாரயும் ஒன்னும் கேக்கல. போங்கடா செத்த பயலுகளான்னு சொல்லிட்டே ஜீப்ல ஏறினாரு.
திடீர்னு என்ன தோனுச்சோ, சார் நான் பாத்தேன் சார்ன்னு கத்திக்கிட்டே ஆட்டோவ விட்டு எறங்கிட்டான் அகிலன். தம்பி, தம்பின்னு ஆட்டோக்காரர் கூப்ட்டத காதுல வாங்காம நேரா எஸ்.ஐ கிட்ட போனான். சார், என் பேரு அகிலன். சொந்த ஊரு வல்லக்கோட்டை. ஒரு சாப்ட்வேர் கம்பெனில வேலை செய்றேன். இங்க நடந்தத நான் பாத்தேன் சார்ன்னு சொன்னான். எஸ்.ஐ டக்குனு பிரகாசமானாரு. என்ன பாத்தீங்க? கொஞ்சம் டீட்டெயிலா சொல்ல முடியுமா? பாத்ததையெல்லாம் சொன்னான் அகிலன். வெரி குட், இது போதும். நீங்க ஸ்டேஷனுக்கு வந்து இத அப்டியே எழுதிக் குடுக்க முடியுமான்னு கேட்டாரு எஸ்.ஐ. வரேன் சார். ஆனா, இப்போ வர முடியாதுன்னு சொல்லிட்டு, அதுக்கான காரணத்தையும் சொன்னான். அகிலன், நீங்க மட்டும் ஸ்ட்ராங்க இருந்தீங்கன்னா, உங்க சாட்சிய வெச்சு, அந்த 'அட்டாக்' பாண்டிக்கு தூக்கு தண்டனையே வாங்கித் தர முடியும் என்னால. செய்வீங்களா? மனிதாபிமானம் இருக்குற யாருமே செய்வாங்க சார். எனக்கு அது இருக்கு. கண்டிப்பா வரேன். எஸ்.ஐ முகத்துல ஒரு புது தெம்பு கெடச்ச மாதிரி இருந்துச்சு. ஓ.கே. மண்டபத்துக்கு போயிட்டு, நேரா ஸ்டேஷனுக்கு வந்திருங்க அகிலன்-னு சொல்லிட்டு, அவனோட நம்பர வாங்கிக்கிட்டார் எஸ்.ஐ. அந்த தெருவுல இருந்தவங்கள எல்லாம், ஒரு கேவலமான லுக் விட்டுட்டு, ஜீப்ல கெளம்பிட்டாரு.
என்ன தம்பி, இப்டி பண்ணிட்டீங்க? இனிமே உங்க கதி அவ்வளவுதான், இது அந்த தண்ணி குடுத்த வீட்டுக்காரர். தம்பி.. வண்டிப் பிரச்சனைய சரி பண்ணிட்டு வர்றதுக்குள்ள நீங்க ஒரு பெரும் பிரச்சனையக் கெளப்பிடீங்களே.. இங்க இருக்குறது நல்லதில்ல. வந்திருங்க வந்திருங்க. மண்டபத்துக்கு போயிரலாம். நீங்க சட்டுபுட்டுனு ஊருக்கு கெளம்புங்க தம்பின்னு சொன்னார் ஆட்டோக்காரர். சார், கண்ணு முன்னால நடந்த விஷயம், ஒருத்தன அநியாயமாக் கொன்றுக்காங்க, நீங்க என்னடான்னா சாட்சி சொல்ல பயப்படுறீங்க. சாட்சி சொன்ன என்னையும் பயமுறுத்துறீங்க? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க சார். இந்தா, செத்துக் கெடக்கறவன் உங்க குடும்பத்துல ஒருத்தனா இருந்திருந்தா இப்டி தான் பேசுவீங்களான்னு கேட்டான் அகிலன். போங்க தம்பி. உங்களுக்கு போய் நல்லது சொன்னேன் பாருங்கன்னு சொல்லிகிட்டே உள்ள போய் கதவடச்சுட்டாரு. இதுனால என்ன வந்தாலும் சரி. நான் பாக்க தான் போறேன்னு சொல்லிட்டே ஆட்டோக்காரரப் பாத்து சொல்லிகிட்டே ஏறினான் அகிலன்.
