என்னோட பிளாக்-கையும் மதிச்சுப் பாக்க வந்த உங்களுக்கு நன்றி என்னடா பிரசன்னா-பிரச்சனை-ன்னு எழுதிருக்கானே, இவனுக்கு அப்படி என்ன பிரச்சனை-னு நினைக்கிறீங்களா? "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்" ரேஞ்சுக்கு பிரச்சனை இருக்கு பாஸ். ஆனா நாம எல்லாம் பிரச்னையை போர்வையா போத்திட்டு தூங்குவோம்-ல (ஒரு போர்வை வாங்க துப்பு இல்லையடா உனக்கு-னு நீங்க மனசுக்குள்ள நினைக்கறது எனக்கே சத்தமா கேக்குது. ஆனா மேட்டர் கோர்வையா வருது பாருங்க) நான் பிறக்கும் முன்னமே, ஆன் குழந்தை தான் பிறக்கும்-னு கணிச்சு பிரசன்ன வரதன் தான் பேரு-ன்னும் முடிவு பண்ணிட்டாங்க. வேற யாரு.. எங்கப்பா அம்மா தான். பட் அந்த டீலிங் எனக்குப் புடிச்சிருக்கு. எங்கம்மாவுக்கு சீமந்தம் ஏற்பாடு பண்ணப்ப தான் முதல் பிரச்சனை ஆரம்பம். எங்கப்பா கூடப்பிறந்த பெரியப்பா பெரியப்பா-னு 2 பேரு (எங்கப்பாவுக்கு 2 அண்ணன்) சீமந்த செலவை நாங்க ஏத்துக்க முடியாதுன்னு பிரச்சனை. அப்பல்லாம் எல்லாரும் கூட்டுப் பொரியல் குடும்பமா இருந்தாங்களாம். யாருன்னு கேக்கறீங்களா.. தாத்தா, பெரியப்பா 1 பெரியம்மா 1, அவங்க 3 பசங்க (லேட்டர் என்ட்ரி 2 ஆக மொத்தம் 5), பெரியப