இதிலுமா வேகம் சௌந்தர் சார்???
சௌந்தர் சாரும் குடும்பமும் இதற்கு முன்பே பஹ்ரைனில் இருந்திருந்தாலும், இப்போது திரும்பி வந்திருந்த இந்த 2 வருடங்களாகத் தான் எனக்குப் பரிச்சியம். இதற்கு முன் இருந்தபோது, அவருடைய அக்காவும் அவர் குடும்பமும் கூட பஹ்ரைனில் தான், சொந்தமும் நட்பும் புடைசூழ இருந்திருக்கிறார்கள். ஒரு காலகட்டத்தில் பலர் நிரந்தரமாக இந்தியாவுக்கு செல்ல, சௌந்தர் துபாய் சென்று சிலகாலம் கழித்து, அங்கிருந்து இந்தியா சென்றுவிட்டார். 2 வருடங்களுக்கு முன்பு, மீண்டும் துபாயில் வேலை. அங்கு சேர்ந்த சில மாதங்களில், ட்ரான்ஸ்பரில் பஹ்ரைனுக்கு வந்தார்கள். சத்சங்கத்திற்கு வர ஆரம்பித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக எல்லோருடனும் பழக ஆரம்பித்தாலும், யாருடனும் அத்தனை நெருக்கம் பாராட்டவில்லை. இன்னும் சில காலத்தில் சத்சங்கத்தில் இருக்கும் குழந்தைகளிடம் சௌந்தர் சாருக்கு கொஞ்சம் ஈடுபாடு உண்டானது. அதிலும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடம் அத்தனை பாசமாக விளையாட ஆரம்பித்தார். சுஜாதா மேடமும், வம்சியும் (கவிதார்கிக சிம்மன்) கூட கொஞ்சம் சகஜமாக பேச ஆரம்பித்திருந்தார்கள். வம்சி அவன் வயதிற்கு ஏற்ற நண்பர்கள் சத்சங்கத்தில் யாரும் இல்லையென்றாலும், மற்ற சிறு...