அதுக்கப்பறம் ஆட்டோக்காரர் எதுவுமே பேசல. மண்டபத்துல அகிலன எறக்கி விட்டுட்டு, எங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு கூப்புடுவானோன்னு நெனச்சு காசு கூட வாங்காம வண்டிய விருட்டுனு எடுத்துட்டுக் கெளம்பிட்டாரு. ஹலோ ஹலோன்னு அகிலன் 2 தடவை கூப்ட்டுப் பாத்தான். அவரு நிக்கறதா தெரியல. இவன் மூட்டையத் தூக்கிட்டு உள்ள வந்துட்டான். சங்கரனப் பாத்து மூட்டையக் குடுத்துட்டு போலீஸ் ஸ்டேஷன் போறதுக்குக் கெளம்பினான். அதுக்குள்ள அவங்கம்மாவும் ராகினியும் வந்தாங்க. உனக்காக தான்டா இவ்வளவு நேரம் உக்காந்திருந்தோம். வா, சாப்பிடப் போகலாம், பந்தி முடியப் போகுதுன்னு சொன்னாங்க அம்மா. எல்லாத்தையும் அம்மாகிட்ட சொன்னா பயந்திருவாங்கன்னு நெனச்சுட்டு, இல்லம்மா ஒரு முக்கியமான வேலை இருக்கு. நீங்க சாப்பிடுங்க. நான் வந்து சாப்பிடுறேன்னு சொன்னான். அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம். வா மொதல்ல சாப்பிடலாம்னு சொல்லிக் கூட்டிட்டுப் போய்ட்டாங்க.
சாப்பிட்டு வந்தான். சங்கரன் கூப்ட்டாரு, கூட நாலு பேரு இருந்தாங்க. கொஞ்சம் வயசானவங்க. அகிலா, இவங்கல்லாம் கெளம்பறாங்க. ரயில்வே ஸ்டேஷனுக்கு போகணும். ஒரு ஆட்டோ புடிச்சு இவங்கள ஏத்திவிட்ருப்பான்னு சொன்னாரு. சரிப்பான்னு சொன்னதும், சங்கரன் அடுத்த வேலையப் பாக்கப் போய்ட்டாரு. அவங்ககிட்ட, 'ஆட்டோ கூப்ட்டுட்டு வரேன் இருங்க'ன்னு சொல்லிட்டு வெளியில வந்தான் அகிலன்.
மண்டபத்த விட்டு எறங்கினான். அண்ணே, அந்தா, அவந்தானாம்ண்ணே-ன்னு ஒருத்தன் கத்தினான். சத்தம் வந்த பக்கம் திரும்பிப் பாத்தா பாண்டியும் அவன் ஆளுங்களும். அவங்களுக்குப் பின்னால, தாம்பூலப் பை மூட்டை ஏத்த சவாரி வந்த ஆட்டோக்காரர் அவசரம் அவசரமா வண்டியக் கெளப்பிட்டிருந்தாரு. அவனுங்க வர்ற வேகத்துக்கு, இவனக் கை வேற கால் வேறன்னு வகுந்திருவாங்க. அகிலனுக்கு, ஓடிறணும்னு மட்டும் தோனுது. எந்தப் பக்கம் ஓடுறதுன்னே தெரியல. அதுக்குள்ள பாண்டியும் ஆளுங்களும் கொஞ்சம் பக்கத்துல வந்துட்டாங்க. ரோட்ல இருந்தவனெல்லாம் பாண்டியப் பாத்துட்டு தெறிச்சு ஓடிட்டான். அகிலன் ஓட ஆரம்பிச்சான். சந்து பொந்தெல்லாம் புகுந்து ஓடினான். அவனுங்களும் விடாம தொரத்துனாங்க. ..க்காளி, வெட்றா அவன, குத்துறா அவனன்னு கத்திக்கிட்டே வெரட்டுனாங்க. திரும்பிப் பாக்காம ஓடினான். எவ்வளவு தூரம் ஓடிருப்பான்னே தெரியல. அவங்க சத்ததைக் காணோம். ஓடிக்கிட்டே திரும்பிப் பாத்தான், யாரையுமே காணோம். இன்னும் கொஞ்ச தூரம் ஓடிட்டு திரும்பிப் பாத்தான். கண்ணூக்கெட்டின தூரம் வரைக்கும் யாரையுமே காணோம். பக்கத்திலருந்த ஒரு மரத்தடில நின்னான்.
ஓடி வந்ததுல படபடன்னு இருந்துச்சு. நாக்கெல்லாம் வறண்டு போச்சு. நெஞ்சு வேகமா, ரொம்ப வேகமா அடிச்சுட்டு இருந்துச்சு. நரம்பெல்லாம் வின்னு வின்னுன்னு துடிச்சுட்டிருந்துச்சு. அப்டியே அந்த மரத்து மேல சாஞ்சு நின்னான். கொஞ்சம் தண்ணி கெடச்சா நல்லயிருக்கும்ன்னு தோனுச்சு. சுத்திலும் ஒரு கடையில்ல. எச்சியக் கூட்டி முழுங்கினான். நெத்தில வழிஞ்ச வேர்வை கண்ணுக்குள்ள போய், ஒரே எரிச்சலா இருந்துச்சு. கர்சீப்ப எடுத்து மூஞ்சியத் தொடைக்கும்போது, யாரோ தோளைத் தட்டினாங்க. திரும்பிப் பாத்தா, பாண்டி. கையில கத்தி. இவனுக்கு அந்த ஒரு செகண்டு வயிறெல்லாம் கலங்கி, ஒடம்பே ஜிவ்வுனு ஆயிடுச்சு. ஐயைய்யோ... விட்ரு பாண்டி. சாட்சி சொல்ல மாட்டேன். எங்க ஊருக்கே போயிர்றேன். விட்ரு பா... ன்னு சொல்லிட்டிருக்கும்போதே, தோளை புடிச்சு ஒரு உலுக்கு உலுக்கினான் பாண்டி.
