மனாமா டூ மணிலா - ஒரு ரவுண்ட் ட்ரிப்

எதிர்பாராத வேளையில் மணிலா போறதுக்கு வாய்ப்பு வந்தது எனக்கு. ஒருபக்கம் சந்தோஷமா இருந்தாலும், ஒரு பக்கம் சின்ன வருத்தம் இருந்துச்சு. ரெண்டரை வருஷமா இந்தக் கம்பெனில தானிருக்கேன். ஒரு பயலும் கண்டுக்கல. இப்போதான் கல்யாணமாகி, மனைவியை இந்த நாட்டுக்குக் கூட்டிட்டு வந்து 15-20 நாள் ஆகுது. இப்போ வந்து மணிலாவுக்கு போ, மங்காத்தாவுக்குப் போன்னு சொல்றாங்களேனு தான் வருத்தம்.



ஒரு புதன் கிழமை அலுவலகத்தில் இருந்தபோது ஐராவதம் (யானை சைசுக்கு இருப்பார் என்பதால் அந்தப் பெயர்) அழைத்தார். நீ அடுத்த வாரம் பிலிப்பைன்ஸ் போக வேண்டும். எனவே நாளை வரும்போது பாஸ்போர்ட் மற்றும் 2 போட்டோக்கள் எடுத்துவா என்றார்.

சாயங்காலம் வீட்டிற்கு வந்து கொஞ்ச நேரம் வேறு சில விஷயங்களைப் பேசிவிட்டு, ஒரு பிசினஸ் ட்ரிப்புக்கு பிலிப்பைன்ஸ் போறேன்னு சொன்னேன். ஏதோ விளையாட்டுக்கு சொல்றேன்னு நினைத்து சிரித்தாள். பிறகு நான் உண்மையைத்தான் சொல்கிறேன் எனத் தெரிந்தவுடன் (எப்படித் தான் கண்டுபிடிக்கிறாங்களோ இந்தப் பொம்பளைங்க மட்டும்) முகம் சுருங்கிவிட்டது. அஃபிஷியல் ட்ரிப் என்பதால் அவளை அழைத்துப் போக முடியாது. அதனால் தான் அந்த ரியாக்ஷன்.

பிரச்சனை என்னன்னா நான் திரும்ப வரும்வரை அவள் மட்டும் தனியாக இருக்க வேண்டும். இது வரையில் அவள் தனியாக இருந்ததே இல்லை. அதுவும் வெளிநாட்டில், அவ்வளவாக நண்பர்கள் இல்லாத / பழகாத ஊரில் தனியாக இருக்க வேண்டும். மன்னராட்சிக்கு எதிரா மக்கள் போராட ஆரம்பிச்சு, சில பல சின்னக் கலவரங்கள் நடந்துட்டு இருந்த நிலையில் நான் அவளைத் தனியாக விட்டுச் செல்ல வேண்டிய சூழ்நிலை.

சமாளிச்சிருவியான்னு கேட்டேன். ஏதோ சொல்ல வாயெடுத்தவள், லேசா சிரிச்சுக்கிட்டே, போயிட்டு ஜாலியா ஊர் சுத்திட்டு வாங்க என்றாள். இல்ல, நீ வேணும்னா, ஊருக்குப் போயிட்டு ஒரு 10 நாள் இருந்துட்டு வாயேன், அதுக்குள்ள நானும் வந்திருவேன், என்ன சொல்றன்னு கேட்டேன். இல்லப்பா, வேண்டாம். எதுக்கு வீண் செலவு? அலைச்சல் தான் மிச்சம். நான் சமாளிச்சிடுவேன். நீங்க தினமும் என்கிட்டப் பேசினா அதுவே போதும்ன்னு சொன்னாள். எனக்கு என்ன சொல்லி அவளைத் தேற்றுவது எனத் தெரியவில்லை. நான் ஏதாவது சொல்லப் போய் இன்னும் ஜாஸ்தி குழம்பிடப் போறாளேன்னுட்டு ஒன்னும் சொல்லலை.

சரி, கிருஷ்ணவேணி ஆண்ட்டி வீட்ல தங்கிக்கிறயா? நான் அவங்க கிட்டக் கேட்டுப் பாக்கவான்னு கேட்டேன். சரிப்பா, ஆனா அவங்க ஆபீஸ் போய்டுவாங்களே, நான் என்ன செய்யன்னு கேட்டாள். சரி, சாயங்காலம், அவங்க ஆபீஸ் முடிச்சு வரும்போது, உன்னைக் கூட்டிட்டுப் போகட்டும். காலையில, ஆபீஸ் போகும்போது, திரும்ப நம்ம வீட்டுக்கு வந்திடுன்னு சொன்னேன். சரி என்று சொன்னாள்.

கிருஷ்ணவேணி ஆண்ட்டி கிட்டப் பேசினேன். என்ன, இதுக்கெல்லாம் பர்மிஷன் கேட்டுக்கிட்டு, நீங்க போயிட்டு வாங்க. நான் பாத்துக்கறேன்னு சொன்னாங்க. எனக்கு ஓரளவுக்கு நம்பிக்கை வந்துச்சு.

வியாழக்கிழமை பாஸ்போர்ட்டையும், 2 போட்டோக்களையும் எடுத்து சென்றேன். பிலிப்பைன்ஸ் 'விசா'வுக்கான பார்ம் கொடுத்து பூர்த்தி செய்யச் சொன்னார் ஐரா. திடீரென உனக்கு பிலிப்பைன்ஸ் போவதற்கு சம்மதம் தானே எனக் கேட்டார். சம்மதம் எனச் சொன்னேன். ஞாயிற்றுக்கிழமை விசா வந்துவிடும். அன்றே நீ கிளம்ப வேண்டும். ஆயத்தமாக இரு என்றார். அப்போதான் தெரியும், நான் தனியாப் போகப் போற விஷயமே. அதுவரைக்கும் யாராவது கூட வருவாங்கன்னு தன் நெனச்சுட்டு இருந்தேன்.



வெள்ளிக்கிழமை காலையில பேக்கிங் ஆரம்பிச்சேன். என்னென்ன தேவையோ அதை முதலில் லிஸ்ட் போட்டு, அதுக்கு தகுந்த மாதிரி எடுத்து வெச்சேன். பார்மல்ஸ், காஷுவல்ஸ், ஷூ, சாக்ஸ், உள்ளாடைகள், எல்லாம் எடுத்து வெச்சாச்சு. ஆனா, அது மட்டும் 1 தானிருக்கு. பிசினஸ் ட்ரிப் வேற, அது இல்லாம போனா நல்லா இருக்காதே...

இன்னும் பயணிப்போம்...

Comments

  1. யோவ் எங்களை எல்லாம் பாத்தா நண்பர்களாத் தெரியலையா? எங்க வீட்டுக்கு அனுப்பீருக்கலாமே!...ம்ம்..

    ReplyDelete
  2. என்ன ரவி இப்படி சொல்லிட்டீங்க? அவங்க வந்து 10-15 நாள் தான் ஆகியிருந்துச்சு. உங்களை எல்லாம் அப்போ, அவங்களுக்கு அறிமுகமே இல்லை. அப்போ நான் கிளம்பத் தயாராக இருந்த ரொம்பக் கொஞ்சம் இடைவெளியில அறிமுகம் செஞ்சு வைக்க எனக்கும் நேரம் இல்லை.

    இல்லைன்னா, நிச்சயமாக உங்க வீட்ல தங்கவைக்க கேட்டிருப்பேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2