Thought Process & சமாளிஃபிகேஷன்

இந்த ரெண்டுமே பெண்களின் கவச குண்டலம் போல பிறக்கும்போதே default ஆக அவர்களிடம் இருக்கும் சிறப்புகள்.

நேத்திக்கு 2 பெண் குழந்தைகள் முறையே 9 வயசு (4ம் கிளாஸ்), 7 வயசு (1ம் கிளாஸ்). வண்டில பின் சீட்ல உக்காந்து பேசிட்டு வந்தாங்க. எங்கே எப்போது ஆரம்பிச்சது-னு தெரியலை. நான் தற்செயலா அதை கேட்டு மிரண்டுட்டேன்.. குழந்தை-லேயே அவங்க சிந்திக்கும் திறனும், சமாளிக்கும் திறனும் பாத்து அப்படியே மெர்சலாயிட்டேன்.

அவங்க ஏதேதோ பேசிட்டு வந்தாங்க..

சிக்னலில் நின்றபோது நான் கேட்டது மட்டும்..

7 வயசு குழந்தை: நான் இந்த வருஷம் 1st ஸ்டாண்டர்ட் பாஸ் பண்ணி, என்னை ஸ்பெஷல் ப்ரோமோஷன் பண்ணி, 10th ஸ்டாண்டர்ட்-க்கு அனுப்பிடுவாங்க தெரியுமா..

9 வயசு குழந்தை: (வயசோ கம்மி.. ஆனா தன்னை மிஞ்சி இவ எப்படிப் போகலாம்/போக முடியும்-ங்கற எண்ணத்தில் அவளை மடக்க நினைத்து) ஓஹோ.. 10th ஸ்டாண்டர்ட் போயிடுவியா நீயி.. அப்போ சரி. Geography ஸ்பெல்லிங் சொல்லு.. உனக்கு சொல்லிக் குடுத்திருப்பங்களே... கரெக்ட்டா சொன்னாத்தான் 10th ஸ்டாண்டர்ட் போக முடியும்..

நான் கூட, சொல்றதுக்கு கொஞ்ச நேரம் எடுத்துக்குவா என்று நினைத்து முடிப்பதற்குள், ரெண்டே செகண்ட் யோசனைக்குப்பின்

7 வயசு குழந்தை: அதெல்லாம் 10th-ல தான் சொல்லித்தருவங்க. கத்துக் குடுத்ததுக்கு அப்பறம் சொல்றேன் என்று போட்டாளே ஒரு போடு..
 
 
சந்திரமுகி படத்தில் முதன்முதலில் ரஜினியைப் பார்த்த வடிவேலு "அம்மாடி மனசுல நினைக்குறதெல்லாம் அப்படியே சொல்றாரு" என்கிற ரேஞ்சில் ஒரு டயலாக் சொல்லுவார்.. அந்த ரேஞ்சுக்கு நான் மிரண்டுட்டேன்... சிக்னல் விழுந்ததைக் கூட கவனிக்கலை. பின்னாடி வண்டிக்காரன் ஹாரன் அடித்தவுடன் தான் எங்கிருக்கிறோம் என்ற நினைவு வந்து வண்டியைக் கிளப்பினேன்..

எனவே ஆம்மனாட்டிஸ் வர்க்கமே.. ஒன்னும் சொல்றதுக்கில்லை... மண்டை பத்திரம்...

Comments

Popular posts from this blog

சிக்னல்/சிக்கல் ஜம்பிங்

தூறல் நின்னு போச்சு - 2

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2