Posts

Showing posts from December, 2021

நடையா இது நடையா

Image
"உதிப்பன உத்தமர் சிந்தையுள்" என்பது போலே, இப்படியொரு சிந்தனை உதித்தது எந்த உத்தமர் சிந்தையிலோ?? என்ன சிந்தனையா... சொல்றேன். அதுக்கு முன்னாடி, இந்தப் பாசுரத்தோட 2வது அடியை  படிச்சுடுங்க. "ஒன்னலர் நெஞ்சமஞ்சிக் கொதித்திட * மாறி நடப்பன". இப்போ அடிமேல் அடி வெச்சு நடந்து போய் அந்த உத்தமர் யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?   அஷோக்... இந்த நாள் உன்னோட காலண்டரில் குறிச்சு வெச்சுக்கோ. நீ எப்படி என் வீட்டை இடிச்சு... (மானே தேனே பொன்மானே) நடுத்தெருவுல நிக்க வெச்சியோ, அதே மாதிரி உன்னையும் ஒருநாள் நடுத்தெருவுல நிக்க வெக்கல, என் பேர் அண்ணாமலை இல்லேடா... என்று ரஜினி சொன்ன டயலாக்கை யார் மீதோ இருக்கும் கடுப்பில், மொத்த பில்டிங்கையும் பார்த்து சொன்னது மட்டுமில்லாமல், நடுத்தெருவில் நிறுத்தியும் விட்ட அந்த மனிதருள் மாணிக்கம்... யாருன்னு தெரிஞ்சா, எனக்கும் சொல்லுங்க.   இந்த வருட சத்சங்க விளையாட்டுகளில் நடைப்பயிற்சியும் இருப்பதாக அறிவித்தனர். அறிவிப்பாளர்களே அசந்துபோகும்படி, அனைவரும் அளித்த அபாரமான பங்களிப்பு... அடேங்கப்பா லெவல். எல்லாரும் 1-2 நாட்கள் நடந்து தோராயமாக 15 முதல் 20 ஆயிரம் ஸ்டெப்கள்