எதிராத்து துளசி
எதிர் வீட்டுக்கு ஸ்ரீராம் மனைவி மக்களுடன் குடித்தனம் வந்திருக்கார். பேருக்கேத்தா போலவே, லவ குசா மாதிரி 2 ஆம்மனாட்டி பசங்க. அவ்வப்போது வீட்டுக்கு வந்து போவார். அவர் வீட்டம்மணியும் எங்காத்து தங்கமணியும் ப்ரெண்ட்ஸ் ஆகிட்டா. கேக்கவா வேணும்.. இவா லூட்டியில மொத்த பில்டிங்கும் ஏக களேபரம் தான். ஸ்ரீராமன் பேருக்கேத்தா மாதிரி ஏகபத்தினி விரதனா இருப்பார்-னு பாத்தா, அப்பறமாதான் தெரிஞ்சுது அவருக்கு எங்காத்து துளசி மேல ஒரு கண்-னு. துளசி அத்தனை அர்த்தபுஷ்டியா இல்லேன்னாலும், ஓரளவுக்காவது பாக்கற மாதிரிதான். ஒரு சமயம் அவர் துளசியைப் பாக்கறதை நான் பாத்துட்டேன். உடனே ஏதேதோ காரணம் சொல்லிட்டு கிளம்பிட்டார். அன்னிலேர்ந்து எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்தது. அதுக்கு அப்பறம் நான் இருக்கற சமயத்திலே வீட்டுக்கு வர்றதையே அவாய்ட் பண்ணிடுவார். வந்தாலும் 5-10 நிமிஷத்துக்கு மேல இருக்கறதில்லை. இந்த சின்ன சமயத்திலயும் துளசியைப் பாக்க அவர் தவறியதில்லை. அதை நானும் பாக்க தவறியதில்லை. நான் கொஞ்சம் முறைச்சவுடனே புரிஞ்சுண்டு கிளம்பிடுவார். இதை இப்படியே விடக்கூடாது-ன்னு முடிவுபண்ணி, ஒருநாள் எங்காத்து தங்கமண...