காற்றலை
சிறுவயதில் பட்டம் விட்டு விளையாடும் சிறுவர்கள் மத்தியில் அஷோக் 4 பட்டங்களை இணைத்து பறக்கவிட்டு ஒரு நூலை இழுப்பதன் மூலம் திசையெல்லாம் மாற்றிப் பறக்கச் செய்து கெத்து காட்டுவான். சாதாரண பேப்பர் மடித்து செய்யும் ராக்கெட்டையே வித்யாசமாக செய்து அதில் ஒரு ரோஜாப்பூவோடு பறக்கவைத்து +1 படிக்கும்போது ஒரு பெண்ணிற்கு ப்ரொபோஸ் செய்தான். அசந்துவிட்டாள். அவளுக்கும் இவன் மீது ஒரு கடைக்கண் க்ரஷ் இருந்தது. உடனே காதலை ஏற்றுக்கொண்டாள். ஆனால் அவளை விடவும் எதையாவது பறக்கவைப்பதில் அலாதி ஈடுபாடு அஷோக்கிற்கு. இவனைவிட்டு அவள் பறந்துவிட்டாள். இவனுடன் பள்ளியில் படித்த ரோஹித்தின் தாத்தா திடீரென யார் கண்ணுக்கும் தெரியாமல் மறைந்து விடுவாராம். வீட்டில் இருக்கும் பொருளையெல்லாம் இடம் மாற்றி வைப்பாராம். சிறிது நேரத்தில் மீண்டும் கண்ணுக்கு தெரிவாராம். இந்தக் கதையை கேட்டு இவன் சிரித்து வயிறு வலித்து ஆனாலும் அடக்க முடியாமல் சிரித்தான். "டேய் ரோஹித்.. யார்கிட்ட கதை விடுற.. இவங்க தாத்தா மறைவாராம்.. வீட்ல சாமானை எடுத்து இடம் மாத்தி வைப்பாராம்.. திரும்பவும் கண்ணுக்கு தெரிவாராம்.. போடா டேய்.. யாரவது LK...