கொமௌனா Thunder Thoughts...
தலைப்பைப் படித்தவுடன் லங்கோட்டின் தமிழ் பதத்தை நினைத்துக்கொண்டவர்கள் தாமாகவே மேடைக்கு வரவும். தவறினால், இன்றிரவிற்கு(ம்) தன் கையாலேயே பிடிக்காத உப்புமாவை கிண்டி சாப்பிடக்கடவது.
கொரோனா தெரியும்.. அதென்ன கொமௌனா?? அதாவது கொரோனா + மௌனம் = கொமௌனா. லாக்டௌன்/வொர்க் பிரம் ஹோம் சமயத்தில் ரங்கமணிகள் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகளே, தற்போது கொமௌனா எனும் தலைப்பில் புத்தகமாக வந்துள்ளது. அதிலிருந்து சில ஹைலைட் தகவல்கள் மட்டும் இங்கே தரப்பட்டுள்ளது.
வீட்டைப் பெருக்கும்போது முன்னோக்கி பெருகிக்கொண்டே செல்லவேண்டும், மாப் போட்டு துடைக்கும்போது பின்னோக்கி துடைத்துக்கொண்டே செல்லவேண்டும் என்ற பரபரப்பாக பரவிவரும் அந்த Thunder Thought சிந்தனை, இந்தப் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டதே.
WFH (Work from home) ரங்கமணிகள் ஸ்நாக்ஸ் கேட்டு நச்சரிக்காமல் இருப்பது நலம். நம்மில் பலர் ஆபிஸிலும் கூட RWM (Relaxed work mode)-ல் தான் இருப்போம் என்பது உள்ளிட்ட விஷயங்கள் அனைவருக்கும் தெரியவரும் அந்த தருணத்தில், ஆபீஸ் வேலை குறைந்து வீட்டு வேலை அதிகரிக்கும். மேனேஜர் இல்லாத குறையை தங்கமணி கண்டிப்பாக போக்குவார்.
ரூமில் பூட்டிக்கொண்டு லேப்டாப்-ல் படம்/வெப்ஸீரிஸ் பார்த்தாலும், அவ்வப்போது சின்னச் சின்ன வீட்டு வேலைகள் செய்யவும். ஆபீஸ் வேலைக்கு நடுவிலும் வீட்டு வேலையும் செய்யுது எம்புள்ளை/செய்யறாரு எங்க வூட்டுக்காரரு என்று தங்கமணியிடம் நமது இமேஜ் உயரும்.
நண்பர்களின் பெயரை மொபைலில் கிளையண்ட் பெயரில் மாற்றி வைத்துக்கொள்ளவும். யாரேனும் கால் செய்தால், நாம் இருக்கும் இடம் தேடி வந்து மொபைலை கொடுப்பார் தங்கமணி. இதுவே நண்பர் பெயரில் இருந்தால், நீங்களே ஒரு வெட்டி.. உங்க ப்ரெண்ட் ஒரு வெட்டி.. அப்படி என்னதான் பேசுவீங்களோ என்பது போலான வசனங்கள் வந்து விழும். அப்பறம், பேசும்போது ஆங்கிலத்தில் ஆபீஸ் கால் பேசுவது போல பேசவும். வழக்கம் போல சொல்லு மச்சி என்று சொல்லி பேசி மாட்டிக்கொண்டால், உடனே என்ன செய்தால் தப்பிக்கலாம் என்பதற்கு, புத்தகத்தை வாங்கிப் படிக்கவும்.
நண்பர்களின் பெயரை மொபைலில் கிளையண்ட் பெயரில் மாற்றி வைத்துக்கொள்ளவும். யாரேனும் கால் செய்தால், நாம் இருக்கும் இடம் தேடி வந்து மொபைலை கொடுப்பார் தங்கமணி. இதுவே நண்பர் பெயரில் இருந்தால், நீங்களே ஒரு வெட்டி.. உங்க ப்ரெண்ட் ஒரு வெட்டி.. அப்படி என்னதான் பேசுவீங்களோ என்பது போலான வசனங்கள் வந்து விழும். அப்பறம், பேசும்போது ஆங்கிலத்தில் ஆபீஸ் கால் பேசுவது போல பேசவும். வழக்கம் போல சொல்லு மச்சி என்று சொல்லி பேசி மாட்டிக்கொண்டால், உடனே என்ன செய்தால் தப்பிக்கலாம் என்பதற்கு, புத்தகத்தை வாங்கிப் படிக்கவும்.
IT துறையில் உள்ள (என் போன்ற) சிலர் மணிக்கொருமுறை வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே பிரேக் எடுத்துக்கொண்டு தீயாக வேலை செய்பவர்கள். இது போல work-pressure மற்றும் stress அதிகமாக உள்ளவர்கள், அவ்வப்போது சத்தமாக skype-ல் டெஸ்ட் கால் செய்து கிளையண்ட் கால் வந்திருப்பது போல் காட்டி, "Yes.. Ok. Let me check and get-back to you / Will be fixed before EOD" என்பது போல ஏதாவது பேசி, வெளியே இருப்பவர்களுக்கு (குறிப்பாக தங்கமணி), பிசியாக இருப்பது போல் காட்டிக்கொள்ளவும்.
அதையும் மீறி, நாம் வெட்டியாக இருப்பதை தங்கமணி கண்டுபிடுத்துவிட்டால், அக்கம்பக்கத்து வாய்களையும் வாடகைக்கு வாங்கிவந்து வம்பிழுப்பார். ரட்சகன் படத்தில் வருவது போல, நரம்பெல்லாம் முறுக்கேறி, நாக்கு துடிக்க பதிலுக்கு வார்த்தையை விட்டுட்டா, அவ்வளவு தான். லாக்-டவுன் வேற.. தப்பிக்கவே முடியாது. வெளியில வந்தா லத்தி சார்ஜ்.. வீட்டுக்குள்ள பூரிக்கட்டை என கொரோனா வைரைஸே தேவலாம் என்ற நிலை வந்துவிடும்.
அதுபோலான நேரங்களில் என்ன செய்யலாம்? அமரன் படத்தில் கார்த்திக் வாயில் ஒரு தீக்குச்சி வைத்துக்கொண்டு டயலாக் பேசுவார்.. ஞாபகம் இருக்கா?? அதே தான்.. அதையே தான் செய்யவேண்டும். வாயில் தீக்குச்சியோ, பபிள்கம்மோ வைத்துக்கொண்டு, க்ளைமாக்சில் கார்த்திக் பேசுவது போல் பேசிவிட்டால், யாருக்கும் புரியாது. கிளையண்ட் கால் என்று சொல்லி சமாளித்துவிடலாம்.
மேலதிக தகவல்களுக்கு, கொமௌனா Thunder Thoughts புத்தகம் வாங்கிப் படித்து தெரிந்து தெளிந்து கொள்ளவும்.
Comments
Post a Comment