ஷ்யாம் ஸ்ரீராம்

ஸ்ரீராமும் ஸ்வாதியும் சூப்பர் மார்க்கெட் போயிருந்தார்கள். ஒவ்வொரு மாதமும் மளிகை சாமான் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கவும் போகும் அதே வழக்கமான விசிட் தான்.
 
 
மளிகை சாமான்களை முடித்துவிட்டு, காய்கறி பக்கம் வந்தார்கள். ஸ்ரீராம் டிராலியை வைத்துக்கொண்டு நிற்க, ஸ்வாதி காய்கறிகளை எடுக்க சென்றாள். முதலில் கொஞ்சம் காய்கறிகளை எடுத்துக்கொண்டு ஸ்வாதி வரும் வேளையில், வேறொரு பெண்மணி வந்து ஸ்ரீராமின் டிராலியில் கொஞ்சம் சாமான்களை வைத்துவிட்டு வண்டியையும் ஸ்ரீராமையும் ஒரு கணம் ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு சென்றார்.

யாருங்க அது? தெரியலடி என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண்மணி சென்ற திசையைப் பார்த்தான் ஸ்ரீராம்.
 
அதெப்படி யாருன்னே தெரியாம வந்து நம்ம டிராலில சாமான் வெப்பாங்க? வெச்சது மட்டுமில்லாம, அப்படியே வெச்ச கண்ணு வாங்காமப் பாக்கறா? சொல்லுங்க.. யாரு அது? என்று கோபமாக கேட்டார்.

சத்தியமா தெரியாதுடி...
 
இதற்குள் அந்தப் பெண்மணி கை நிறைய சாமான்களுடன் மீண்டும் வந்தார்.
 
ஸ்வாதி கோபமாகப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு,
 
ஷ்யாம், யாரு இவங்க? எதுக்கு உன்கிட்ட சண்டை போடறாங்க?
 
ஷ்யாமா? மேடம், என் பேர் ஸ்ரீராம். நீங்க வேற யாரையோ நினைச்சுட்டு என்கிட்டே பேசறீங்க.
 
ஷ்யாம்... என்ன பேசற? யாரு இந்தப் பொம்பள? மொதல்ல அதை சொல்லு...
 
ஹலோ... நீங்க யாருங்க? நீங்கபாட்டுக்கு வந்து சாமானை எங்க டிராலில வெச்சதுமில்லாம, என் ஹஸ்பண்ட் கிட்ட சண்டை போடறீங்க?
 
இதற்குள் கூட்டம் கூடிவிட்டது...
 
என்னது உன் ஹஸ்பண்டா? ஷ்யாம் என்னது இது? ஏதாவது Prank-ஆ இது? என்ன விளையாட்டு? மேடம் யாரு விளையாடறாங்க? நீங்களா நாங்களா? உங்க சாமானை தூக்கிட்டு போங்க... என்று காட்டமாக சொல்லிவிட்டு டிராலியில் இருந்த அந்தப் பெண்மணியின் சாமான்களை தூக்கி தரையில் போட்டான்.
 
ஷ்யாம் என்ன பண்ற? யாரு இந்த பொம்பள? என்று ஸ்ரீராமின் டிஷர்ட் காலரை கொத்தாக பிடித்தார் அந்தப் பெண்மணி.
 
ஸ்வாதி அந்தப் பெண்ணின் கையை தட்டிவிட்டாள்.
 
அடுத்த நொடி ஒருவர் குடுமி மற்றொருவர் கையில்..
 
ஸ்ரீராமுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
 
ரெண்டு பொண்டாட்டிகாரன் போல... என்று கூட்டத்தில் இருந்து ஒரு குரல் வந்தது.
 
"ஷாரதா" என்று குரல் கேட்டு ஸ்வாதியை விடுத்து சுற்றும் முற்றும் பார்த்தார் அந்தப் பெண்.

கூட்டத்தை விலக்கிக்கொண்டு வந்தான் ஷ்யாம்.
 
அனைவரும் இமைக்க மறந்து அசந்து போனார்கள்.. அதிசயித்து நின்றார்கள்.
 
அச்சு அசலாக ஸ்ரீராமைப் போல இருந்தான் ஷ்யாம்..
 
அவர்கள் அணிந்திருந்த டிஷர்ட் கூட கிட்டத்தட்ட ஒரே கலர்..
 
ஸ்வாதியும் ஷாரதாவும் திகைத்து நின்றனர்...
 
ஷ்யாம்.. என கத்திக்கொண்டே அவனைக் கட்டிக்கொண்டாள் ஷாரதா.
 
ஸ்வாதி ஒரு தெளிவு பிறந்தவளாய் ஸ்ரீராமைப் பார்த்தாள்.
 
நாந்தான் மொதல்லேயே சொன்னேனே என்பது போல பதிலுக்கு ஸ்ரீராம் பார்த்தான்...
 
சுபம்.

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2