Posts

Showing posts from April, 2020

கொமௌனா Thunder Thoughts...

Image
தலைப்பைப் படித்தவுடன் லங்கோட்டின் தமிழ் பதத்தை நினைத்துக்கொண்டவர்கள் தாமாகவே மேடைக்கு வரவும். தவறினால், இன்றிரவிற்கு(ம்) தன் கையாலேயே பிடிக்காத உப்புமாவை கிண்டி சாப்பிடக்கடவது. கொரோனா தெரியும்.. அதென்ன கொமௌனா?? அதாவது கொரோனா + மௌனம் = கொமௌனா. லாக்டௌன்/வொர்க் பிரம் ஹோம் சமயத்தில் ரங்கமணிகள் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகளே, தற்போது கொமௌனா எனும் தலைப்பில் புத்தகமாக வந்துள்ளது. அதிலிருந்து சில ஹைலைட் தகவல்கள் மட்டும் இங்கே தரப்பட்டுள்ளது. வீட்டைப் பெருக்கும்போது முன்னோக்கி பெருகிக்கொண்டே செல்லவேண்டும், மாப் போட்டு துடைக்கும்போது பின்னோக்கி துடைத்துக்கொண்டே செல்லவேண்டும் என்ற பரபரப்பாக பரவிவரும் அந்த Thunder Thought சிந்தனை, இந்தப் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டதே. WFH (Work from home) ரங்கமணிகள் ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்காமல் இருப்பது நலம். நம்மில் பலர் ஆபிஸிலும் கூட RWM (Relaxed work mode)-ல் தான் இருப்போம் என்பது உள்ளிட்ட விஷயங்கள் அனைவருக்கும் தெரியவரும் அந்த தருணத்தில், ஆபீஸ் வேலை குறைந்து வீட்டு வேலை அதிகரிக்கும். மேனேஜர் இல்லாத குறையை தங்கமணி கண்டிப்பாக போக்குவார்.