Posts

Showing posts from May, 2017

ஸ்வாமி ராமானுஜர் ஸஹஸ்ராப்தி

Image
2015ல் நாராயணன் சாரும் சுந்தரராஜன் சாரும் லிப்டில் செல்லும்போது சாதாரணமாக, "ராமானுஜர் 1000வது வருஷம் வைபவம் வருது. இந்த வருஷம் ஆரம்பிச்சு 2017 வரைக்கும் 3 வருஷம் நடத்தினா நன்னாயிருக்கும்" என்று நாராயணன் சார் சொல்ல, "அவ்வளவுதானே சார், பண்ணிடலாம்" என்று சுந்தரராஜன் சார் சொல்ல, அதுவே இத்தனை பெரிய வைபவத்திற்கான ஆரம்பப்புள்ளியாக ஆனது. முதல் வருடம் குழந்தைகளை வைத்து ராமானுஜர் நாடகம் நடத்தலாம் என்றும், இரண்டாவது வருடம் பெரியவர்கள் நடிப்பதாகவும், மூன்றாவது வருடம் மீண்டும் குழந்தைகளை வைத்தே நாடகம் அரங்கேற்றி வைபவத்தை முடிக்கலாம் என்றும் முடிவானது. முதல் வருடம் ஏற்பாடுகள் ஆரம்பமாயின. பிரசன்னா கதை எழுதுவார், லக்ஷ்மி நரசிம்மன் டைரக்ட் பண்ணுவார் என்று நாராயணன் சார் சொல்ல, "நானா... அதுவும் ராமானுஜர் கதையா? சார்.. வேற யாரவது எழுதட்டுமே" என்றேன். "உங்களால முடியும்.. எழுதுங்க" என்றார் நாராயணன் சார். இதோ, 3வது வருடத்திற்கும் கதை வசனமெழுதி முடித்தாயிற்று. முதல் வருடம் நிரம்பவே அவகாசம் இருந்தது. குழந்தைகளை தமிழ் பேசவைப்பதே பெரிய விஷயமாக இருந