சார், திண்டுக்கல் தான நீங்க?
பாண்டி.. என்ன ஒண்ணும் பண்ணிறாத.
சார், நீங்க திண்டுக்கல்ல தான எறங்கணும்?
பாண்டி என்ன விட்ரு பாண்டி....
இன்னோரு தடவை ஒரு உலுக்கு. அப்போ தான் கண்ணை முழிச்சு கொஞ்சம் தெளிவா பாத்தான் அகிலன். சார், நான் பாண்டியில்ல சார், எம் பேரு ரமேஷ். வண்டி கெளம்பப் போகுது சார். அட, இவ்வளவு நேரம் கண்டது கனவா? எழுப்பினவனை பாத்து ஒரு அசட்டு சிரிப்பு சிரிச்சான். என்ன சார், கனவா? சரியாப் போச்சு. எறங்குங்க சார் திண்டுக்கல் வந்திருச்சு, ஏற்கனவே வண்டி அர மணி நேரம் லேட்டு-ன்னு சொன்னான் கொஞ்சம் கடுப்பா. சார், லக்கேஜ் எதுவும் வெச்சிருகீங்களா பின்னால? இல்லப்பா-ன்னு சொல்லிகிட்டே எந்திரிச்சான் அகிலன். ஹாரன் அடித்தார் டிரைவர். அண்ணே, ஒரு நிமிஷம்ண்ணே. ஒரு டிக்கெட் எறங்கணும், சார், சீக்கிரம் எறங்குங்க நேரமாச்சு. டிரைவர் வேற ஹாரன் அடிச்சுட்டாருனு சொன்னான் அவன்.
இறங்கினான். ரெண்டு மூனு ஆட்டோக்காரங்க வந்து எங்க சார் போகணும்னு கேட்டாங்க. வீட்லருந்து வண்டி வந்துட்டிருக்குன்னு சொன்னவுடனே அவங்கெல்லாம் போய்ட்டாங்க. அப்டியே, கனவப் பத்தி நெனச்சுக்கிட்டே நடக்க ஆரம்பிச்சான்.

ஒரே வெக்கையா இருந்துச்சு. காத்தேயில்ல. ஒரு பெருசு வந்து 'தம்பி, தீப்பெட்டி இருக்குமா'ன்னு கேட்டாரு.....
கேகிவாகனன் பதி கோவில் குளத்துல விழுந்ததுல ஏதோ ஒரு சக்தி கிடைசிருந்துச்சு அவனுக்கு. அவனுக்குள்ள ஒரு மாற்றம் இருந்தது மட்டும் நிஜம். அந்த சக்தி, இ.எஸ்.பி (எக்ஸ்ட்ரா சென்சேஷனல் பவர்). நடக்கப் போறதை தெரிஞ்சுக்கற சக்தி.

/* அவனுங்களும் விடாம தொரத்துனாங்க. ..க்காளி, வெட்றா அவன, குத்துறா அவனன்னு கத்திக்கிட்டே வெரட்டுனாங்க. திரும்பிப் பாக்காம ஓடினான். */
ReplyDeleteசொற்களின் கோர்வை அருமை....
/*கல்யாணம் சூப்பரா நடந்துச்சு. கார்த்தி முகத்துல 1000 வாட்ஸ் வெளிச்சம். வாயெல்லாம் பல்லு தான். பொண்ணை விடவும் இவன் கொஞ்சம் கலர் கம்மிதான். ஆனா க்ரீம், பவுடரெல்லாம் போட்டு சும்மா ப்ரைட்டா இருந்தான். வந்தவங்க எல்லாரையும் சாப்பிடச் சொல்லி டைனிங் ஹாலுக்கு வழி சொல்லிட்டு இருந்தான் அகிலன். அது தவிர, கார்த்தி சொந்தக்காரங்க நெறையப் பேர அகிலனுக்கும் தெரியும்ங்கிறதால, அவங்ககிட்ட பேசிட்டு இருந்தான் அகிலன். நெறையப் பேரு, என்னப்பா, உன் பிரண்டுக்கு முடிஞ்சது. உனக்கு எப்போன்னு தான் கேட்டுட்டு இருந்தாங்க. கார்த்தி அண்ணங்கிட்ட சொன்ன அதே பதிலத்தான் இவங்க கிட்டயும் சொன்னான். */
அந்த line-லாம் கொஞ்சம் avoid பண்ணிருக்கலாம்.. யாருடா இப்படி உனக்கு எழுத சொல்றது..
மிக்க நன்றி ஐயா.. கார்த்தி-ங்கிற ஒரு கேரக்டருக்கு கல்யாணம் நடந்திருச்சுன்னு எழுதியிருக்கேன். நல்லா விஷயம் தானடா? நீ ஏன் பீல் பண்ற? ;)
ReplyDelete