மனாமா டூ மணிலா - ஒரு ரவுண்ட் ட்ரிப்
எதிர்பாராத வேளையில் மணிலா போறதுக்கு வாய்ப்பு வந்தது எனக்கு. ஒருபக்கம் சந்தோஷமா இருந்தாலும், ஒரு பக்கம் சின்ன வருத்தம் இருந்துச்சு. ரெண்டரை வருஷமா இந்தக் கம்பெனில தானிருக்கேன். ஒரு பயலும் கண்டுக்கல. இப்போதான் கல்யாணமாகி, மனைவியை இந்த நாட்டுக்குக் கூட்டிட்டு வந்து 15-20 நாள் ஆகுது. இப்போ வந்து மணிலாவுக்கு போ, மங்காத்தாவுக்குப் போன்னு சொல்றாங்களேனு தான் வருத்தம். ஒரு புதன் கிழமை அலுவலகத்தில் இருந்தபோது ஐராவதம் (யானை சைசுக்கு இருப்பார் என்பதால் அந்தப் பெயர்) அழைத்தார். நீ அடுத்த வாரம் பிலிப்பைன்ஸ் போக வேண்டும். எனவே நாளை வரும்போது பாஸ்போர்ட் மற்றும் 2 போட்டோக்கள் எடுத்துவா என்றார். சாயங்காலம் வீட்டிற்கு வந்து கொஞ்ச நேரம் வேறு சில விஷயங்களைப் பேசிவிட்டு, ஒரு பிசினஸ் ட்ரிப்புக்கு பிலிப்பைன்ஸ் போறேன்னு சொன்னேன். ஏதோ விளையாட்டுக்கு சொல்றேன்னு நினைத்து சிரித்தாள். பிறகு நான் உண்மையைத்தான் சொல்கிறேன் எனத் தெரிந்தவுடன் (எப்படித் தான் கண்டுபிடிக்கிறாங்களோ இந்தப் பொம்பளைங்க மட்டும்) முகம் சுருங்கிவிட்டது. அஃபிஷியல் ட்ரிப் என்பதால் அவளை அழைத்துப் போக முடியாது. அதனால் தான் அந்த ரியாக்ஷன். பிர...