ஏர்போர்ட்
எப்போதுமே பல உணர்ச்சிமயமான நிகழ்வுகளை நிகழ்த்திக்கொண்டே இருக்கும் இடம் எனக்கு தெரிந்தவரையில் ஏர்போர்ட். எத்தனை சுவாரஸ்யங்கள் ஏக்கங்கள் பிரிவுகள் கண்ணீர்கள் பாசப்பிணைப்புகள் கோபங்கள் துக்கங்கள் சிரிப்புகள் வரவேற்புகள் வழியனுப்புகள் இன்னும் சில பல புகள் கள் ள் ள் ள் ள்... அலுவல் விஷயமாக ஊருக்குப் போயிருக்கும் அப்பாவை வரவேற்க காத்திருக்கும் குட்டிப்பெண்ணின் கண்களில் இருக்கும் தவிப்பு, உள்ளத்திலிருக்கும் பாசம், தனக்கு என்ன வாங்கிவருவாரோ என்ற அந்த ஏக்கம்.. நண்பனை/நண்பியை உற்சாகமாக கட்டியணைத்து வரவேற்று காதோரம் ஏதோ ஏடாகூட ஜோக்கை சொல்லி கொல்லென சிரிப்பை சிதறிவிட்டு.. பார்க்கும் நமக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.. காதலியை வழியனுப்ப வந்தவனின் கண்களில் இருக்கும் அந்த ஏக்கம்.. வரவேற்க வந்தவன், இந்த நொடி வருவாளா அடுத்த நொடி வருவாளா என காத்திருக்கும் கண்களில் இருக்கும் தவிப்பு கல்யாணத்திற்கு பிறகு உற்சாகமாக மனைவியை வழியனுப்பி வைக்கும் கணவனின் உடல்மொழி.. ஆனால் சோகமாக இருப்பது போல் காட்டிக்கொள்ளும் முகம்.. அதுவே திரும்பிவரும் மனைவியை வரவேற்க உற்சாகமாக ...