கடவுள்
காக்கும் கடவுள் - விஷ்ணு
அழிக்கும் கடவுள் - சிவன்
இப்படித்தான் நமக்கெல்லாம் அந்தக்காலத்தில் சொல்லிக்குடுத்தாங்க.
இந்த இன்டர்நெட் யுகத்தில்
படைக்கும் கடவுள் - கூகுள்
காக்கும் கடவுள் - பேஸ்புக்
அழிக்கும் கடவுள் - கேம்ஸ் / ஆன்லைன் மல்டி பிளேயர் கேம் சைட்ஸ்.
இந்த கடவுளர்கள் எல்லாரும், மல்டிபுள் பெர்சனாலிட்டி. சில சமயம் படைக்கும் கடவுள் காக்கும் /அழிக்கும் வேலையை செய்வாரு. காக்கும் கடவுள், படைக்கும்/அழிக்கும் வேலையை செய்வாரு. படைக்கும்/காக்கும்/அழிக்கும் வேலையை ஒரே கடவுள் செய்வாரு.
இப்போ எல்லாம் பல விஷயங்கள் கூகுள்-இடமிருந்து/இருப்பதால் தான் உருவாகுது/படைக்கப் படுகிறது. கார்-ல இருந்து கம்ப்யூட்டர் வரைக்கும், நண்பர்கள், நண்பிகள், வாழ்க்கைத்துணை, அந்த துணைக்கு ஒரு இணை இப்படி எந்த விஷயத்துக்கு அவரை சரணடைஞ்சாலும் கூகுள் ஆண்டவர் கண்டிப்பாக வரம் அருள்வார். சமயங்களில் நம்மைப் பத்தி நமக்கே தெரியாத விஷயங்கள் எல்லாம் இந்த கூகிளாண்டவர் தெரிஞ்சு வெச்சிருப்பாரு. யாருக்கும் தெரியக்கூடாது-ன்னு சில விஷயங்கள் மறைச்சு வெச்சிருக்கோமோ, அந்த விஷயத்தை பப்பர பப்பர பே-னு ஊருக்கே வெட்டவெளிச்சமாக்கிடுவாரு இந்த கூகிளாண்டவர். அழிக்கும் வேலையையும் சிறப்பா வெச்சு செய்வார். ஆப்பு கன்பார்ம்.
பேஸ்புக் தான், இப்போ உலகின் மிகப் பெரிய கூட்டுக் குடும்பம். அப்பா, அம்மா, அண்ணன், தங்கச்சி, அங்காளி, பங்காளி, ப்ரெண்ட், பக்கத்துக்கு வீட்டுக்காரன்/காரி, முந்தாநாள் பாத்த முனுசாமி, பஸ்-ல பாத்த மிஸ், ஷேர் ஆட்டோ-ல வந்த பிகர் இப்படி பலரும் இப்போ ஒன்னாக் கூடி கும்மியடிக்கற இடம் தான் பேஸ்புக். நட்பு, பாசம், நேசம்-னு பல விஷயங்கள் இப்போ பேஸ்புக் இருக்கறதால தான் உயிர்ப்போட இருக்கு அல்லது இருக்கற மாதிரி ஒரு மாயை. பேஸ்புக் நிறையபேருக்கு உயிர்பிச்சை குடுத்திருக்கு (நான் உள்பட). இந்த பேஸ்புக் வந்தப்பறம், வன்முறை குறைஞ்சிருக்கு-னு நினைக்கறேன். யாரையாவது புடிக்கலைன்னா அடிதடி/வெட்டுகுத்து எல்லாம் இப்போ எறங்கி அடிக்கத் தேவையில்லை. பேஸ்புக்-ல Unfriend பண்ணிட்டு பழிதீர்த்துக்கலாம். அதுக்கு முன்னாடி, அவங்க சுவத்துல போயி, அசிங்கமா எழுதலாம்.. காறித்துப்பலாம்.. கழுவி ஊத்தலாம்.. அப்பறம் அவங்களே உங்களை Unfriend பண்ணிடுவாங்க. உங்களுக்கு அந்த செலவும் மிச்சம்.

கற்பனை இப்போ உண்மைக்கு மிக அருகில் வந்திருச்சு. நம்ப
முடியலையா? இன்னிக்கு இருக்கற விர்ச்சுவல் ரியாலிட்டி கேம்ஸ், ஆன்லைன் கேம்
சைட்ஸ் பாருங்க. அதுல வர்ற கதாபாத்திரங்கள் தோற்றத்திலும், நடை உடை
பாவனைகளிலும் நிஜம் என்று நம்பக் கூடிய அளவுல வந்திருச்சு க்ராபிக்ஸ்.
துப்பாக்கி எடுத்து சுட்டலோ, கத்தி எடுத்துக் குத்தினாலோ நிஜத்தில் நடப்பது
போன்ற எல்லா ரியாக்ஷன்களும் அப்படியே இப்போ க்ராபிக்ஸால சாத்தியம்.
வாய்ப்பு கிடைச்சா ஒருத்தரை கொன்னுடலாம்-னு வெறி இருக்கற ஆளோட பேரை, அந்த
விளையாட்டுல வர வில்லனுக்கு வெச்சுடலாம். நீங்க ஹீரோ/ஹீரோயின் அவதாரம்
எடுத்து அவங்களை திரும்ப திரும்ப கொல்லலாம். செத்து செத்து விளையாடலாம்.
இந்த மாதிரி விளையாட்டுகளால பல விதங்களிலும் பாதிக்கப்படுறது குழந்தைகள்
தான். பக்கத்துக்கு வீட்டுல, எதிர் வீட்டுல அவ்வளவு ஏன், சொந்த வீட்டுலயே
இருக்கற மத்த குழந்தைகளோட விளையாடறதில்ல. உடலுக்கும் மனதுக்கும் பலம் தரும்
விளையாட்டுகளை விட்டு, குரூர எண்ணங்களை மட்டுமே விதைக்க கூடிய ஆன்லைன்
கேம்ஸ் விளையாடிட்டு இருக்காங்க குழந்தைங்க. குடும்ப உறவுகள், அவர்களுக்கான
மரியாதை, நல்ல எண்ணங்கள், நண்பர்கள் இப்படி எல்லாத்தையும் அழிச்சு வெறி
கொண்ட Zombie-யாக நம்மை மாற்றக்கூடியவர் இந்த கடவுள்.
கடவுளே இல்லை-னு சொல்றவங்க, கடவுள் இல்லை-னு சொல்லலை, இருந்த நல்லா இருக்கும்-னு தான் சொல்றேன்-னு சொல்றவங்க, இருக்கு.. ஆனா வேற மாதிரி இருக்கு-னு சொல்றவங்க இப்படி எல்லா வகையறா நாத்திகர்களையும் ஆத்திகர்களா மாத்தியிருக்கு இந்த இன்டர்நெட் யுகம்.

ஓம் கூகிளாய நமஹ:
ஓம் பேஸ்புக்காய நமஹ:
Comments
Post a Comment