Posts

Showing posts from September, 2019

விக்ரம் வேதா(ளம்)

Image
அவர் பெயர் முருகனடிமை. அசந்தர்ப்பமான சமயங்களில் (கொட்டாவி விடுவது மாதிரி) நம்மையும் மறந்து அப்பா, அம்மா, கடவுளே.. என்று சொல்லுவோம். இவர் அப்படி சொல்லும் வார்த்தை - முருகா. மதுரை பூர்வீகம் என்பதாலோ என்னவோ கொஞ்சம் கள்ளழகரின் காற்று பட்டு, சமயங்களில் வீர வைணவராகவும் இருப்பார். ஆனால் உள்ளுக்குள் எப்போதும் முருகனடிமையே. மற்றபடி தானுண்டு வேலையுண்டு என்று இருப்பவர். ஆனால் பாவம், நித்யகண்டம் பூர்ணாயுசு என்பது போலத்தான் வாழ்க்கை. பிரச்சனைகளைப் போர்வையாகப் போர்த்திக்கொண்டும், பயத்தையே பசிக்கு உணவாகவும் சாப்பிட்டும் காலம் கடத்துபவர். ஒரு சமயம் ஒரு இடத்திற்குப் போக பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தப்பறம், இப்படியெல்லாம் நேரா போகவேண்டிய இடத்துக்கு டயத்துக்குப் போயிட்டா நம்ம மானம் மருவாதை என்னாகிறது-னு நினைச்சு, வேற பஸ்ஸில ஏறி சம்பந்தமே இல்லாத இடத்துக்குப் போயி, அதுக்குள்ள எல்லாரும் எங்க இருக்கீங்க எப்போ வருவீங்க-ன்னு 7-8 தடவை போன் பண்ணி சுமாரா ஒன்னரை மணிநேரம் லேட்டா போனதுக்கு அப்பறம்தான் இவருக்கு நிம்மதியா தூக்கமே வந்துச்சு. இது சும்மா சாம்பிள் தான்.. இவர் போகும் இடத்திற்கு பிரச்சனை வருமா, அ...

திருவத்திமாமலை

Image
ஆகஸ்ட் 13ம் தேதி. அதிகாலை 2.20 மணி. ஏற்கனவே 2 நாட்களாக சரியான தூக்கம் இல்லாததால் சிவந்த கண்கள் தகதகவென எரிய, பொருட்படுத்தாமல் காரில் கிளம்பினோம் நானும் அப்பாவும். கொஞ்சம் பழங்கள், 3-4 பாட்டில் தண்ணீர். பழங்களை அப்பா எடுத்துக்கொண்டார். தண்ணீர் பாட்டில்களை Backpack-ல் நான் எடுத்துக்கொண்டேன். கியூவில நிப்போம். 10 மணி வரைக்கும் பாப்போம். ஸ்வாமி பாக்க முடியம்-ங்கற மாதிரி இருந்தா நிப்போம். 7-8 மணி நேரத்துக்கும் மேல ஆகும்-ங்கற மாதிரி இருந்தா, கிளம்பிடுவோம் என்று பேசிக்கொண்டு கிளம்பினோம். ஏனென்றால் முந்தைய நாட்களில் இருந்த கூட்டத்தின் எஸ்.டி.டி அப்படி. 3 மணிக்கு காஞ்சியை அடைந்துவிட்டோம். பச்சையப்பாஸ் பார்க்கிங்-ல் தான் இடம் உள்ளது. வேறெங்கும் இடமே இல்லையென்பதால், அந்த நேரத்திலும் காவல்துறை கடமையை செவ்வனே செய்துகொண்டிருந்தது. VIP, VVIP, அமைச்சரோட அத்தை பேரனுக்கு ஆயாவோட சித்தி பொண்ணு ரேஞ்சுக்கு யார் வந்தாலும், ஒரே பதில் - Turn Left (பச்சையப்பாஸ் பார்க்கிங்). உள்ளே போனால், போய்கிட்டே இருக்கு.. எங்க வண்டிய நிறுத்தறதுன்னே தெரியாம தேடி, 30 நிமிஷம் சுத்தி, கடைசில வாஸ்து எல்லாம் பாத்து ...