ஆயிரத்தில் ஒருவன்(ர்) ரவிக்குமார்
ரவிக்குமார் எனும் கொடுங்கோலன்... இது தான் நான் இந்தக் கதைக்கு முதலில் யோசித்த தலைப்பு. ஏன் என்று நீங்களே தெரிந்து கொள்வீர்கள். அன்று: நான் PMP படிக்கலாம் என்று முடிவு செய்திருந்தேன். சுந்தரராஜன் சார் மூலமாக இங்கே பஹ்ரைனில் இருக்கும் ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தேன். சவுதியிலிருந்து ஒரு ஆசான் (mentor) வந்து வகுப்புகள் நடத்தினார். 5 வெள்ளிக்கிழமைகள்.. ஒவ்வொரு வெள்ளியும் 6-7 மணி நேரம்.. மொத்தம் 35 மணி நேர வகுப்புகள். வகுப்புகள் முடிந்தது. ஒரு மாதிரி குன்ஸாக இது தான் PMP என்று ஒரு அர்த்தம் செய்துகொண்டிருந்தேன். பரீட்சை எழுதுவது பற்றி முடிவு செய்திருக்கவில்லை. சர்டிபிகேட் வாங்கினால் இங்கே வேலைக்கு என்ன வாய்ப்புகள் இருக்கின்றன என்று பார்த்து, அத்தனை சிறப்பாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை என்றறிந்து பரீட்சை எழுதுவதை அப்போதைக்கு ஒத்தி வைத்தேன். (சில நாட்களுக்கு முன், செப்டம்பர் மாதத்தில்): நானும் கோசகனும் வாக்கிங் போகும்போது (என்னுடைய LinkedIn பக்கத்தைப் பார்த்த பிறகு), "ஜி.. நீங்களும் PMP கோர்ஸ் மட்டும் முடிச்சுட்டு பரீட்சை எழுதலை போல" என்று ஆரம்பித்தார். நானும் கோர்ஸ் மட்...