ருசியான சொற்பொழிவு
சொற்பொழிவு. அதிலும் ஆன்மீக சொற்பொழிவு. பேசப்போகிறவர் பன்மொழி வித்தகர், பல மொழிகளில் புத்தகங்கள் எழுதியுள்ளார், நல்லவர், வல்லவர் எனும்படி சொற்பொழிவாற்ற வந்திருந்தவரை அறிமுகம் செய்து வைத்தார் மேடையில் பேசியவர். பன்மொழி வித்தகர் என்றவுடனே எனக்கு லேசாக அச்சம். உடன் வந்திருந்த நண்பரிடம், "அன்புல்ல தமிலு மக்கலே" என்று ஏதாவது ஆரம்பிக்கப் போகிறார் என்று சொன்னேன். ஆனால் நல்ல தமிழ் உச்சரிப்புடன் அவர் பேச ஆரம்பித்தவுடன், நண்பர் எனது மூக்கை தேடிக்கொண்டிருந்தார் மொத்தம் 7 நாட்கள் நடைபெறும் அந்த சொற்பொழிவின் முதல் நாள் அதுவும் 10 நிமிடங்கள் மட்டுமே அவரது பேச்சை கேட்க முடிந்தது (காரணம் பின்னர் சொல்கிறேன்). அந்த 10 நிமிட பேச்சில் இருந்தே அவர் ஓரளவு விஷயம் தெரிந்தவர் என தெரிந்துகொண்டேன். நேற்று மீண்டும் சென்றிருந்தேன். "செவிக்குணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்" சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் இரண்டையும் செவ்வனே செய்திருந்தனர். அங்கே கூடியிருந்த அனைவருக்கும் உணவு பார்சல் செய்யப்பட்டு தயார் நிலையிலிருந்தது. காரில் வீட்டிற்கு...