Posts

Showing posts from July, 2017

வனவாசம் - 2

Image
அப்போது... "எலேய்" என்று யாரோ சத்தம் போட்டார். எங்களை யார் கூப்பிடப்போகிறார்கள் என்று  நினைத்து, நாங்கள் தொடர்ந்து நடந்தோம். "எலேய்... உங்களத்தாண்டா. நில்லுங்கடா" என்று மீண்டும் கேட்டது. நின்று சுற்றும் முற்றும் பார்த்தோம். பக்கத்தில் இருந்த தோட்டத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவர் தான் கத்தியிருக்கிறார். அதுவும் எங்களைப் பார்த்து தான். நின்றோம். "யாருடா நீங்க? எங்கடா போறீங்க?" என்று அதட்டலாக கேட்டார். எங்களுக்கு உதறல் எடுத்தது. சீனி ஓடுடா என்று சொல்லி, நானும் ஓடத்தொடங்கினேன், மலையடிவாரத்தை நோக்கி. நாங்கள் ஓடுவதைப் பார்த்து அந்த ஆள் எதிர் திசையில் ஓடினார். வேலியிடப்பட்ட அந்த தோட்டத்தின் நுழைவு பாதை எங்களுக்கு பின்னால்... அதாவது அதைக் கடந்து வந்துவிட்டோம். அந்த ஆள் நுழைவு வரை போய், திரும்பவும் எங்களை தொடர்ந்து வந்து பிடிப்பதற்குள் நிச்சயம் கொஞ்சம் தூரம் ஓடியிருப்போம். ஆனால் கள்ளாட்டம் ஆடிய அந்த ஆள், பாதியிலேயே வேலியை எகிறி குதித்து வந்து எங்களை பிடித்துவிட்டார். "யாருடா நீங்க? எங்கடா போறீங்க?" மீண்டும் அதே கேள்வி. த

வனவாசம்

Image
நானும் சீனியும் வனவாசம் போய் இப்போது 20 வருடங்கள் ஆகியிருக்கும். டார்ஜான் என்று சொல்வது கொஞ்சம் அதிகம் தான். என்றாலும் இந்தியா இரண்டு Bear Grylls-சையோ அல்லது Steve Irwin-னையோ இழந்திருக்கிறது என்பது நிதர்சனம். இதைப் படித்துவிட்டு நீங்கள் சிரித்தால் கோவில் படத்தில் வரும் வடிவேலு போல உங்களுக்கு மிருகதோஷம் பிடிக்கும். 1997-1998 வருடம். நாங்கள் 8-வது படித்துக்கொண்டிருந்தோம். செல்லத்துரை சார் தான் க்ளாஸ் சார். தவிர அவர் அசிஸ்டன்ட் HM கூட. கொஞ்சம் மெதுவாக சமயங்களில் போரடிக்கும் விதமாக பாடம் நடத்துவார். முன் வரிசை மாணவர்களுக்கு அவர் பாடம் நடத்தும்போது சாரல் மழை தான். அவரைப் போல் இதுவரை யாரும் தும்மல் போட்டு பார்த்ததில்லை என்பது இங்கு கொசுறு செய்தி. அக் என்று சத்தம் முதலில் வரும். பின்னர் கொஞ்சம் காற்றுடன் மூக்கிலிருந்து ஹூன் என்று சத்தம் வரும். தும்மும் சமயத்தில் முன் வரிசை மாணவர்களுக்கு கண்டிப்பாக குடை தேவைப்படும். அப்போதெல்லாம் நான் கொஞ்சம் கணக்கில் (கணிதத்தில்) வீக். இப்போ மட்டும் என்னவாம் என்று கேட்பவர்களுக்கு ஆதார் அட்டை தொலைந்து போகக் கடவது. சாதாரண க்ளாஸ் டெஸ்ட் தொடங்கி