கையெழுத்தால் வந்த பிரச்சனை - 2
ரேங்க் கார்ட் அது தான் அடுத்த பிரச்சனையே. 2 சப்ஜெக்ட் அவுட். காலேஜா இருந்தா, அரியர்.. அடுத்த செமஸ்டர் கிளியர் பண்ணிடுவேன்-னு சொல்லி தப்பிக்கலாம். ஸ்கூல்-ல ம்ஹ்ம்.. சரி மத்த சப்ஜெக்ட்-லயாவது நல்ல மார்க் வாங்கியிருக்கோமா?? அதுவும் இல்லை. சரி.. தலையே போனாலும் தன்மானத்தை விடக்கூடாது-ன்னு வீட்ல விஷயத்தை சொல்லிட்டேன். அம்மா செம மூட் அவுட். அப்பா வீட்டுக்கு வந்தவுடனே சொல்லிட்டாங்க. அப்பாவும் கடமை தவறாம என்னைப் பின்னிட்டாரு. அடுத்த பரீட்சை-ல நல்ல மார்க் வாங்குவேன்-னு சொன்னேன். அப்பறம்தான் விட்டாரு. அப்போ தெரியல. இனி வரப்போற எல்லா exam-கும் இப்படித்தான் அடிக்கப் போறாரு.. நானும் இப்படித்தான் சொல்லப்போறேன்-னு.. விதி வலியது. அடுத்த ஒரே மாசத்துல midterm. இந்த தடவை சொன்ன சொல்லக் காப்பாத்தணும்-னு முடிவு பண்ணி வெறிகொண்டு படிக்க ஆரம்பிச்சேன். பரீட்சை முடிஞ்சு ரிசல்ட் வந்துச்சு. ரஜினி ஒரே பாட்டுல பெரிய ஆளா வர மாதிரி இங்க நீங்க கற்பனை பண்ணினால், நிர்வாகம் பொறுப்பல்ல. இந்த தடவை 3 சப்ஜெக்ட் அவுட் (என்ன கொடுமை சரவணன்). சும்மா விடுவாங்களா ராமதிலகம்.. (போன ஜென்மத்துப் புண்ணியத்தைப் பாத்து கடவுள...