Posts

Showing posts from August, 2017

விவே(பபிள்)கம்

Image
டுமீல் டுமீல் (இது சைலன்சர் துப்பாக்கி. அதனால் கொஞ்சம் Husky வாய்ஸில் படிக்கவும்). தேச துரோகிகள் 2 பேரை சுட்டு கொன்றுவிட்டேன். ஆனால் எப்படியோ சத்தம் கேட்டு வெளியில் ஆட்கள் வந்துவிட்டனர். சுமார் 200 பேர் என்னை சுத்துப்போட்டுவிட்டனர். நான் யாருன்னு சொல்லவே இல்லையே... நான் PK. ஓடிவந்து புர்ஜ் கலிஃபாவின் 150வது தலத்தில் இருந்து குதிக்கிறேன். அடுத்த இரண்டாவது செக்கண்டில் பபிள்கம்மில் முட்டை விட்டேன். அதிலிருந்து பாராசூட் விரிகிறது. அத்தனை பேர் சுட்டதில் தப்பித்த பாராசூட்டில், ஒரே ஒருவர் மட்டும் குறி தவறி சுட்டுவிடுகிறார். பாராசூட்டில் ஓட்டை விழுகிறது. ஆனால் ஓட்டை தானாகவே அடைபடும் டெக்னாலஜி இருப்பதால், அவர்களைப் பார்த்து சிரித்தேன். அதற்குள் ஓட்டை தானாகவே மூடிவிட்டது (என்ன சார் பைக் டயர்ல மட்டும் ஓட்டை விழுந்தா தானா அடைச்சுக்கும் டெக்னாலஜி இருக்கலாம்.. பாராசூட்டில் இருக்க கூடாதா?) பின்னணியில் லாலல்லாலாலா சர்வைவா ஒலிக்கிறது... எதிரிகளின் கண்ணில் மண்ணைத்தூவி தப்பித்து வீட்டிற்கு வந்துவிட்டேன். நுழையும்போது துபிஜுக்கு துபிஜுக்கு பிக்பாஸ் என்ற பாடலுக்கு என் மனைவி தேவரஞ்சனி குழந...

YEZDI

Image
YEZDI D250 CLASSIC IND Suzuki வண்டியை விற்ற பிறகு அப்பா வாங்கிவந்த பைக் YEZDI. ரேஷன் கார்டில் பெயர் போடாத ஒரே குறை தான். மற்றபடி Yezdi-யும் கிட்டத்தட்ட குடும்பத்தில் ஒரு ஆள். பழைய படங்களில் ரஜினியையோ கமலையோ தேடிவரும் வில்லன் கூட்டம், கண்டிப்பாக Yezdi-ல் தான் வரும். சமயங்களில் ரஜினி கமலே கூட வருவார்கள். 2 ஸ்ட்ரோக், 250 சிசி திறன் கொண்ட வண்டி. சிறப்பம்சமே கிக்கரும், சைலன்சரும் தான். எனக்கு தெரிந்து இந்தியாவின் முதல் டபுள் சைலன்சர் வண்டி என்று நினைக்கிறேன். எத்தனை பாரம் வைத்தாலும் வறுமைக் குடும்பத்தின் தலைப்பிள்ளை போல அசராது ஓடும். தனியாக கியர் ராடு கிடையாது. பொதுவாக மற்ற வண்டிகளில் இடது பக்கம் கியரும், வலது பக்கம் பிரேக்கும் கிக்கரும் (வண்டியை ஸ்டார்ட் செய்ய) இருக்கும். Yezdi-யை பொறுத்தவரையில், வலது பக்கம் பிரேக் மட்டுமே. இடது புறம் உள்ள இரும்பு ராடை சற்றே உள்ளே அழுத்தி பின்பக்கம் நகர்த்தினால் அதுவே கிக்கர். வண்டி ஸ்டார்ட் ஆன பிறகு மீண்டும் முன்பக்கம் கொண்டுவந்த பிறகு அதுவே கியர். இப்போதிருக்கும் வண்டிகள் போல் ஒரே மிதியில் ஸ்டார்ட் செய்ய முடியாது. கொஞ்சம் பம்பிங் ...

பாகுபலியின் கதறல்

Image
இன்று காலை பெரியவனுக்கு 5 வயதிற்கான தடுப்பூசி போடச் சென்றோம். இதுதான் முதல்முறை ஹெல்த் சென்டரில் (சிறிய அரசு மருத்துவமனை) அவனுக்கு தடுப்பூசி போடுகிறோம். அதனால் 7 மணிக்கே வரச்சொல்லி பதிவு செய்துவிட்டார்கள். நேற்றிரவு தூங்க 12 மணியாகிவிட்டதால் எழுப்பவே பெரும்பாடு பட்டோம் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை... கொஞ்சம் தாஜா கொஞ்சம் மிரட்டல் உருட்டல் என்று ஒருவழியாக எழுப்பி பல் தேய்த்து பாலை குடிக்கவைத்து ஹெல்த் சென்டருக்கு கிளம்பினோம். கூப்பிடு தூரம் தான் (அவரவர் சக்திக்கேற்ப சத்தமாக கூப்பிடலாம். யாரை என்பது அவரவர் விருப்பம்). அதனால் நடந்தே சென்றோம். உள்ளே செல்லும்போதே "எதுக்கு இங்க வந்திருக்கோம்" என்ற கேள்வியுடன் ஆரம்பித்தான். பின் சிலபல கேள்விகள். இதற்குள் நேராக தாய் சேய் நல மையத்திற்கு சென்றோம். பதிவு சீட்டை காட்டியவுடன், வெயிட் பண்ணுங்க. கூப்பிடுவோம் என்றார் அங்கு பணிபுரியும் இந்த ஊர் பெண்மணி. சென்றமுறை சிறியவனுக்கு தடுப்பூசி போட வந்திருந்தபோது அந்தப் பெண்மணி யாரோ பக்கத்தில் இருப்பவரிடம் பேசிக்கொண்டே அவன் பெயரையும் கூறி அழைத்திருக்கிறார். இது வெளியில் அமர்ந்திருந...