ஷ்யாம் ஸ்ரீராம்
ஸ்ரீராமும் ஸ்வாதியும் சூப்பர் மார்க்கெட் போயிருந்தார்கள். ஒவ்வொரு மாதமும் மளிகை சாமான் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கவும் போகும் அதே வழக்கமான விசிட் தான். மளிகை சாமான்களை முடித்துவிட்டு, காய்கறி பக்கம் வந்தார்கள். ஸ்ரீராம் டிராலியை வைத்துக்கொண்டு நிற்க, ஸ்வாதி காய்கறிகளை எடுக்க சென்றாள். முதலில் கொஞ்சம் காய்கறிகளை எடுத்துக்கொண்டு ஸ்வாதி வரும் வேளையில், வேறொரு பெண்மணி வந்து ஸ்ரீராமின் டிராலியில் கொஞ்சம் சாமான்களை வைத்துவிட்டு வண்டியையும் ஸ்ரீராமையும் ஒரு கணம் ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு சென்றார். யாருங்க அது? தெரியலடி என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண்மணி சென்ற திசையைப் பார்த்தான் ஸ்ரீராம். அதெப்படி யாருன்னே தெரியாம வந்து நம்ம டிராலில சாமான் வெப்பாங்க? வெச்சது மட்டுமில்லாம, அப்படியே வெச்ச கண்ணு வாங்காமப் பாக்கறா? சொல்லுங்க.. யாரு அது? என்று கோபமாக கேட்டார். சத்தியமா தெரியாதுடி... இதற்குள் அந்தப் பெண்மணி கை நிறைய சாமான்களுடன் மீண்டும் வந்தார். ஸ்வாதி கோபமாகப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, ஷ...