தூறல் நின்னு போச்சு - 2
வியாழக்கிழமை (02-May) அங்கங்க பரவலா மழை. வெள்ளிக்கிழமை கிளம்பறதைப் பத்தி முடிவெடுக்க முடியாம ஒரே சஸ்பென்ஸ். பஹ்ரைன்-ல இருந்து கிளம்பி, பாதி வழியில மாட்டிக்கிட்டா என்ன பண்றது-னு ஒரே சஸ்பென்ஸ் + த்ரில்லர். இதையெல்லாம் மீறி கிளம்பிப் போனா, அட்வென்ச்சர் + சஸ்பென்ஸ் + த்ரில்லரா இருக்குமோ.. என்ன பண்றதுன்னு ஒரே டிஸ்கஷன் ஆப் தி கன்ப்யூஸன். நானும் சேதுமாதவன் சாரும், மற்றும் சுற்றமும் நட்பும், எல்லாரும் சேர்ந்து துபாய், அபுதாபி, சவுதி-னு இருக்கற எல்லா ப்ரெண்ட்ஸ் கிட்டயும் போன் பண்ணி மழை அப்டேட் கேட்டோம். "டேய் மழை வந்திருந்தாக்கூட இவ்வளவு கஷ்டபட்டிருக்க மாட்டோம். மழை பெய்யுதா மழை பெய்யுதா-னு 5 நிமிஷதுக்கு ஒரு தடவை நீங்க பண்ற டார்ச்சர் தான்-டா தாங்க முடியலை"-னு எதிர் முனை-ல எல்லாரும் பீல் பண்ணிருப்பாங்க. வெரி டெலிகேட் பொசிசன். அதுலயும் Citi ப்ரசன்னா தான் ரொம்ப பாதிக்கபட்டார். அதனால ஒரு வெப்சைட் லின்க் அனுப்பி, "இந்த தடவை மழை வந்தா பெரிய அளவுல பாதிப்பு இருக்க கூடாதுனு எச்சகச்ச முன்னேற்பாடுகள் பண்ணியிருக்காங்க. இந்த லின்க்-ல 30 நிமிஷதுக்கு ஒரு தடவை மழை பெய்யுதா, எங்க எல்லாம் தண்ணி...