உணவுத் தீவிரவாதம்
டாக்டர் கணேஷ் மற்றும் குழுவினர் இறை இசை பயணத்திற்காக பஹ்ரைன் வந்திருந்த பொழுது அறிமுகம் செய்த பதம் இது - "உணவுத் தீவிரவாதம்". பஹ்ரைன் மற்றும் துபாயில் அவருடைய குழுவினர் எதிர்கொண்ட விருந்தோம்பல் குறித்து மகிழ்ச்சியுடன் கூறுகையில் இந்தப் பதம் அறிமுகமானது. ரஞ்சனியும் குழந்தைகளும் இந்தியாவுக்கு சென்ற அந்த தினம் தொடங்கி இன்றுவரை, ஒரு வேளை கூட பசித்து உண்ணவில்லை. இங்கிருக்கும் உணவுத் தீவிரவாத தலைவர்கள் எனக்கு பசி ஏற்பட விட்டிருக்கவில்லை என்பதே நிதர்சனம். முதல் நாள் ஸ்வாதி ஸ்ரீராமின் கைவண்ணத்தில் வயிறு நிரம்பியது. அடுத்தடுத்த நாட்களில் விஜி ஸ்ரீராம், ரஞ்சனி கோசகனின் அம்மா (இனி ரகோ-அம்மா) என பலரும் எனது வாயையும் வயிற்றையும் அட்வான்ஸ் புக்கிங் செய்து கொண்டனர் என்பதே உண்மை. தினமும் கழுத்துவரை உணவைக் கொடுக்கும் அவர்கள், ஏகாதசியன்று மட்டும் கொஞ்சம் இரக்க மனதுடன் வயிற்று அளவு மட்டும் உணவு குடுத்து என் வயிற்றில் பாலை வார்த்தனர். ஆனால் அதற்கும் சேர்த்து மறுநாள் துவாதசி அன்று மீண்டும் கலவரம் ஆரம்பமாயிற்று. மோர்க்குழம்பு, சாத்தமுது (ரசம்), பருப்பு உசிலி, சாதம், என ஐந்தடுக்கு டிபன...