ரசனை

ரசனை..
பாஷை ஓரளவுக்கே புரிந்தாலும் மலர் டீச்சர் என சொல்லிச் சொல்லி பேருவகை கொண்டிருந்த குரூப்பில் திடீரென ஒற்றைக் குரலாக ஒலித்த ஷெரில் பெயரைக் கேட்டு ஊர் உலகமே ஜிமிக்கி கம்மல் பாட்டைத் தேடியது.. சில நாட்கள் ட்ரெண்டிங்கில் இருந்த ஷெரில் பெயரை தொங்கலில் விட்டுவிட்டு இப்போது எல்லாரும் ப்ரியா வாரியர் பெயரை நம்பர் 1 ஆக்கியிருக்கிறார்கள்.
அந்தக் கண்சிமிட்டல் தான் எத்தனை எத்தனை நினைவுகளைக் கிளறியிருக்கும். எத்தனை இளவட்டங்களுக்கு போதையேற்றியிருக்கும். நினைவுகளே நிகழ்விலும் அமையப்பெற்றவர்கள், இருவருமாக சேர்ந்து அந்த நினைவுகளை அசைபோட்டுக்கொள்கிறார்கள். வெறும் நினைவுகளாக மட்டுமே அமையப்பெற்றவர்கள் யதார்த்தத்தை நினைத்து பெருமூச்சு விடுகிறார்கள்.
கொலவெறி பாடல் உலகளாவிய அளவில் ரசிக்கப்பட்டது. இப்போது குறும்பா-வும் சொடக்கு மேல சொடக்கும் எப்.எம்-களின் தேசிய கீதம். வெள்ளைப் பனிமூட்டத்தின் நடுவே பனி சிற்பம் போல சிலருக்கு தோன்றும் "அந்த ஒருவர்", வேறு யாருக்கோ "ப்பாஹ்" என ரியாக்ஷன் கொடுக்குமளவிற்கு இருப்பது இந்த பாழாய்ப்போன ரசனையாலே. ரோஸ் கலரில் சிலுக்கு சட்டை என்றாலே ராமராஜன் நினைவு வருமளவிற்கு இந்த ரசனை சிலரின் அடையாளமாகவும் இருக்கிறது.
இந்த நொடி இப்படியே உறைந்துவிடாதா என இருந்த ரசனைகள் பிறகு நினைவுகளாகி, எப்படியாவது இந்த நினைவை மட்டும் கடந்துவிடவேண்டும் என்ற போராட்டமாகவும் மாறுகிறது.

ரசனை என்ற ஒன்றுடன் தான் அன்றாடம் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் தருணங்களை தவறவிடாமல் ரசிக்கிறோமா என்ற கேள்வி தொக்கி நிற்கிறது. அப்பறம்.. இந்த ரசனை மாற்றம் நிகழும் தருணம் கடவுளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.

நாளை காதலர் தினம் ஆதலால், "இப்படி அழகான தென்னைமரத்தில் மாடு கட்டப்பட்டிருந்தது" என்ற கதைப்படி காதலின் அடிப்படையே ரசனை தான் என்று கூறியமைகிறேன்...
குறிப்பு: உண்மையான ரசனைக்காரராக இருந்தால் லைக் பட்டனை அழுத்தவும். இல்லையெனில், சிங்கிள் என்றால் நாளை உங்கள் ரெட்-ரோஸ் வாடி வதங்கிவிடும்... கமிட்டட் என்றால் கண்டிப்பாக பிரேக்-கப் தான்.. திருமணமானவர் என்றால், ஒன்றும் சொல்வதற்கில்லை.

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2