Posts

Showing posts from February, 2015

முப்பத்து மூவாயிரம் நன்றிகள்

Image
முப்பது வருடங்களைக்  கடந்து நிற்கும் இந்த தருணத்தில், சற்றே பின்னோக்கி நான் கடந்து வந்த பாதையைப் பார்க்கிறேன். வலி, விரக்தி, மகிழ்ச்சி, வறுமை, கல்வி, பள்ளி, கல்லூரி, சந்தோஷம், அழுகை, வேதனை, கோபம், சண்டை, உறவுகள், நண்பர்கள்..... இப்படிப் பல விஷயங்கள் மனக்கண்ணில் விரிகிறது. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று.     பலருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நன்றியும் நீதியைப் போலத்தான். Justice Delayed is Justice Denied என்பது போல நன்றியையும் உடனுக்குடன் தெரிவித்துவிடவேண்டும். நீங்கள் போன மாதம் செய்த உதவிக்கு நன்றி என்று சொன்னால் எப்படி இருக்குமென்று யோசித்துப் பாருங்கள். இவ்வளவு சொல்கிற நானே, காலம் தாழ்த்தித் தான் நன்றி சொல்கிறேன். நாட்கள், மாதங்கள் இல்லை. சில பல வருடங்கள் கழித்து நன்றி சொல்கிறேன். முதலாவது நன்றி இறைவனுக்கு. நான் ஒன்றும் பெரிதாய் சாதித்துவிடவில்லை என்றாலும், வாழ்வில் இந்த இடத்தை அடைய உறுதுணையாய் இருந்த என் அப்பா, அம்மாவுக்கு நன்றிகள். ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக்கேட்ட தாய். மகன்தந்த...