அப்பாவி ரங்கமணிகளுக்கு அடிபொலி டிப்ஸ்
தங்கமணியிடம் சிக்கித்தவித்து அல்லல்படும் (என்னைப் போன்ற) அப்பாவி ரங்கமணிகளே... ஸ்கூல் லீவ் விட்டு 1 மாசமாச்சு.. தங்கமணி வெக்கேஷன் போயி 1 மாசமாச்சு.. இப்போ வந்து இந்த மாதிரி டிப்ஸ் குடுக்கறீங்களே என்பவர்களுக்கு, எனக்கு வெக்கேஷன் ஆரம்பமாகி 2 நாட்கள் தான் ஆகிறது. நாம் அலுவலகத்தில் லீவ் எடுத்துக்கொண்டு வெக்கேஷன் போனால் தான் வெக்கேஷன் என்று அர்த்தம் இல்லை. தங்கமணியும் குழந்தைகளும் மட்டும் ஊருக்குப் போவதாக ஏற்பாடாகி, ரங்கமணிகளுக்கு ஜாக்பாட் அடிக்கக்கூடும். இதுவும் நமக்கு வெக்கேஷனே. முதலில் அவர்கள் ஊருக்குப் போவதற்கு 1 வாரம் முன்பாகவே தொடங்கி கொஞ்சம் சோகமாக இருப்பது போல காட்டிக்கொள்ள வேண்டும். அவர்களை பிரிந்து எப்படி இருக்கப் போகிறோமோ என்று சில பல பிட்டுக்களை அவ்வப்போது சொல்லிவைக்க வேண்டும். ஆனால் இது ஓவர்டோஸாகிப் போனால், சரி.. நீங்களும் வந்திருங்க என்பது போலவோ, நாங்க மட்டும் எதுக்குங்க போகணும்.. நீங்க வேற இங்க தனியா கஷ்டப்படுவீங்க என்பது போலவோ எதிர்மறை விளைவுகள் வரக்கூடும். எனவே, பிட்டுகள் அளவாக இருத்தல் நலம். ஊருக்கு கிளம்பும் அன்று எந்த சச்சரவுகளுக்கும் இடம் கொடுக்கக...