பொய்யாமொழி கயல்விழி - காதல் கதை
காதல் - கல்லூரிக் காலங்களில் நம்மில் பெரும்பாலானவர்கள் கடந்து வந்திருப்போம் இந்தக் "காதலை".. இளங்கலை (UG) கல்லூரிக் காலம் தான் எத்தனை இனிமையானது.. முதல் பருவத்தின்போது அந்நியனாக பார்த்த முகங்கள் பிறகு நண்பர்களாவதும், மூன்றாம் அல்லது நான்காம் பருவத்தில் சண்டையிடுவதும், கடைசி பருவத்தில் நிகழும் Farewell நாளின்போது எல்லாரும் கட்டிப்பிடித்து கதறியழுவது என டெம்பிளேட் கல்லூரி வாழ்க்கை. நடுவே சிலபல களேபரங்கள். அதில் சிலர் வில்லனாவதுண்டு (பெரும்பாலும் ப்ரொபஸர்கள்). சிலர் ஹீரோவாவது உண்டு. ப்ரொபஸர் வில்லன் ஆனாலும் ஹீரோ ஆனாலும் அந்த பேட்ச் மாணவர்கள் கோர்ஸ் முடித்து செல்லும்வரையில் அவர் வில்லன்/ஹீரோ தான். ஆனால் கல்லூரி முடித்து வெளியே வந்தபிறகு எல்லா ப்ரொபஸர்களுமே மாணவர்களுக்கு ஹீரோ தான். படிப்பு முடித்து வெளியேறிய பிறகுதான் அவர்களிடம் அந்த இறுக்கம் குறைந்து மாணவர்களால் அவர்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. அப்படிப்பட்ட ஒரு களேபரத்தின்போது சக மாணவன் "பொய்யாமொழியை (காரணப்பெயர்) அடிச்சுட்டாய்ங்க டா" எனக் கத்திக்கொண்டே வகுப்பிற்குள் நுழைய, நண்பர்கள் அனைவரும் ஆவேசமாய் ...