Posts

Showing posts from July, 2016

நம்பர் 80

மனைவியின் பாஸ்ப்போர்ட் நிமித்தம் எம்பஸியின் அவுட்சோர்ஸ் ஆபீசுக்கு சென்றிருந்தோம். எல்லா பார்ம்களும் பூர்த்தி செய்தபின்பு, அதை சரிபார்த்துவிட்டு, டோக்கன் கொடுத்தான் அந்த அலுவலக ஆள். நம்பர் 80. உள் அறையில் இடம் இல்லை. வெளியில் இருந்த சேர்களில் அமர்ந்தோம். கடைசியாக என்ன டோக்கன் போயிருக்கிறது என்று பார்க்க உள்ளே சென்றேன். நம்பர் 73 என்று காட்டியது. வந்து மனைவியிடம் சொன்னேன். ஆனால் டோக்கனில் 16 நபர்கள் வெயிட்டிங் என்று போட்டிருந்தது. மனைவிக்கு அப்போதே கொஞ்சம் சந்தேகம். உள் அறையில் இடம் கிடைத்தவுடன் அங்கே சென்று அமர்ந்தோம். டோக்கன் நம்பர் 50 கவுண்ட்டர் 3-க்கு செல்லவும் என்று அறிவித்தனர். இப்போது மனைவி என்னைப் பார்த்து, நீங்க வந்தப்போ எப்படி 73 காட்டியிருக்கும்? இப்போதான் டோக்கன் 50 கூப்பிடுறாங்க என்றார். சத்தியமா நான் வந்து பாத்தப்போ 73 தான் போட்டிருந்தாங்கம்மா என்று சொன்னேன். ம்ஹ்ம்.. பதிலுக்கு ஒரே ஒரு தீர்க்கமான பார்வை. நான் ஒன்றும் பேசவில்லை (பேசவும் முடியுமா என்ன??). அடுத்த டோக்கன் நம்பர் கூப்பிடட்டும். அப்போது பேசிக்கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டேன் (மனதின் அடி