Posts

Showing posts from June, 2014

ருசியான சொற்பொழிவு

Image
சொற்பொழிவு.  அதிலும் ஆன்மீக சொற்பொழிவு. பேசப்போகிறவர் பன்மொழி வித்தகர், பல மொழிகளில் புத்தகங்கள் எழுதியுள்ளார், நல்லவர், வல்லவர் எனும்படி சொற்பொழிவாற்ற வந்திருந்தவரை அறிமுகம் செய்து வைத்தார் மேடையில் பேசியவர். பன்மொழி வித்தகர் என்றவுடனே எனக்கு லேசாக அச்சம். உடன் வந்திருந்த நண்பரிடம், "அன்புல்ல தமிலு மக்கலே" என்று ஏதாவது ஆரம்பிக்கப் போகிறார் என்று சொன்னேன். ஆனால் நல்ல தமிழ் உச்சரிப்புடன் அவர் பேச ஆரம்பித்தவுடன், நண்பர் எனது மூக்கை தேடிக்கொண்டிருந்தார் மொத்தம் 7 நாட்கள் நடைபெறும் அந்த சொற்பொழிவின் முதல் நாள் அதுவும் 10 நிமிடங்கள் மட்டுமே அவரது பேச்சை கேட்க முடிந்தது (காரணம் பின்னர் சொல்கிறேன்). அந்த 10 நிமிட பேச்சில் இருந்தே அவர் ஓரளவு விஷயம் தெரிந்தவர் என தெரிந்துகொண்டேன். நேற்று மீண்டும் சென்றிருந்தேன். "செவிக்குணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்"   சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் இரண்டையும் செவ்வனே செய்திருந்தனர். அங்கே கூடியிருந்த அனைவருக்கும் உணவு பார்சல் செய்யப்பட்டு தயார் நிலையிலிருந்தது. காரில் வீட்டிற்கு

நைனா மாமா

பெரியவர்கள் தான் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவார்கள். அது பிறந்தவுடன் நடக்கும் நிகழ்வு. குழந்தைகள் பேச ஆரம்பிக்கும்பொழுது, மழலை மொழியில் பெரியவர்களுக்கு சூட்டும் பெயர்கள் வித்தியாசமானவை. விசித்திரமானவை. அப்படி என் மகன் ஒரு நண்பருக்கு சூட்டிய பெயர் தன் நைனா மாமா. அயுண், அமினு இப்படி அந்தப் பட்டியல் நீளும். நானும் கூட என் தாத்தாவுக்கு இப்படி விசித்திரமான பெயர் சூட்டியுள்ளேன். வெங்கடவரதன் எனும் அவரது பெயர் என் வாயில் நுழையாத காரணத்தால் வந்தது  "வெங்கடேச குமார ஜலபதி". சில பல வருடங்களுக்கு முன் உறவினர் ஒருவர் அவரது குழந்தைக்கு சூட்டவிருந்த பெயர் "ஜெய வீர ஆஞ்சநேயர்". ABT-யில் ஆஞ்சநேயருக்கு பதில் இவர் மலையை தூக்க நேர்ந்திருக்கும். நல்லவேளையாக அப்படி எதுவும் நிகழவில்லை. அவரது உருவத்திற்கேற்ற அழகான பெயர் சூட்டப்பெற்றார். நைனா மாமாவின் குழந்தைகள் அவரை நைனா என்று அழைப்பார்கள். ஆதித்யாவும் அப்படியே அழைக்க ஆரம்பித்து பின்னர் மாமா அதனுடன் ஒட்டிகொண்டது. நண்பர் ஒருவரது மகள், மழலை மொழியில் என்னை "பிசன்னா மாமா" என்று தான் விளிப்பாள். இது பரவாயில்லை. அவரது