Posts

Showing posts from November, 2015

CIO - சென்சஸ்

நேற்று காலை முதல் இப்படி  ஒரு எச்சரிக்கை மெசேஜ் வாட்சாப்பில் சென்னை மழையை விடவும் பயங்கரமாக கொட்டிக்கொண்டு இருந்தது. தனி மனிதர்கள், க்ரூப் என பாகுபாடின்றி பலரிடம் இருந்து வந்துகொண்டிருந்தது. மெசேஜைப்  படிச்சேன்.. நானும் ரவுடி தானே.. என் பங்கிற்கு நானும்  பலருக்கும் பல க்ரூப்களுக்கும் பார்வேர்டினேன். ஆனா அதை ஒன்னும் அத்தனை பெருசா எடுத்துக்கல. அதனால வாட்ஸாப் ஆத்தா எனக்கு லைட்டா பாடம் புகட்ட நினைச்சு, சாயங்காலமே ஒரு சம்பவத்தை நடத்திட்டா. வீட்டுக்குப் போன கொஞ்ச நேரத்திலயே இண்டர்காம் பெல் சத்தம் கேட்டது. தங்கமணி தான் எடுத்தார். யார் நீங்க? எந்த ப்ளாட்? என்றெல்லாம் கேட்டுகொண்டிருந்தார். சரியா பதில் சொல்லலை-ன்னா கதவை திறக்காத என்று நான் சொன்னேன். உடனே இண்டர்காமை என்னிடம் கொடுத்துவிட்டார். எதிர்முனை ஆசாமியிடம் யார் நீ? எந்த ப்ளாட்-க்கு போகணும்? எதுக்கு-ன்னு விடாம கேள்வி கேட்டுட்டு இருந்தேன். சென்ட்ரல் இன்பர்மேடிக்ஸ் ஆர்கனைசேசன்-ல (CIO) இருந்து வந்திருக்கேன். உன்கிட்ட பேசணும்-னு திரும்ப திரும்ப சொல்லிட்டு இருந்தான். (பழைய)காக்கிசட்டை, குருதிப்புனல், வேட்டையாடு விளையாடு எல்லாப்

பிரசவம்

முடி திருத்தகம் சென்றிருந்தேன். வழக்கமாக எனக்கு ஒருவர் முடிதிருத்துவார். நடுவில் சில நாட்கள் அவரைக் காணவில்லை. நேற்று சென்றிருந்தபோது அவரைப் பார்த்தேன். ஊருக்கு போயிருந்தீங்களா என்று கேட்டேன். ஆமாம் சார். என் மனைவி இறந்துட்டாங்க. அதுக்காக போயிருந்தேன் என்றார் சாதாரணமாக. எப்படி என்றேன் நான். 7 மாத கர்ப்பிணியாக இருந்தாள். என்ன காரணமோ தெரியவில்லை. குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டது. அது தெரியாமலே சில நாட்கள் அவள் இருந்துவிட்டாள். அதனால் அவளும் இறக்க நேரிட்டது என்றார். அவரை சங்கடப்படுத்திவிட்டோமோ என்று பட்டது எனக்கு. என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. இறைவன் நிச்சயம் உங்களுக்கு துணை இருப்பார் என்று சொன்னேன். போதும் சார். இறைவன் ஒருவனே போதும். வேறு யாரும் வேண்டாம் என்றார். மனைவி இறந்த துக்கத்தில் இருந்து இத்தனை சீக்கிரம் மீண்டு விட்டாரா அல்லது விரக்தியில் சொன்னாரா தெரியவில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, உங்களுக்கு வேறு குழந்தை இருக்கிறதா என்று கேட்டேன். அவர் சொன்ன பதிலை கேட்டு, அந்த கேள்வியை கேட்டே இருக்க வேண்டாமோ என்று தோன்றியது. "2 குழந்தைங்க இருக்காங்க சார். ஒ