தரிகெட்டுப் போனேனே...
உள்ளங்கையில் 2 இடங்களில் காயம். வலது முழங்காலில் நல்ல சிராய்ப்பு. அங்கங்கே தசைப்பிடிப்பு. கைகால்களில் வலி. நான் ஏன் இப்படித் தரிகெட்டுப் போனேன்? காரணம் சிட்டி நாராயணனும், கோகுலனும் தான். பெரியவன் குங்பூ வேண்டாம். கிரிக்கெட்தான் பிடிக்கும் என்று சொன்னதிலிருந்து தொடங்கியது எனக்கு போதாத வேளை. வெள்ளிக்கிழமை காலைகளில் நண்பர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். பல நாட்களாக (வருடங்களாக) என்னை அழைத்தும் நான் பாராமுகமாய் இருந்துவிட்டேன். வியாழக்கிழமை பின்னிரவு 6 மணிக்கு (அதாவது வெள்ளி காலை 6 மணிக்கு) விளையாட அழைப்பார்கள். நித்ராதேவி சமேத சொப்பனேஸ்வரர் அருளாசியில் மூழ்கியிருக்கும் வேளையில் விளையாட அழைத்தால் பின்னே என்ன செய்வதாம்.. அதனால்தான் பாராமுகம். அதிலும் நடுவில் கொஞ்சம் காலமாக (ஜஸ்ட் 20 வருடங்கள் மட்டும்) கிரிக்கெட்டுடன் தொடர்பில் இல்லை. மற்றபடி நான் ஒரு ஸ்டார் பிளேயர். 8வது படிக்கும்போது ஒருநாள் கிரிக்கெட் விளையாட காலை டிபன் முடித்துவிட்டு களத்திற்கு(கிரவுண்ட்) சென்றேன். மதியம் சாப்பிட வந்துவிடுவேன் என்று சொல்லிவிட்டு சென்றவன், சிக்ஸர் போர் என விளையாட்டு ஆர்வத்தில் மறந்துவ...