Posts

Showing posts from December, 2017

நீங்கள் இப்படி செய்திருக்க கூடாது பாஸ்கர்ஜி

தோராயமாக ஒரு மாதம் முன்பு ஒரு நாள் பாஸ்கர்ஜி-இடமிருந்து அழைப்பு வந்தது. ஹமாலா-ல ஒரு ஆத்துல லலிதா கல்யாணம் ஏற்பாடாகியிருக்கு சார். வீடியோ எடுக்கணும். ஆடியோ சிஸ்டம் வேணும், ஸ்பீக்கர், மிக்ஸர், 5 மைக் வேணும் சார் என்றார். பிரபந்தம் ஆடியோ சிஸ்டம் இருக்கு சார். ஆனால் 4 மைக் தான் அதில் கனெக்ட் பண்ண முடியும். கண்டிப்பா 5 மைக் வேணுமா? என்றேன். ஆமாம் சார், 2 பாட்டு, 2 மிருதங்கம், 1 வயலின். கண்டிப்பா 5 வேணும் சார் என்றார். வீடியோ-வுக்கு சிதம்பரம், அவர் மூலமாகவே ஆடியோவும் ஏற்பாடானது. டிசம்பர்  6ம் தேதி மாலை ஜுபாரா சங்கர் வீட்டில் ஆடியோ சிஸ்டம் வந்திறங்கியது. VK எனும் வெங்கடகிருஷ்ணன் தான் ஆடியோ மேற்பார்வைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார் (ஆடு நம்பர் 1). அவர் வர தாமதமாகவே நான் சென்று ஆடியோவை செட்டப் செய்தேன். ஆஜானுபாகுவான 2 ஸ்பீக்கர், அதற்கேற்றார் போல் ஸ்டான்ட். 4 அடி நீளம் 8 அடி அகலத்தில் மிக்ஸர், அள்ள அள்ளக்குறையாத அமுதசுரபி போல, வரவர வளரும் வயர்கள்.. என ஒரு ரெக்கார்டிங் ஸ்டூடியோவே அங்கிருந்தது. VK வந்து பார்த்தவுடன் மெர்சலாகிவிட்டார். சார்.. இதை எப்படி சார் நான் எல்லா ஆத்துக்...