Posts

Showing posts from November, 2016

அகவை 60, ரேபான் கண்ணாடி, புலிநகம் செயின், புல்லட்

Image
சிங்கம் என்றால் என் தந்தைதான் செல்லம் என்றால் என் தந்தை தான் கண் தூங்கினால் துயில் நீங்கினால் என் தந்தை தான் என் தந்தை தான் எல்லோருக்கும் அவர் விந்தை தான் இன்று அப்பாவுக்கு அகவை 60. ரேபான் கண்ணாடி அணிந்து, புலிநகம் செயினை போட்டுக்கொண்டு, உத்திரியத்தை கக்கத்தில் இரண்டு பக்கமும் பறக்கவிட்டபடி புல்லட்டில் ஊரார் பார்க்க செல்லவேண்டும் என்பது அப்பாவின் ஆசை. சீனி அய்யர் (ஸ்ரீனிவாச ஐயங்கார், என் அப்பாவின் தாத்தா) குடும்பம் நொடித்து ஒன்றுமில்லாமல் ஓட்டாண்டியாகிவிட்டது என்று பேசிய ஊரார் முன்னே, நாங்கள் நொடித்துவிடவில்லை என்று காட்டவேண்டும் என்பதற்காகவே மேலே சொன்னதை செய்ய ஆசை அப்பாவுக்கு. கோவில் கைங்கர்யம், வயல்கள், தோட்டம், மாடுகள், வேலையாட்கள் என்று இருந்த குடும்பம், பாட்டியின் அகால மறைவிற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நிதிநிலை கரைந்து தோட்டம், மாடுகள், வேலையாட்கள் எல்லாம் இழந்து, கோவில் கைங்கர்யமும் கோவில் சம்பந்தப்பட்ட வயல்கள் மட்டும் எஞ்சி நின்ற சூழ்நிலையில் அப்பாவின் இரண்டு அண்ணன்களும், வேலை நிமித்தம் வெளியூர்களில் செட்டிலாகிவிட்டனர். ஆனால் அப்பா மட்