நீங்கள் இப்படி செய்திருக்க கூடாது பாஸ்கர்ஜி

தோராயமாக ஒரு மாதம் முன்பு ஒரு நாள் பாஸ்கர்ஜி-இடமிருந்து அழைப்பு வந்தது. ஹமாலா-ல ஒரு ஆத்துல லலிதா கல்யாணம் ஏற்பாடாகியிருக்கு சார். வீடியோ எடுக்கணும். ஆடியோ சிஸ்டம் வேணும், ஸ்பீக்கர், மிக்ஸர், 5 மைக் வேணும் சார் என்றார். பிரபந்தம் ஆடியோ சிஸ்டம் இருக்கு சார். ஆனால் 4 மைக் தான் அதில் கனெக்ட் பண்ண முடியும். கண்டிப்பா 5 மைக் வேணுமா? என்றேன்.

ஆமாம் சார், 2 பாட்டு, 2 மிருதங்கம், 1 வயலின். கண்டிப்பா 5 வேணும் சார் என்றார். வீடியோ-வுக்கு சிதம்பரம், அவர் மூலமாகவே ஆடியோவும் ஏற்பாடானது. டிசம்பர்  6ம் தேதி மாலை ஜுபாரா சங்கர் வீட்டில் ஆடியோ சிஸ்டம் வந்திறங்கியது. VK எனும் வெங்கடகிருஷ்ணன் தான் ஆடியோ மேற்பார்வைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார் (ஆடு நம்பர் 1). அவர் வர தாமதமாகவே நான் சென்று ஆடியோவை செட்டப் செய்தேன். ஆஜானுபாகுவான 2 ஸ்பீக்கர், அதற்கேற்றார் போல் ஸ்டான்ட். 4 அடி நீளம் 8 அடி அகலத்தில் மிக்ஸர், அள்ள அள்ளக்குறையாத அமுதசுரபி போல, வரவர வளரும் வயர்கள்.. என ஒரு ரெக்கார்டிங் ஸ்டூடியோவே அங்கிருந்தது. VK வந்து பார்த்தவுடன் மெர்சலாகிவிட்டார்.

சார்.. இதை எப்படி சார் நான் எல்லா ஆத்துக்கும் கொண்டு போகப்போறேன்? ஒரு ஸ்பீக்கரை தூக்கவே 3 பேர் வேணும் போலருக்கே என்றார்... பிறகு தான் பல இடங்களிலும் கச்சேரி நடப்பதையே நான் புரிந்துகொண்டேன். சார், ஒன்னும் பிரச்சனையில்லை. நாளைக்கு மட்டும் அட்ஜஸ்ட் பண்ணுங்க. வெள்ளி சனி லீவுதான், ஹெல்ப்புக்கு ஆள் நிறையபேர் இருப்பாங்க என்றேன்.

தகவல் பாஸ்கர்ஜி-க்கு தெரிவிக்கப்பட்டது. உடனே ஸ்பீக்கரை கடத்த ஒரு டெம்போ ஏற்பாடு செய்துவிட்டார். 7ம் தேதி வியாழன் மதியம் ஸ்பீக்கர் Um Alhassam சென்றது. மாலை அலுவலகம் முடித்து, VK-வுக்கு உதவி செய்யலாம் என்று சென்றேன். அனால் அவர் வருவதற்குள் நந்தினி ஸ்ரீகாந்த் இல்லத்தில் நானே ஸ்பீக்கர் செட்டப் செய்துவிட்டேன். இப்படியாக நானும் ஜோதியில் ஐக்கியமானேன் (ஆடு நம்பர் 2). இதற்கிடையில் வியாழம் காலை, பிரபந்தம் ஆடியோ சிஸ்டத்துடன் ஒரு கச்சேரி நடந்தேறியது. ஆனால் அத்தனை சிறப்பாக இல்லையெனவும், எல்லா இடத்திலும் பெரிய ஆடியோ சிஸ்டம் இருந்தால் நல்லது என்றார் VK. விதி வலியது என்று அப்போது அவருக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை. Um Alhassam வீட்டில் நான் ஆடியோ செட்டப் செய்து முடிக்கவும், VK வரவும் சரியாக இருந்தது.

அடுத்தநாள் காலை அப்பரசண்டியான நான் வீடியோ உதவி, ஆடியோ உபத்திரவம், போட்டோ படுத்தல் என கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்து, எனக்கு தெரிந்த குழப்படிகளை செய்தேன். ஆனால் இறைவன் அருளாலும், ஆச்சார்ய கடாக்ஷத்தாலும் லலிதா கல்யாணம் சிறப்பாக நடந்தேறியது.

அதற்கு பிறகு சென்ற இடமெல்லாம் ஆடியோ சொதப்பல். பாலஷங்கர் அண்ணா பாஷையில் சொல்வதென்றால் "விசிலாம்பாள் சமேத சொதப்பேஸ்வரர்" அருள் பரிபூரணமாக இருந்தது. டாக்டரும் ஜாடை மாடையாக சிலமுறை நேரடியாக பலமுறை ஆடியோ சரியில்லையே என்று சொல்லிப்பார்த்தார். நானும் உடனே மிக்ஸரிலிருக்கும் எல்லா கண்ட்ரோல்களையும் இடம்வலம் மேல்கீழ் என Crossword ஆடுவேன். எனக்குத் தெரிந்தது அவ்வளவே. டாக்டர் முறைத்தபடியே  அடுத்த பாடலுக்கு ஆலாபனை தொடங்குவார். டாக்டரும் உடன் வந்தோரும் அஹிம்ஸாவாதிகள் என்பதால் உயிர்பிழைத்திருக்கிறேன்.

இனியும் பஹ்ரைன் வருவதற்கு டாக்டர் ஒப்புக்கொண்டாலும், கண்ணன் மாட்டவே மாட்டார். இத்தனைக்கும் முழுமுதல் காரணம் "பாஸ்கர்ஜி" அன்று எனக்கு விடுத்த போன் கால். ஒருகாலும் நீங்கள் அப்படி செய்திருக்க கூடாது பாஸ்கர்ஜி.

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2