சுட்டதை சுட்ட கதை

ரொம்ப நாளைக்கு அப்பறம் நேத்து ரேடியோ மிர்ச்சி கேட்டேன். செந்தில் இப்போ "சுட்ட கதை"-ன்னு ஒரு நிகழ்ச்சி பண்றார். "நீங்க நான் ராஜா சார்" நிகழ்ச்சிக்கு பதிலா இப்போ இந்த "சுட்ட கதை" வருது-ன்னு நினைக்கறேன்.

அதுல ஒரு சுட்ட கதை சொன்னார் செந்தில். ஒரு அப்பாவுக்கும் பொண்ணுக்கும் நடக்கற உரையாடல். அந்த பொண்ணு, "அப்பா, அந்த D ப்ளாக் சந்தோஷ் ஒருநாள் நீ எனக்கு ஸ்பெஷல் ப்ரெண்ட்-னு சொன்னான். அப்போலருந்து அவன பாத்தாலே என்னால நார்மலா இருக்க முடியல. படபடப்பா இருக்கு. ஏதோ தப்பு பண்றமோ-னு தோணுதுப்பா" என்கிறாள்.

"ஸ்வேதா நீ ரெண்டாம் கிளாஸ் படிக்கற வரைக்கும் மூச்சா வந்தா சொல்லத் தெரியாது. அடக்கவும் தெரியாது. யூனிபார்ம் ஸ்கர்ட்-லயே போயிடுவ. சாயுங்காலம் வரும்போது அப்பா இந்த ஸ்கர்ட் ஒரே நாத்த கப்பு -னு சொல்லுவ" என்கிறார்.

அந்தப் பெண் கோபத்துடன் "அப்பா நான் என்ன சொல்றேன்.. நீ என்ன சொல்ற.." என்று கேட்கிறாள்.

"ஸ்வேதா.. உனக்கு இப்போ மூச்சா வந்தா அதே மாதிரி தான் ஸ்கர்ட்-லயே போயிடுவியா சொல்லு" என்று கேட்கிறார்.

அந்தப் பெண் வெட்கத்துடனும் கோபத்துடனும் "அப்பா என்னப்பா கேக்கற.. நான் சொன்னதுக்கும் நீ கேக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?" என்கிறார்.

"ஸ்வேதா.. நான் கேட்டதுக்கு பதில் சொல்லு" என்கிறார் அப்பா.

"போக மாட்டேன். எனக்கு கண்ட்ரோல் பண்ண தெரியும்ப்பா" என்று பதில் சொல்கிறாள் அந்தப் பெண்.

"கரெக்ட். இந்த காதல் இன்பாச்சுவேஷன் இதெல்லாம் கூட அந்த இயற்கை உபாதை மாதிரி தான். சரியான சமயம் வர வரைக்கும் கண்ட்ரோல் பண்ணனும். நேரம் வரும்போது எல்லாம் நல்லபடியா நடக்கும்" என்று சொல்கிறார் அந்த அப்பா.

"தேங்க்ஸ்-ப்பா. என் மைண்ட் இப்போ க்ளியர் ஆயிடுச்சு" என்கிறாள்.

கேக்கறதுக்கு கதை மாதிரி இருந்தாலும் இதுல பல விஷயங்கள் இருக்கு. நம்மில் எத்தனை பேர் குழந்தைகளுக்கு குறிப்பா பெண் குழந்தைகளுக்கு இந்த மாதிரி விஷயங்களை மனசு விட்டு பேசறதுக்கான ஸ்பேஸ்/ப்ரீடம் குடுத்திருக்கோம்? அப்படி குடுத்தாலும் அதில் எத்தனை பசங்க அதை வழிதப்பாமல் சரியாக யூஸ் பண்றாங்க?

என் பொண்ணு/பையன் வெரி ஓபன் டைப், அவுட்-ஸ்போக்கன்.. அப்படின்னு எல்லாம் சொல்ற எத்தனை பேருக்கு பொண்ணோ பையனோ இந்த மாதிரி பேசினா அதை ஏத்துக்கற மனப்பக்குவம் இருக்கு?

ஒருவேளை கதையா இருந்தாக்கூட ரொம்ப பக்குவமா இதை ஹேண்டில் பண்ண அந்த அப்பா பாராட்டுக்குரியவர்.

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2