Posts

Showing posts from February, 2016

சுட்டதை சுட்ட கதை

ரொம்ப நாளைக்கு அப்பறம் நேத்து ரேடியோ மிர்ச்சி கேட்டேன். செந்தில் இப்போ "சுட்ட கதை"-ன்னு ஒரு நிகழ்ச்சி பண்றார். "நீங்க நான் ராஜா சார்" நிகழ்ச்சிக்கு பதிலா இப்போ இந்த "சுட்ட கதை" வருது-ன்னு நினைக்கறேன். அதுல ஒரு சுட்ட கதை சொன்னார் செந்தில். ஒரு அப்பாவுக்கும் பொண்ணுக்கும் நடக்கற உரையாடல். அந்த பொண்ணு, "அப்பா, அந்த D ப்ளாக் சந்தோஷ் ஒருநாள் நீ எனக்கு ஸ்பெஷல் ப்ரெண்ட்-னு சொன்னான். அப்போலருந்து அவன பாத்தாலே என்னால நார்மலா இருக்க முடியல. படபடப்பா இருக்கு. ஏதோ தப்பு பண்றமோ-னு தோணுதுப்பா" என்கிறாள். "ஸ்வேதா நீ ரெண்டாம் கிளாஸ் படிக்கற வரைக்கும் மூச்சா வந்தா சொல்லத் தெரியாது. அடக்கவும் தெரியாது. யூனிபார்ம் ஸ்கர்ட்-லயே போயிடுவ. சாயுங்காலம் வரும்போது அப்பா இந்த ஸ்கர்ட் ஒரே நாத்த கப்பு -னு சொல்லுவ" என்கிறார். அந்தப் பெண் கோபத்துடன் "அப்பா நான் என்ன சொல்றேன்.. நீ என்ன சொல்ற.." என்று கேட்கிறாள். "ஸ்வேதா.. உனக்கு இப்போ மூச்சா வந்தா அதே மாதிரி தான் ஸ்கர்ட்-லயே போயிடுவியா சொல்லு" என்று கேட்கிறார். அந்தப் பெண் வெட்கத்துடனும்