தீபாவளி
தீபாவளி... தலை தீபாவளி கடந்து சில பல வருஷங்களானாலும் கூட இன்னும் மனசுல பசுமையா நிக்கிறது என்னவோ நம்ம சின்ன வயசு தீபாவளி தான். புதுத்துணி எடுக்க முடிவு செய்யறதுல ஆரம்பிக்கற தீபாவளி, தீபாவளியன்னிக்கு பட்டாசு அட்டைப் பெட்டி குப்பைகளை மொத்தமா கொளுத்தறதுல முடியும். மிச்சம் மீதி பட்டாசை எங்கம்மா எடுத்து ஒளிச்சு வெச்சிருந்தா, எப்போவாவது கார்த்திகை-ல முடியும். புதுத்துணி-ன உடனே ஏதோ கலர் கலரா துணி வாங்கப்போறோம்-னு நாம ஒரு கணக்குப்போட்டு வெச்சிருப்போம். ஆனா ஸ்கூல் யூனிஃபார்ம் தான் பல தீபாவளிகளுக்கு புதுத்துணியா கிடைச்சிருக்கு. சமயத்துல எக்ஸ்ட்ராவா ஒரு கலர் சட்டை கிடைக்கும். அந்த தீபாவளியெல்லாம் அவ்வளவு சந்தோஷமா இருக்கும். அதுவும் நாம கேக்கற பட்டாசெல்லாம் வாங்கி கொடுத்துட்டா, அவ்வளவு தான். கைலயே புடிக்க முடியாது. அப்போல்லாம் பட்டாசு கிப்ட் பாக்ஸ் இல்லாத சமயம். நாமளே பாத்து பாத்து பட்டாசு வாங்கலாம். நம்ம டேஸ்டுக்கு (என்ன பட்டாசை நக்கிப் பாத்தா வாங்குவ-ன்னு கேக்கறவன் வீட்டுக்குள்ள, தெரு பயலுக எல்லாரும் ராக்கெட் விடுவான்) தகுந்தமாதிரி மத்தாப்பு கம்மியாவும், வெடிக்கற பட்டாசு அத...