கடவுள்
படைக்கும் கடவுள் - பிரம்மா காக்கும் கடவுள் - விஷ்ணு அழிக்கும் கடவுள் - சிவன் இப்படித்தான் நமக்கெல்லாம் அந்தக்காலத்தில் சொல்லிக்குடுத்தாங்க. இந்த இன்டர்நெட் யுகத்தில் படைக்கும் கடவுள் - கூகுள் காக்கும் கடவுள் - பேஸ்புக் அழிக்கும் கடவுள் - கேம்ஸ் / ஆன்லைன் மல்டி பிளேயர் கேம் சைட்ஸ். இந்த கடவுளர்கள் எல்லாரும், மல்டிபுள் பெர்சனாலிட்டி. சில சமயம் படைக்கும் கடவுள் காக்கும் /அழிக்கும் வேலையை செய்வாரு. காக்கும் கடவுள், படைக்கும்/அழிக்கும் வேலையை செய்வாரு. படைக்கும்/காக்கும்/அழிக்கும் வேலையை ஒரே கடவுள் செய்வாரு. இப்போ எல்லாம் பல விஷயங்கள் கூகுள்-இடமிருந்து/இருப்பதால் தான் உருவாகுது/படைக்கப் படுகிறது. கார்-ல இருந்து கம்ப்யூட்டர் வரைக்கும், நண்பர்கள், நண்பிகள், வாழ்க்கைத்துணை, அந்த துணைக்கு ஒரு இணை இப்படி எந்த விஷயத்துக்கு அவரை சரணடைஞ்சாலும் கூகுள் ஆண்டவர் கண்டிப்பாக வரம் அருள்வார். சமயங்களில் நம்மைப் பத்தி நமக்கே தெரியாத விஷயங்கள் எல்லாம் இந்த கூகிளாண்டவர் தெரிஞ்சு வெச்சிருப்பாரு. யாருக்கும் தெரியக்கூடாது-ன்னு சில விஷயங்கள் மறைச்சு வெச்...