Posts

Showing posts from January, 2024

சிக்னல்/சிக்கல் ஜம்பிங் - 2

Image
முந்தைய பதிவைப் படித்துவிட்டு, உடனே போன் செய்து, "அண்ணே.. உங்களுக்கும் தப்பா ஓலை அனுப்பிட்டாங்களா.. சரி சரி ஃப்ரீயா விடுங்க.. நான் ஒரு மினிஸ்டர்.. எனக்கே இப்படித்தான் 2-3 தடவை தப்பா ஓலை அனுப்பியிருக்காங்க.. உடனே IsaTown போலீஸ் ஸ்டேஷன் போக சொல்லலாம்-னு கூப்பிட்டேன்" என்ற சவுதி மினிஸ்டர் கோசகனுக்கு நன்றிகள் பல.. நல்ல மனம் வாழ்க.. நாடு போற்ற வாழ்க..  கதைக்கு வருவோம்: அப்பறம் ஒரு அம்மணி போன் எடுத்தாங்க.. நிற்க.. வருடத்தின் முதல் நாள் 01-Jan அன்று முதல் வேலை, மனாமாவில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு பூஜை நடக்கும். மார்கழி மாதம் என்பதால் சுப்ரபாதம், திருப்பாவை திருப்பள்ளியெழுச்சி மற்றும் சில பல ஸ்லோகங்கள் சொல்லிவிட்டு, திரு ஷ்யாம்-ஜி வீட்டில் நடக்கும் புது வருட சிறப்பு பூஜை யில் கலந்துகொள்ள ஓடுவேன். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொள்ளும் பூஜை என்பதால், சீக்கிரம் போனால் தான் நிற்கவாவது இடம் கிடைக்கும். தேரில் கீதை சொன்ன கிருஷ்ணன் கோவிலுக்கு, காரில் போவது என்பது பலருக்கும் அத்தனை நல்ல அனுபவமாக இருப்பதில்லை. காரணம், பார்க்கிங். கோவில் தெருவில் பார்க்...