தூறல் நின்னு போச்சு
இந்த ஏரியா (பாலைவனம்) பலகாலமா நம்ம கண்-ல படாம இருந்துச்சு. Cloud Seeding பண்றேன்-னு சொல்லி உங்க ஆளுங்க எனக்கு வழி காட்டிட்டாங்க. (இனிமே, அடிக்கடி) பாக்கத்தானே போறீங்க.. இந்த (காளியோட) வருணபகவானோட ஆட்டத்தை.. அப்படின்னு 1 மாசம் முன்னாடி வருணபகவான் அடிச்சு ஆடினதுல, பாலைவனத்துலயே படகு ஓட்டற அளவுக்கு தண்ணி. துபாய் குறுக்கு சந்துகள்ல விவேகானந்தர் தெருக்கள்ல எல்லாம் தண்ணியோ தண்ணி. பஸ்செல்லாம் படகாயிடுச்சு. (துபாய்) பஸ்-ஸ்டாண்டு எல்லாம் படகு ஸ்டாண்டு ஆயிடுச்சு. பேஸ்மெண்ட்/அண்டர்க்ரவுண்டு பார்க்கிங்கில் வண்டி விட்டவங்க நிலைமை ரொம்பப் பாவம். காரெல்லாம் நீர்மூழ்கி கப்பலாயிடுச்சு. எல்லாரும் இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு போன் செய்து கால் வெயிட்டிங்கில் கா(து)ல் கடுக்க காத்திருந்தாங்க.
ஒருவழியா இந்தக் கலவரமெல்லாம் முடிஞ்சு, 3-4 நாள்ல தண்ணி வடிஞ்சதுக்கப்பறம் தான் மக்களுக்கெல்லாம் கொஞ்சம் நிம்மதி.
பசங்களுக்கு (ஆதித்யா, அவ்யுக்த்) ஒரு Coding போட்டி, துபாய்-ல. நானும், சேதுமாதவன் சாரும் (அவ்யுக்த் அப்பா) பசங்களோட துபாய்-கு போகலாம்.. அதுவும் கார்-ல போகலாம்-னு ப்ளான் போட்டோம். (கார்-ல போகலாம்ங்கற ப்ளானுக்கு விதை போட்டது - மினிஸ்டர் கோசகன், அவர் குடும்பத்தோட ஏற்கனவே துபாய்-கு கார்-ல போயிட்டு வந்ததால). கிட்டதட்ட 850 கிலோமீட்டர். 8.30-9.00 மணி நேர பயணம். ஆனா ஏற்கனவே தேனி-சென்னை 9 மணி நேரம் வண்டி ஓட்டியிருக்கறதால, பெரிய விஷயமா தெரியல.
எமிரேட் விசா எல்லாம் வந்தாச்சு. வெள்ளிக்கிழமை காலை-ல கிளம்பறோம்.. சனி ஞாயிறு Coding போட்டி. திங்கள் கிழமை ரிட்டன். அப்படின்னு எல்லாம் பக்கா-வா ப்ளான் போட்டோம். Citi ப்ரசன்னா & மீரா-ஜி கிட்ட விஷயத்தை சொல்லி, த/தி/தூ-ங்க ஏற்பாடும் பண்ணிட்டோம்.
கதை-ல ஒரு ட்விஸ்ட் இல்லாம இருந்தா எப்படி... தட்டிட்டு வா-ன்னு சொன்னாலே நம்ம பசங்க (மேகம்) கொட்டிட்டு வருவாங்க.. அவங்கள மதிக்காம, கார்(கா)ல ஊர்கோலமா போறீங்க அப்படின்னு யோசிச்ச வருணபகவான், உடனே ஒரு கார்-மேகத்தை வளைகுடா மொத்தமும் கவர் பண்ற மாதிரி ஏவி விட்டுட்டார். பஹ்ரைன், சவுதி, கத்தார், எமிரேட் (UAE)னு எல்லா நாட்டுலயும், புதன்/வியாழன்/வெள்ளி/சனி 4 நாள் மழை பெய்யும். அதுவும் இங்க (பஹ்ரைன்) அங்க (துபாய்) நடுவுல (சவுதி) அப்படின்னு போற வர்ற வழியெல்லாம் மழை பெய்யும்னு கணிப்பு.
அதுவும், நம்ம தமிழ்நாடு வெதர்மேன் உள்பட பலரும் மழை கொட்டப் போகுது-னு சொல்லவும், எங்களுக்கு என்ன பண்றது-னு தெரியலை. Coding Competition நடக்குமா நடக்காதா? துபாய் போறதா வேண்டாமனு ஒரு குழப்பம். துபாய் போறது இருக்கட்டும்.. மொதல்ல சவுதி-யை தாண்டணுமே.. அங்க எவ்வளவு மழை பெய்யப் போகுதோ.. ரோடெல்லாம் என்ன நிலைமை-ல இருக்குமோ-னு இன்னொரு குழப்பம்.
துபாய் போக வண்டி வருமா??? வரும்.. ஆனா வராது...
Comments
Post a Comment